Monday, May 31, 2010

மாணவ,மாணவிகளுக்கு ஊக்கம் தரும் அதிரை பைத்துல்மால்

அதிரை பைத்துல்மால் 12 -வது திருகுர்ஆன் மாநாடு முன்று நாட்கள் சிறப்பாக நடந்து முடிந்தது.
நேற்றைய நடந்த திருகுர்ஆன் மாநாடு நிகழ்ச்சியில் நமதூர் காதிர் முஹைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் SSLC தேர்வில் 482 மதிப்பெண்கள் பெற்று. அதிரை பள்ளிகளிலேயே முதலிடம் பெற்ற கரையூர் தெருவைச் சேர்ந்த மாணவி R. இந்துமதி மாணவிக்கு நமதூர் மாஜ்தா ஜுவல்லரி சார்பில் பைத்துல்மால் நிர்வாகிகளில் ஒருவரான ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை மாநாடு மேடையில் வழங்கி சிறப்பித்தார்கள்.
இது மேலும் நமதூர் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஊக்கம் தரும் செயலாக அமைந்துள்ளது .
அதிரை பைத்துல்மால் நமதூர் மக்களுக்காக பல்வேறு உதவிகளை செயதுவருகிறது.மேலும் அதிரை பைத்துல்மாலின் வெற்றி பணிகள் தொடர அல்லாஹுதலாவிடம்துஆ செய்கிறோம்.
தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு பரிசு அளித்த
ஜனாப்.O.K.M.சிப்ஹதுல்லாஹ் அவர்களுக்கு ADIRAIDAILYNEWS சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
Live TV : Ustream

Saturday, May 29, 2010

திருக்குர்ஆன் மாநாட்டின் மூன்றாம் நாள்:சிறப்பு நிகழ்ச்சிகள்

அதிரை பைதுல்மால் நடத்தும் மாபெரும் 12 - வது திருகுர்ஆன் மாநாடு அல்லாஹ்வின் துணைக்கொண்டு வெற்றிகரமாக நடந்து வருகிறது .

திருக்குர்ஆன் மாநாட்டில் மூன்றாம் நாள்:

நாளை ஞாயிற்றுகிழமை காலை 10 .௦௦00 மணி முதல் மாலை 4 .30 மணி வரை இஸ்லாமிய அறிவு போட்டிகள் நடைபெறுகிறது.

அஸர் தொழுகைக்குபின் மாநாட்டில் சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெரும்.

திருகுர்ஆன் மாநாடிற்கு சிறப்பு விருந்தினராக முனைவர் ஜனாப் அப்துல்லாஹ் (பெரியார்தாசன்) கலந்துகொண்டு.
"இறைவனின் அருட்கொடை இனிய இஸ்லாம்" என்ற தலைப்பில் பேசுகிறார்கள்.எனவே நமதூரில் உள்ள பெரியோர்கள், சகோதர,சகோதரிகள், சிறுவர்கள்அனைவரும் கலந்துகொண்டு மாநாடிற்காண பயனைஅடைந்து கொள்ளுங்கள் .
திருகுர்ஆன் மாநாட்டின்நிகழ்ச்சிகளை இணையதளத்தில்நேரடிஒளிபரப்பு செயப்படுகிறது.

Friday, May 28, 2010

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள்

முதன் முதலாக பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் அனைவருமே மிக மகிழ்ச்சியாக வகுப்புகளுக்கு செல்வதில்லை. பல குழந்தைகள் ஒரு சில நாட்களுக்கு பள்ளி செல்லும் போது பயம் கொண்டர்வர்களாகவே செல்கிறார்கள். குறிப்பாக சில குழந்தைகள் ஆசிரியர்களைப் பார்த்து பயம் கொண்டு, அதனால் பள்ளிக்கு செல்ல பயம் கொள்கிறார்கள்.பெற்றோர்கள் குழந்தைகளை வீட்டில் வளர்க்கும்போது சாப்பாடு ஊட்டும் போது அல்லது தங்களுக்கு குழந்தைகளை பணிய வைக்க வேண்டும் என்று நினைக்கும் போது அக்கம் பக்கத்தில் உள்ள யாரையாவது காட்டியோ, அல்லது குறிப்பிட்டு சொல்லியே பயமுறுத்தி வளர்ப்பது, குழந்தைகளை பிறரோடு சேர்ந்து வெளியிடங்களில் விளையாட அனுமதிக்காமல் வளர்ப்பது, பூச்சாண்டி வருகிறார் என்று கூறி வித்தியாசமாக பிம்பம் ஒன்றை குழந்தைகள் மனதில் வளர்ப்பது ஆகியவை குழந்தைகளின் ஆசிரியர் பற்றிய பயத்திற்கு அடிப்படை காரணங்களாகும்.

