Thursday, August 19, 2010

நோன்பு: ஸஹீஹுல் புகாரி

1891.தல்ஹா இப்னு உபைதில்லாஹ்(ரலி) அறிவித்தார்.
ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!" என்று பதிலளித்தார்கள். அவர் 'அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், 'சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!" என்றோ 'இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!" என்றோ கூறினார்கள்

Saturday, August 14, 2010

அய்டாவின் இப்தார் அழைபிதழ்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17-08-2010செவ்வாய்க்கிழமை, அன்று 6.30மணிக்கு, ஜித்தா ஷரஃபியா லக்கி தர்பார் ரெஸ்டாரென்டில், அய்டாவின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


அது சமயம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.



அய்டா

Monday, August 9, 2010

குழந்தைகள் பார்வையை பாதுகாக்க

CORRECT VISUAL HABITS FOR CHILDREN

படிக்கும் போதும் , டிவி பார்க்கும் போதும் நேராக உட்கார்ந்தே பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க படுத்தோ பார்க்க கூடாது .

டிவி , கணினி பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான கோணத்தில் பார்க்க கூடாது .

படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரை நொடி கண்களை மூடி ஓய்வு எடுக்கவேண்டும் .

சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில் கருவிழி தசைகள் சோர்வடையும் . பொதுவாக படிப்பதற்கு குழல் விளக்கை விட குண்டு பல்பு சிறந்தது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .

அதி காலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது கண் தசைகள் வலுவிழந்து போகும். ( early to bed, early to rise)

வாகனத்தில் போகும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு அதிகபடியான அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )

Saturday, August 7, 2010

நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?

சுயமரியாதை

மனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.

இன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.

நாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவதில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்
. (திருக்குர்ஆன் 17:70)

''மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல! ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல! மக்காவுடைய புனிதத்தைப்போல!

நான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா? இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.

வயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.

அடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; 'ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல! பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா? ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே! இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்' என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.

பிச்சை எடுத்தல்:

நோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.

நீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.

இப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும்இ பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.

இவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா?. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே! நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது! வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை?. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.

ஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.

இதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.

எந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாதுஇ எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் மரண அறிவிப்பு c m p லைணை சார்ந்த m u உமர்தம்பி (சிங்கம்) அவர்கள் அதிரையில் இன்று காலை 6.00 அளவில் காலமாகிவிட்டார்கள். வர்களின் மகன்களான முஹம்மது மொய்தீன் ,அஷ்ரப் ,அப்துல்ஜப்பார் ,முஹம்மது இப்ராகிம் .

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.


Friday, August 6, 2010

வானத்தில் கழுதை

வானத்தில் கழுதை! கழுதை பறக்குமா? அட பைத்தியம் என்று நீங்கள் நினைக்க கூடும். இந்த அதிசயமும் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. அதுவும் விளம்பரம் பெறுவதற்காக பாராசூட்டில் பறக்க வைத்து பீதியை கிளப்பியுள்ளார்கள்.

மனிதன் விளம்பரம் பெற என்னமோ செய்கிறான். இறுதியில் கழுதையையும் பிடித்து விளம்பரப் படுத்துகிறான். இனி வரும் காலத்தில் எதை எதை பிடித்து விளம்பரம் செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை.

ரஷ்யாவின் கடற்கரை ஒன்றில் மோட்டார் மூலம் இயக்கப்படும் பாராசூட்டில் கழுதை விண்ணில் பறக்க விடப்பட்டது. இது விடுமுறையைக் கழிக்க சென்றவர்களிடையே பரபரப்பையும் பீதியையும் உண்டு பண்ணியது.

பாராசூட்டில் கழுதை கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் வேகமாகச் செல்லுமொரு படகில் இணைக்கப்பட்டு பாராசூட் பறக்க விடப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு கழுதை கனைத்தும் அது பறக்க விடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.

இந்த முரட்டுத்தனமான கொடூர செயலைக் கண்டு கடற்கரையில் இருந்த குழந்தைகள் பலர் அழுததாகவும் , கடுமையான சோதனைக்குப் பின்னர் கழுதை கீழே இறக்கப்பட்ட போது பாதி உயிருடன் இருந்ததாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.

விலங்கினங்களை சித்திரவதை செய்வது ரஷ்யாவில் அதிகம் நடக்கும் ஒன்று. சிறிதும் யோசிக்காமல் விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுவதாக பிரித்தானிய சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் ஒன்றே விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தீவிரமான விசாரணைகளையும் பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர் .

நன்றி ; எம்.ரிஷான் ஷெரீப்

Thursday, August 5, 2010

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி: முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌ வ‌ருடாந்திர ச‌ந்திப்பு

திருச்சி ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி, முன்னாள் மாண‌வ‌ர் ச‌ங்க‌த்தின் வ‌ருடாந்திர ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் ஆக‌ஸ்ட் மாதம் 15-ம் தேதி க‌ல்லூரி வ‌ளாக‌த்தில் ந‌டைபெறுவ‌து வ‌ழ‌க்க‌ம்.

2010-11 ஆம் க‌ல்வி ஆண்டிற்கான க‌ல்லூரியின் அறுப‌தாம் ஆண்டு விழா - "வைர‌ விழா" வாக‌ கொண்டாட‌ப்ப‌ட உள்ளது. இதையொட்டி முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி 26. 01. 2011-ல் ந‌ட‌த்த‌ப்ப‌டும் என‌ க‌ல்லூரி முத‌ல்வ‌ர் முனைவ‌ர் ஷேக் முஹ‌ம்ம‌து அவ‌ர்க‌ள் தெரிவித்துள்ளார்.

