Saturday, February 27, 2010

ஹஜ்ரத் இப்னு உமர் (ரலியல்லஹு அன்ஹுமா ) அவர்கள் அறிவிக்கிறார்கள்:"தண்ணீர்பட்டால் இரும்ம்பு துருபிடித்து விடுவதுபோல் இந்த இதயங்கள் துருபிடித்து விடுகின்றன என்று ரஸூலுல்லஹி சல்லாஹு அலைஹிவசல்லம்)அவர்கள் கூறியபோது "யா ரஸூலுல்லஹ்! அத்துருவை நீக்குவது எது? எனகேட்கப்பட்டது. 'அதிஹமாக மௌத்தை நினைப்பதும்,குர்ஆன் ஓதவதுமாகும் ' என பதிலளித்தார்கள் (நூல் ;ஷூபுல் ஈமான் )

Wednesday, February 24, 2010

ஹதீஸ்



நிச்சயமாக பயபக்தி உடையவர்கள் சுவர்க்கத்திலும் நீர் அருவிகளுக்கும் அருகிலும் இருப்பார்கள் அவர்கள் இறைவன் கொடுப்பதை மகிழ்வுடன் பெற்றுக் கொள்வார்கள். நிச்சயமாக அவர்கள் இதற்கு முன்னர் உலகில் நன்மையே செய்து கொண்டிருந்தனர் . அவர்கள் இரவில் குறைந்த நேரமே .மேலும் ,சஹர் நேரத்தில் பாவமன்னிப்புக் கேட்பவர்களாக இருந்தனர்
(51 : 15,18 )

Tuesday, February 23, 2010

ஹதீஸ்

நான் என்னுடைய இர்ச்சகனை (அழைத்து )பிராத்திக்கிறேன் .நான் என்னுடைய இரச்சகனை பிராத்திபதனால் பக்கியமட்ரவனாக ஆகமாட்டேன் என்று ஆதரவு வைக்கிறேன்
(19 : 48 )

Monday, February 22, 2010

தற்காப்புகலைகள்

தலைப்பு கொஞ்சம் வித்தியாசம்தான், ஆனால் உள்ளடக்கம் எப்படின்னு நீங்க கருத்து சொன்னதான் தெரியும், தற்காப்பை பற்றி எழுதும்போது சிலருக்கு கராத்தே, குங்-பு மற்றும் இதர கலைகள் தான் நினைவுக்கு வரும், ஆனால் இங்கு எழுத போவது அதைப்பற்றி அல்ல,

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்னு சொல்லுவாங்க, இறைவனின் உதவியால் நீங்கள் வைத்திருக்கும் பொருள் மற்றும் உங்களை சுற்றி உள்ள பொருளை வைத்தே, உங்களை நீங்கள் காப்பற்றி கொள்ளலாம்,
அது என்ன பொருள்,

•பேனா

•சாவி •பல்குத்தும் குச்சி

•மண்
•மிளகாய்த்தூள்

•ஜவ்வரிசி
இதைபோல் ஏராளமான பொருட்கள் இருந்தாலும் இங்கு சிலவற்றை மட்டும் கொடுத்துள்ளேன்,
சரி மேலே குறிப்பிட்டுள்ள பொருளை எப்படி கையாளுவது என கேள்வி எழுகிறதா, முதலில்

பேனா


பேனாவை படத்தில் சொல்லப்பட்டவாறு பிடித்து கொண்டு , உங்களை தாக்க வரும்போது , ஒருகையை உங்களுடைய சப்போர்ட்டுக்கு வைத்துக்கொண்டு ,இன்னொரு கையால் எதிராளியை தாக்க வேண்டும்.

சாவி

சாவியை படத்தில் சொன்னவாறும் பிடிக்கலாம் அல்லது உங்களுடைய வசதிக்கு ஏற்றாற்போல் வைத்துகொண்டு கையாளலாம்.