சில பெற்றோர்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் ஆசிரியர் சொல்லும் படி நடந்து கொள்ள வேண்டும், இல்லையெனில் அடித்து விடுவார் என்று எச்சரிக்கையாக கூறி குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவர். இவ்வாறு கூறுவது ஆசிரியரை சந்திக்கும் முன்பே அவரைப் பற்றிய பய உணர்வை ஏற்படுத்த வழி வகுக்கும். சில ஆசிரியர்கள் முதல் நாள் பள்ளி திறந்த உடனேயே கையில் குச்சியும் முகத்தில் கடுகடுப்புமாக குழந்தைகள் முன் பூதம் போன்று தோன்றுவர். இத்தகைய ஆசிரியர்கள் இறுகிய மனம் கொண்ட குழந்தைகளின் மனதில் பள்ளியிறுதி காலம் வரைக்குமான பயத்தை உண்டாக்கி விடுவார்கள்.

சில குழந்தைகளுக்கு செனோ போபியா என்னும் புதியவர்கள் பற்றிய காரணமில்லாத, புரியாத பயம் இருக்கலாம். இரண்டு வயதுக்கு முன்பாக தாய் குழந்தையை பிரிந்து வேலைக்கு செல்வது, அம்மா வீட்டில் வளர்ப்பது, பச்சிளம் குழந்தையாக இருந்தபோது சிறிது நேரம் அழவிட்டு குழந்தையின் பசியாற்ற பால் ஊட்டுவது ஆகியவையே புதியவர்களை பார்த்து காரணமின்றி பயம் கொள்ள வைக்கின்றன. இத்தகைய குழந்தைகளை வளர்ப்பு முறையை மாற்றி கவனத்துடன் வளர்த்தால் புதியவர்கள் பற்றிய பயமின்றி வளர்க்கலாம்.

ஓர் குழந்தை தன் ஆசிரியருக்கு பூங்கொத்து ஒன்றை அன்பளிப்பாக கொடுக்க வேண்டும் என்று அடம்பிடித்து வாங்கிச் சென்றது. வகுப்பறைக்கு சென்றவுடன் நேராக ஆசிரியரிடம் சென்று பூங்கொத்தை கொடுத்தது. வகுப்பாசிரியர் குழந்தையை வாழ்த்தி பூங்கொத்தை பெற்றுக் கொள்ளாமல் “நீயே வைத்துக்கொள்” என்று கூறினார்.

குழந்தையின் முகம் வாடிவிட்டது. பேசாமல் பூங்கொத்தை தன் பைக்குள் வைத்துக்கொண்டு தன் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டது. மாலை வீட்டுக்கு வரும் நேரத்தில் குழந்தையின் தந்தை அக்குழந்தையை நேராக பள்ளி முதல்வரின் அறைக்கு அழைத்துச் சென்று அப்பூங்கொத்தை பள்ளி முதல்வருக்கு அளிக்கச் செய்தார். முதல்வர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இறைவன் உன்னை ஆசிர்வதிக்கட்டும் குழந்தாய்” என்று கூறி பெற்றுக் கொண்டார். அக்குழந்தை “நன்றி என்று கூறியது.அக்குழந்தை மகிழ்ச்சியுடன் நன்றி என்று கூறுவது ஆசிரியர் கையில் தான் உள்ளது.

இறைச்செய்தியின் ஆரம்பம்

இறைச்செய்தியின் ஆரம்பம்

செயல்கள் அனைத்தும் எண்ணங்களைப் பொருத்தே அமைகின்றன. ஒவ்வொருவருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கிறது. ஒருவரின் ஹிஜ்ரத் (துறத்தல்) உலகத்தைக் குறிக்கோளாகக் கொண்டிருந்தால் அதையே அவர் அடைவார். ஒரு பெண்ணை நோக்கமாகக் கொண்டால் அவளை மணப்பார். எனவே, ஒருவரின் ஹிஜ்ரத் எதை நோக்கமாகக் கொண்டதோ அதுவாகவே அமையும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என உமர் இப்னு கத்தாப்(ரலி) மேடையிலிருந்து அறிவித்தார்கள் .