நடக்கவுள்ள வைர விழாவில் 1951-ம் ஆண்டு முத‌ல் ப‌யின்ற‌ முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் கலந்து கொண்டு விழாவினை சிற‌ப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும், வெளிநாடுக‌ளில் ப‌ணிபுரிந்து வ‌ரும் முன்னாள் மாண‌வ‌ர்க‌ள் இந்த நிக‌ழ்ச்சியில் க‌ல‌ந்து கொள்ளும்படி கல்லூரி நிர்வாகம் அன்போடு அழைப்பதோடு- இதன் பொருட்டு, ‌ த‌ங்க‌ள‌து விடுமுறையினையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.

விழா மற்றும் வ‌ருடாந்திர‌ ச‌ந்திப்பு நிக‌ழ்ச்சி குறித்த தகவல்கள் அறிய கீழ் கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சலும் அனுப்பலாம்.

தொட‌ர்பு முக‌வ‌ரி :
ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா ந‌க‌ர்
திருச்சி 620 020
மின்ன‌ஞ்ச‌ல் : princi@jmc.edu
இணைய‌த்த‌ள‌ம் : www.jmc.edu

Sunday, August 1, 2010

போலி என்கவுண்டர் வழக்கில் நரேந்திர மோடியை விசாரிக்க சிபிஐ முடிவு


ஜூலை30:சிபிஐ தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன. குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் கடந்த 2005ம் ஆண்டு போலீஸ் என்கவுண்டரில் சோராபுதீன் என்பவரும், அவர் மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி சி.பி.ஐ. நடத்திய விசாரணையில் சோரா புதீன் போலி என்கவுண்டர் மூலம் சுட்டுக் கொல்லப்பட்டது தெரிய வந்தது. குஜராத் மாநிலத்தில் உள்துறை இணை மந்திரியாக இருந்த அமீத்ஷா உத்தரவின் பேரில் இந்த போலி என்கவுண்டர் நடந்ததாக சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதையடுத்து மந்திரி பதவியில் இருந்து விலகிய அமீத்ஷா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவரி டம் சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. ஏற்கனவே இந்த வழக்கில் 15 போலீஸ் அதிகாரிகள் கைதாகி சிறையில் உள்ளனர். அவர்களில் 2 பேர் அப்ரூவராகி உள்ளனர். இதன் மூலம் அமீத்ஷா மீதான கொலை, ஆள் கடத்தல், மிரட்டல், குற்றத்துக்கான ஆதாரத்தை அழித்தல், சதி திட்டம் தீட்டுதல் ஆகிய குற்றச்சாட்டுக்கள் உறுதிப் படுத்தப்பட்டு வருகின்றன. இதற்கிடையே அமீத்ஷா மீதான குற்றச்சாட்டுக்களை மேலும் ஆதாரப்பூர்வமாக்கு வதற்காக சி.பி.ஐ. மேலும் சிலரை விசாரிக்க தீர்மா னித்துள்ளது. குஜராத் மாநில முன்னாள் டி.ஜி.பி. பிசிபாண்டேயை விசாரிக்க சி.பி.ஐ. நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது. பாண்டே, போலி என் கவுண்டர் விசாரணையில் குறுக்கீடு செய்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு உள்ளது. எனவே பாண்டேயிடம் விசாரித்தால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விசாரணை வளையத்துக்குள் குஜராத் முதல்-மந்திரி நரேந்திர மோடியையும் கொண்டு வர சி.பி.ஐ. அதிகாரிகள் தீவிரமாகி உள்ளனர். குஜராத் முதல்-மந்திரி நரேந்திரமோடி மாநில உள்துறை பொறுப்பையும் வகித்து வருகிறார். போலி என்கவுண்டர் குறித்து விசாரித்த சி.ஐ.டி. பிரிவுத் தலைவர் ஜி.சி. ரெய்ஜெரை கடந்த 2007-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந் தேதி வேறு இடத்துக்கு மாற்றி உத்தரவிட்டார். அந்த இட மாறுதல் உத்தரவில் நரேந்திர மோடி கையெழுத்திட்டுள்ளார். இந்த இட மாறுதல் உத்தரவு சந்தேகம் அளிக்கும் வகையில் உள்ளதாக சி.பி.ஐ. கருதுகிறது. எனவே இது தொடர்பாக நரேந்திர மோடியிடம் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. நரேந்திர மோடியை சி.பி.ஐ. அலுவலகத்துக்கு அழைக்க, நோட்டீஸ் அனுப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அந்த நோட்டீசை அனுப்புவதற்கு டெல்லி மேலிடத்திடம் அனுமதி கேட்டு விட்டு குஜராத் சி.பி.ஐ. அதிகாரிகள் காத்தி ருக்கிறார்கள். சி.பி.ஐ. தலைமை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் மோடியிடமும் போலி என்கவுண்டர் தொடர்பாக விசாரணை நடைபெறும். சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கைககள் பா.ஜ.க. தலைவர்களிடம் கடும் கோபத்தையும் அதிருப்தியையும் ஏற்படுத்தி உள்ளன. குஜராத் கலவரம் தொடர்பாக சி.பி.ஐ.யின் ஒரு சிறப்புப் பிரிவு, கடந்த மார்ச் மாதம் நரேந்திர மோடியை வரவழைத்து விசாரணை நடத்தியது. அப்போது 9 மணி நேரம் மோடியிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு கேள்விகள் கேட்டு விசாரித்தனர். தற்போது போலி என் கவுண்டருக்காக மோடியை சி.பி.ஐ. குறி வைத்துள்ளது.