பல்குத்தும் குச்சி


இவை பெரும்பாலனரிடம் (குறிப்பாக பெண்களிடம்) இருக்கும் , இது ஒரு அருமையான ஆயுதமென்றுதான் சொல்லவேண்டும் ஏனெனில் இதை வெளியில் கொண்டு செல்வது எளிது, இவையை ஒன்றாகவும் பயன்படுத்தலாம், நிறையவும் சேர்த்தும் பயன்படுத்தலாம். இது பெரும்பாலான ஆண்களிடம் இருக்காது, தேவைபட்டால் எடுத்தும் செல்லலாம்
மண்

இதைப்பற்றி உங்களுக்கு நான் சொல்லித்தர தேவை இல்லை, இருந்தாலும் நான் எப்படி கையாண்டேன் என்பதை உங்களுக்கு சொல்லித்தருகிறேன், யாரேனும் உங்களை நோக்கி வரும்போது, மண்ணிருக்கும் இடத்தை நோக்கி அவன் யுகிப்பதற்குள் சென்று கையில் மண்ணை எடுத்து தூவலாம், காலால் மண்ணை கண்ணை நோக்கி எத்துவது நல்லது. இவை இரண்டில் நான் காலைத்தான் உபயோகித்தேன்.
மிளகாய்த்தூள்

இது முக்கியமாக பெண்களுக்கு உதவும், இதை படிக்கும்போது கொஞ்சம் (ச்சில்லி)த்தனமாதான் இருக்கும், ஆனால் இது உதவுவது போல் எதுவும் உதவாது, சரி எப்படி உபயோகிக்கலாம்? இதை வெறும் தூளாக கொண்டு சென்று தூவ முடியாது, ஆதலால் உங்களுகெல்லாம் தெரியும் விளையாட்டு தண்ணி துப்பாக்கி(Toys Water Gun), அதில் மிளகாய்த்தூள் கரைத்த தண்ணீரை நிரப்பி ஹான்ட் பாக்கில் வைத்துக்கொள்ளலாம், தேவைப்படும்போது சும்மா கண்ணுன்னு அடிக்கலாம்
ஜவ்வரிசி

பெயரைக்கேட்டாலே ஜவ்வுனு ஓட்டுற மாதிரி இல்லே, இதை பொது இடங்களில் உபயோகிக்க முடியாவிட்டாலும், இதன் பலன் தெரிந்தவர்கள், கண்டிப்பாக இதை நாடாமல் இருக்க மாட்டார்கள், இது உங்களுடைய வீட்டின் முன் யாரேனும் தொல்லை கொடுத்தால் பயன்படுத்தலாம், எப்படி அது?

ஜவ்வரிசியை அரை வேக்காடாக வேக வைத்து கொள்ள வேண்டும், எப்போதும் சூடு இருக்கிறதா என உறுதிப்படுத்திக் கொண்டு , யாரேனும் வீட்டிற்கு முன் ரொம்ப தொல்லை கொடுத்தால் அதை அகப்பையில் எடுத்து எறிந்தால் போதும் அவ்வளவுத்தான் ஜவ்வுனு ஒட்டிக்கொண்டு எடுக்கும்போது தோளோடுதான் வரும்.

மேலே இவை அனைத்தையும் இக்கட்டுரையின் மூலம் சொன்னதின் நோக்கம், இப்படியும் தற்காத்து கொள்ளலாம் என்பதற்காக தான். இதை விட உங்களுக்கும் தெரிந்திருக்கலாம், அப்படியானால் எனக்கும் சொல்லித்தாங்களேன்.

Wednesday, February 17, 2010

ஹைத்தியில் இஸ்ரேல் உடல் உறுப்புகளை திருடியது

ஹைத்தியில் இஸ்ரேல் ராணுவம் உடல் உறுப்புகளை திருடியது பற்றிய குற்றச்சாட்டை விசாரிக்க வேண்டும் என்று கோரிய பிரிட்டீஷ் பிரபுக்கள் சபையில் லிபரல் டெமோக்ரேடிக் பார்டியின் செய்தித் தொடர்பாளர் பாரணஸ் ஜெனி அந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டார்.


ஹைத்தியில் சமீபத்தில் ஏற்பட்ட பூகம்பத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உடல் உறுப்புகளை அங்கு சென்ற இஸ்ரேலிய ராணுவம் திருடுவதாக கூறப்படும் குற்றச்சாட்டைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று ஜூவிஸ் க்ரோணிகிள் என்ற பத்திரிகைக்கு பாரணஸ் அளித்த பேட்டியில் கோரியிருந்தார்.