ஹாரிஸ் இப்னு ஹிஷாம்(ரலி) இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், 'இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது?' எனக் கேட்டதற்கு, 'சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார். மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன்' என்று இறைத்தூதர்(ஸல்) கூறினார்கள்' என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார். மேலும்,
"கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹீ (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும்" என ஆயிஷா(ரலி) கூறினார்
.

Volume:1 Book:1 (தொடரும)


Wednesday, May 26, 2010

இமாம்ஷாபி பள்ளியில்முதல் முன்று இடம் பிடித்த மாணவ., மாணவிகள்

இமாம்ஷாபி பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ,மாணவிகள் :
S.பாத்திமா 416 மதிப்பெண் பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:

2வது இடம் பிடித்த மாணவி A.ஷபீகா 402 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:

3வதுஇடம் பிடித்தமாணவன் A.முகமதுசலீம் 395 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்.

முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்:
R.இந்துமதி 482 மதிப்பெண் பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:

2வது இடம் பிடித்த மாணவி A.சுமையா 473 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:

3வதுஇடம்பிடித்தமாணவி M.அப்ரின்பானு 466 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.

பத்தாம் வகுப்பு பொதுதேர்வில் தேர்ச்சி பெற்ற அணைத்து மாணவ மாணவிகளுக்கும் ADIRAI DAILY NEWS சார்பாகவாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம் இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்

Tuesday, May 25, 2010

நாளை பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவு வெளியிடப்படுகிறது

தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ள கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் பார்க்கவும்
http://www.pallikalvi.in/
www.tnresults.nic.in
http://www.dge1.nic.in
http://www.chennaionline.com/.com

நமதூர் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளும் தேர்வில் வெற்றிபெற ADIRAI DAILY NEWS சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துகொள்கிறோம்


இப்படிக்கு
அதிரை வாசகர் .......

Friday, May 21, 2010

மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

மனித நேய மக்கள் கட்சி நடத்தும் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்
நாள் :ஞாயிற்றுகிழமை நேரம் :மாலை 6 .௦௦00 மணி
இடம் :அதிரை பேருந்து நிலையம்
தலைமை : J .கலந்தர் அவர்கள் ,மாவட்ட செயலாளர் ம.ம.க.
வரவேற்புரை : M .S .S . அப்துல்காதர் அவர்கள், செயற்கூழு உறுப்பினர் , அதிரை.
முன்னிலை:M. O . செய்யது அவர்கள், மாவட்ட நகர ,பொருளாளர்,
ம.ம.க.
M .சாகுல்ஹமீத் அவர்கள், மாவட்ட துணைச் செயலாளர் ம.ம.க.
J . ஜியாவுதீன் அவர்கள், மாவட்ட செயலாளர், த.மு.மு.க.
M .அஷ்ரப் அலி அவர்கள்,துபைமண்டல நிர்வாகி,
B .உமர்தம்பி அவர்கள்,நகர தலைவர், த.மு.மு.க
M .தைய்யுப் அவர்கள்,நகரசெயலாளர்,த.மு.மு.க
N .நிஜாம் அவர்கள்,நகர இளைஞர் அணி செயலாளர்,த.மு.மு.க.
A.சாதிக் பாட்சா அவர்கள்,துணை தலைவர்,த.மு.மு.க.
A . தைவ்பீக் அவர்கள்,நகர பொருளாளர் த.மு.மு.க.
S .சாகுல்ஹமீத்அவர்கள், நகர துணை தலைவர், த.மு.மு.க.
சிறப்புரை:
கோவை S . செய்யது அவர்கள், மாநில செயற்கூழு உறுப்பினர் , ம.ம.க.
சகோ. மண்ணை .P .செல்லச்சாமி அவர்கள்,திருவாரூர் மாவட்ட மனித நேய தொழிலாளர் அணி செயலாளர்.
நன்றிவுரை :
S .S .சேக்காதி அவர்கள்,நகர செயலாளர்.ம.ம.க.
இங்ஙனம்.
மனித நேய மக்கள் கட்சி அதிரை

Thursday, May 20, 2010

அதிரை AFFA வெற்றி ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

அதிரையில் AFFA நடத்தும் 7 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்து வருகிறது இன்றைய அரை இறுதி ஆட்டத்தில் நமதூர் AFFA மற்றும் பட்டுகோட்டை அணியினர்மோதினர்.
இந்த ஆட்டத்தில் நமதூர் AFFAஅணியினர் 3 -2 கோல் கணக்கில் வெற்றி பெற்றனர் .
நமதூர் AFFAஅணியின் அஷ்ரப் ஹாட்ரிக் கோல் அடித்து வெற்றிக்கு உறுதுனையாக இருந்தார்

மற்றொரு ஆட்டத்தில் சென்னை மற்றும் தஞ்சாவூர் அணியினர் மோதினர்.
இந்த ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியினர் 1 -0 கோல் கணக்கில்வெற்றி பெற்றனர்.
நாளை 21ஆம் தேதி நடக்கும் இறுதி ஆட்டத்தில் நமதூர் AFFA மற்றும் தஞ்சாவூர் அணி கலந்து கொள்கிறது.