யூ ட்யூபில் பரவலாக பரப்பப்படும் இந்தக் குற்றச்சாட்டைக் குறித்து இஸ்ரேல் ராணுவமும், இஸ்ரேல் மருத்துவக் குழுவும் சுதந்திரமான விசாரணைக்கு தயாராகவேண்டும் என்றும், ஹைத்தியில் தங்களுடைய குழுவினர் மீதான சந்தேகத்தை போக்கவேண்டும் என்றும் பாரணஸ் கோரியிருந்தார்.


இக்குற்றச்சாட்டு ஏற்றுக்கொள்ளவியலாததும் கோபத்தை ஏற்படுத்தக் கூடியதும் என சுட்டிக்காட்டி பாரணஸை லிபரல் டெமோக்ரேடிக் பார்டி தலைவர் நிக் க்ளக் கட்சியிலிருந்து வெளியேற்றியுள்ளார்.

Friday, February 5, 2010

அமைதிக்கான நோபல் பரிசுக்கு 'இன்டர்நெட்' பரிந்துரை!

2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்டோரின் பட்டியலில் இன்டர்நெட்டும் சேர்க்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த பரிசைப் பெறப் போவது யார் என்ற ஆர்வம் அதிகரித்துள்ளது.

2010ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு இன்டர் நெட் தவிர மேலும் 2 பேர் போட்டியில் உள்ளனர். இவர்களில் ஒருவர் சீனாவைச் சேர்ந்த லியூ சியோபோ. இவர் சீன அரசால் சமீபத்தில் சிறையில் அடைக்கப்பட்ட மனித ஆர்வலர்.

இன்னொருவர் ரஷ்யாவைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலரான ஸ்வெத்லானா கன்னுஷ்கினா மற்றும் அவரது மெமோரியல் என்ற தொண்டு நிறுவனம்.

வைர்ட் (Wired) இதழின் இத்தாலிப் பதி்ப்புதான் இன்டர்நெட்டுக்கு அமைதிக்கான நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என்ற பரிந்துரையை முதலில் வைத்தது. தகவல் தொடர்பின் மூலமாக பேச்சுவார்த்தை, விவாதங்கள், ஒருமித்த கருத்துக்களை எட்டுவதற்கு இன்டர்நெட் பேருதவியாக இருப்பதால் இதற்கு அமைதிக்கான நோபல் பரிசு தர வேண்டும் என வைர்ட் இதழ் பரிந்துரைத்துள்ளது.

கடந்த ஆண்டு நவம்பர் 20ம் தேதி தனது இதழில் 'Wired Backs Internet for Nobel Peace Prize' என்ற தலைப்பில் இதுதொடர்பாக விரிவான கட்டுரை ஒன்றையும் அது பிரசுரித்திருந்தது.

அதில், இன்டர்நெட், செய்திகளைப் பரப்புவதிலும், விளையாட்டுக்களுக்கும் மட்டும் அல்லாமல், உலக அமைதிக்கான சக்தி வாய்ந்த மீடியமாகவும் விளங்குகிறது.

உலக மக்களிடையே நல்லதையும் விளைவிக்க இன்டர்நெட்டால் முடியும். தீயதையும் செய்ய முடியும். இன்டர்நெட் மூலம் ஒரு செய்தி இன்று உலக சமுதாயத்திடம் வெகு விரைவாக சென்றடைகிறது. இதை நாம் அமைதியை மக்கள் மனதில் தூவ, உலகில் நிலவச் செய்ய பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலக மக்களிடையே நிலவும் துவேஷங்களைப் போக்க இன்டர்நெட் மிகப் பெரிய சக்தியாக விளங்கும்.

ஈராக்கில் நடந்த தேர்தலின்போது இன்டர்நெட்டின் பங்கு மிகப் பெரிதாக இருந்தது. உலக மக்களிடையே ஈராக் குறித்து பெரும் நம்பிக்கை ஏற்பட இன்டர்நெட்தான் உதவியது என்று கூறியிருந்தது.

அந்தக் கட்டுரைக்குப் பின் தற்போது அதிகாரப்பூர்வமாக அமைதிக்கான நோபல் பரிசுக்காக இன்டர்நெட் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

வருகிற அக்டோபர் மாதம் அமைதிக்கான நோபல் பரிசை வெல்லப் போவது யார் என்று தெரிந்து விடும்.