Tuesday, May 18, 2010

அதிரை பைத்துல்மால் செய்த சேவைத்திட்டங்கள்

அதிரை பைத்துல்மால் அதிரை நகரத்தின் அனைத்து தரத்து மக்களுக்கும் சேவையை அல்லாஹுக்காக ஆற்றி வருகிறது.அதிரை நகரின்நல்லுள்ளம் கொண்ட வணிக பெருமக்களும் ,வெளிநாடுகளில் வாழும் உள்ளூர் மற்றும் வெளியூர் சகோதர்களும் மனம்முவந்து வழங்கியஜகாத் ,பித்ரா ,சதக்கா,நன்கோடை நிதி உதவிகள் மூலம் தான்நிறைவேற்றரபட்டுள்ளன . இந்த ஆண்டு கடந்தஏப்ரல் 2008 முதல் சென்ற ஆண்டு ஜூலை2009 வரை ஏழை ,ஏழிய மக்களின் நலத் திட்டங்களுக்கான செலவினங்களின் பட்டியல் வெளியீடப்பட்டுஉள்ளது .
அதிரை பைத்துல்மால் செய்த சேவைத்திட்டங்கள் ஏப்ரல் 2008 முதல் ஜூலை வரை செலவினங்கள்
1.வட்டியில்லாத கடன் திட்டம் மற்றும் சிறு தொழில் கடன் திட்டம் பயனாளிகள் 32 தொகை ரூபாய்3,21 ,950
2 .மாதாந்திர உதவி பென்ஷன் தொகை திட்டம் பயனாளிகள் 82 தொகை ரூபாய்2,08 ,500
3 .மருத்துவஉதவி திட்டம் பயனாளிகள் 12
4 .ஏழை சிறுவர்கள் ஹத்னா சுன்னத் உதவி திட்டம் பயனாளிகள் 22
5 .ஏழைக்குமர் திருமண உதவி திட்டம் பயனாளிகள் 4
6 .ஏழை,எளிய மாணவ,மாணவியர்கல்வி -2008 பயனாளிகள் 300,தொகை ரூ1,80 ,000.௦௦௦
கட்டணம் மற்றும் சீருடை திட்டம் -2009பயனாளிகள் 300 , தொகை ரூ1 ,83 ,295 .
7 .இலவச ஆம்புலன்ஸ் உதவி பயனாளிகள் 3 , தொகை ரூ 2 ,௦௦௦௦௦௦ 000 .
8.லாரல் பள்ளியில்படிக்கும்அதிரைமாணவர்களுக்கு ஜூம்ஆ தொழுகை ஏற்பாடு செலவு பயனாளிகள் 300 ,தொகை ரூ 65 ,000 .
9 .அதிரை பைத்துல்மால் அலுவலகத்தில் பெண்கள் தராவிஹ் தொழுகை ஏற்பாடு செலவு பயனாளிகள் 75 ,தொகை ரூ 15 ,௦௦௦௦௦௦௦௦௦000 .
10 மேலத்தெரு பாக்கியத்துஸ் ஸாலிஹாத் மதரஸா உஸ்தாது சம்பளம் பயனாளிகள் 1 தொகை ரூ 14000 .
11 .பித்ரா அரிசி விநியோகம் பயனாளிகள் 2000 ,தொகைரூ 1 , 37 ,350 .
12 .புதிய ஆம்புலன்ஸ் வாங்கியது தொகைரூ 3 ,00 , 000 .
13 .குளிர் சாதன சவப் பெட்டி வாங்கியது தொகைரூ 55 , 000 .
மொத்தம் பயனாளிகள் 3141 . தொகைரூ 15 , 62 ,372 .
இத்திட்டங்களுக்குரிய நிதியை நமதூர் ,வெளியூர் மற்றும் வெளிநாடு வாழ் சகோதரர்கள் வணிக ருமக்கள் வழங்கினார்கள்.குர்பாநித் திட்டம் மூலம் கிடைத்த வருமானமும் மேற்கண்ட திட்டங்களுக்காகப் பயன்படுத்தபட்டுள்ளது. குர்பாநித் திட்டம் மூலம் கிடைத்த இறைச்சி ஏழை ஏளிய மக்களுக்கு விநியோகம்செயப்பட்டுள்ளது.
http://www.adiraibaithulmal.org/

Sunday, May 16, 2010

அதிரையில் AFFA நடத்தும் 7 ஆம்ஆண்டு கால்பந்து போட்டி

அதிரையில் AFFA நடத்தும் 7 ஆம் ஆண்டு கால்பந்து போட்டி நடந்து வருகிறது இன்றைய ஆட்டத்தில் புதுக்கோட்டை மற்றும் கோட்டையூர் அணியினர்மோதினர்.
இந்த ஆட்டத்தில் புதுக்கோட்டைஅணியினர் வெற்றி பெற்றனர் .
நேட்றையஆட்டத்தில் நமதூர் AFFA மற்றும் திருச்சி அணியினர் மோதினர்.அந்த ஆட்டத்தில் நமதூர் AFFA அணியினர் 5- 2 கோல் கணக்கில்
வெற்றி பெற்றனர்.
நமதூர்AFFA அணியினர் 20 ஆம் தேதி நடக்கும் அரை இறுதி ஆட்டத்தில் கலந்து கொள்கிறது.

Saturday, May 15, 2010

அதிரை மாணவி முதலிடம்.........

சென்னை உள்ள மியாசிமெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் பிளஸ்2 பொதுதேர்வில் அதிரை புதுமனை தெரு சார்ந்த ஹாஜி அப்துல்காதர் அவர்களின் மகள் ஏ.கே .ராபியா1108 மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார்.
இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்.

Friday, May 14, 2010

அதிரைமாணவ மாணவிககளுக்கு கல்வி ஊக்க கடிதம்

முதல் இரண்டு முன்றாம் இடம்பிடித்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் அதிரை மக்கள் சார்பாக வாழ்த்துக்கள் மற்றும் இதுப்போல் வரும்காலத்தில் சாதனை படைக்க அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ..........



தோல்வி பெற்ற மாணவ மாணவிகள் மனதை தளரவிடாமல் வெற்றி பெற்று தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் இதுவே நமது லட்சியம் ................தோல்வியே வெற்றிக்கு முதல் படி .

..

காதிர் முகைதின் பள்ளியில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்:

காதிர் முகைதின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவிகள்:
எ.ஜெ.ஆய்ஷா1065 பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்:2வது இடம் பிடித்த மாணவி சர்மிள1015 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:3வதுஇடம்பிடித்தமாணவி எஸ்.ரோஜா1011 மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்.

இமாம்ஷாபி பள்ளியில்முன்று இடம் பிடித்த மாணவமாணவிகள்

இமாம்ஷாபி பள்ளியில் பிளஸ்2 பொதுதேர்வில் முதல் முன்று இடம் பிடித்த மாணவ., மாணவிகள் :
புதுமனை தெரு சார்ந்த மீரஷா மரஐகான் அவர்களின் செல்வா புதல்வி எம்.முபீனா 998பெற்று முதல் இடம்பெற்று உள்ளார்: 2வது இடம் பிடித்த மாணவி சாவ்தா981 மதிப்பெண் பெற்றுஉள்ளார்:3வதுஇடம்பிடித்தமாணவன் நவாஸ் 950மதிப்பெண் பெற்றுஉள்ளார்.
இவர்கள்மேலும்பலவெற்றிகளைபெறுவதற்குஅல்லாஹ்விடம்'துஆ' செய்கிறோம்.

Thursday, May 13, 2010

பொதுதேர்வு முடிவுகள்அறிய

பிளஸ்2 பொதுதேர்வு முடிவுகள் மதிப்பெண் பட்டியலுடன் அறிய இனையதளங்கள்
http://www.tnresults.nic.in/
http://www.pallikalvi.com/
http://www.malaimalar.com/
http://www.dge1.tn.nic.in/


Wednesday, May 12, 2010

அன்போடு கேட்டுகொள்கிறோம்.................

நாளை பிளஸ்2 பொதுதேர்வு முடிவுகள் வெளியாகிறது நமதூர்பள்ளிகல்லில் படிக்கும் அணைத்து மாணவ., மாணவியர்களும் நல்ல மதிப்பெண் பெற அல்லாஹ்விடம்'துஆ' செய்யுமாறு அன்போடு கேட்டுகொள்கிறோம்!
இப்படிக்கு :ADIRAIDAILYNEWSTEAM