Sunday, February 27, 2011

புதுமனைதெருவின் அவலநிலை.

இந்த 19வது வார்டு மெம்பர் சகோதரரி ஃபர்வீன் அவர்கள். பேராசியர் அப்துல் காதர் அவர்களின் மருமகள். மருமகளை தேர்தலில்போட்டியிட வைத்து,வாக்கு சேகரித்தவர் பேராசியர் அவர்கள்தான்.அவர்களின் திறமையின் மீது நம்பிக்கை வைத்துதான் ஓட்டுபோட்டு வெற்றி பெறவைத்தனர் இந்த வார்டு மக்கள்.

நமது 19வது வார்டுமெம்பர்சகோதரரி ஃபர்வீன் அவர்கள் ஒருவர்தான்
பேரூராட்சி மன்றத்தின் கூட்டத்தில் கலந்து கொல்லாமல் தனது கணவரை வைத்து சில காரியங்களை சென்னையில் இருந்து கொண்டே சம்பளம் பெறுகிறார்.
அவரது கணவருக்கு தனது வீட்டிற்கு எதிரே உள்ள குப்பையை கூட கவனிக்க நேரம் இல்லை.

நமது சகோதரர் ஒருவரின் தனி முயற்சியால் ஊரெங்கும் குப்பை தொட்டி அமைக்கப்பெற்று நமதூரைசுத்தமாகவும் தூய்மையாகவும் வைக்க முயற்சியின் பலன் இது தானா?

இந்த குப்பைனால் வரும் சுகாதரக்கேடும், அதனால் உண்டாகும் பல வியாதிக்கு யார் பொருப்பு?
இதற்கு அந்தந்த வார்டு உறுப்பினர்கள் பொறுப்பு ஏற்பார்களா ?

அதிரை மக்களே இனி வரும் தேர்தலில் உறுப்பினர்
பொறுப்பிற்கு எந்த வேட்பாளர் தகுதியானவர் என்று சிந்தித்து வாக்கு ளியுங்கள்.

இனிவரும் காலங்களில் அதிராம்பட்டினத்தை சுகாதாரபட்டினமாக மாற்ற அனைவரும் இணைந்து முயற்சிப்போம்.....

புகைப்பட உதவி ;ADIRAIXPRESS

Saturday, February 26, 2011

இந்த வார (25.02.2011) அதிரை ஜூம்ஆ நிகழ்வுகள்

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருநாமம் போற்றி 25.02.2011 அன்று நடந்த அதிரை ஜூம்ஆவில் மவ்லவி. அன்சாரி அரபி அவர்கள் கலந்து கொண்டு 'இஸ்லாம் ஒர் மென்மையான மார்க்கம்' என்ற தலைப்பின் கீழ் இஸ்லாம் வலியுறுத்தும் மனிதநேயம், சகோதரத்துவம் மற்றும் சகிப்புத்தன்மை குறித்து நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சம்பவங்களைக் கூறி அழகுற விளக்கினார்கள்.


இரண்டாம் அமர்வில், இன்றைய சர்வதேச பிரச்சனைகளை குறித்தும் அலசினார்கள், சென்ற வாரத்தை விட பெருமளவில் பொதுமக்களும் பெண்களும் ஜூம்ஆவில் கலந்து கொண்டனர்.

''மக்கள் (தங்களது) ஜும்ஆத் தொழுகைகளை விட்டு விடுவதைத் தவிர்க்க வேண்டும். இல்லையெனில் அல்லாஹ் அவர்களுடைய இதயங்களில் முத்திரை பதித்து விடுவான். அவர்கள் (பாவத்தில் மூழ்கி) மதி மறந்தவர்களாய் ஆகி விடுவார்கள்'' என நபி(ஸல்) அவர்கள் மிம்பர் கட்டையின் மீது (நின்று) கூற நாங்கள் கேட்டிருக்கிறோம் என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) மற்றும் அபூஹுரைரா(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 470

நபி(ஸல்) அவர்கள் உரை நிகழ்த்தும் போது, அவர்களுடைய கண்கள் சிவந்து விடும். சத்தம் உயர்ந்து விடும். கோபம் அதிகரித்து விடும். காலையிலோ, மாலையிலோ தாக்குதல் நடத்த வரும் பகைவர்களைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் பற்றி ஒரு படையை எச்சரிப்பவரைப் போன்று உரையாற்றுவார்கள்.

பின்னர் ''வேதத்தில் சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மது(ஸல்) அவர்களது வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக தோற்றுவிக்கப்படும் ஒவ்வொரு (தீய) செயலும் பித்அத் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழி கேடாகும்'' என்று கூறுவார்கள் என ஜாபிர்(ரலி) அறிவிக்கிறார். முஸ்லிம் 476

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், வெள்ளிக்கிழமை உரையில், நபி(ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து பாராட்டி, அதற்குப் பின்னர் உரத்த குரலில் பேசுவார்கள் என உள்ளது.

முஸ்லிமின் மற்றோர் அறிவிப்பில், ''யாரை அல்லாஹ் நேர்வழிப்படுத்திவிட்டானோ, அவரை வழி கெடுப்பவர் யாரும் இல்லை. இன்னும் யாரை அல்லாஹ் வழி கெடுத்து விட்டானோ, அவரை நேர்வழிப்படுத்துபவர் யாரும் இல்லை'' என உள்ளது.

நஸயீயில் ''ஒவ்வொரு வழி கேடும் நரகத்தையே சேரும்'' என்று உள்ளது.


தகவல்
அதிரையிலிருந்து

அப்துல் காதர்

அன்புள்ளம்கொண்டநண்பர்களுக்குஒருவேண்டுகோள்.....

அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிரைஅவிஸோமனவளர்ச்சிக்குன்றியகுழந்தைகள்உண்டு.உறைவிட சிறப்பு பள்ளிக்கு வருகைதந்த சகோதரி.தமயந்திஆசிரியை,அவர்களுடைய பாட்டியின் நினைவு நாளை முன்னிட்டு இந்த இயநிலைக்குழந்தைகளுக்கு மதிய உணவு கொடுத்தார்கள்.
இயலாநிலைகுழந்தைகளுக்காகஉதவிசெய்யுங்கள்.

அன்புள்ளம் கொண்ட நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்....

அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழந்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளியை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்.

உங்களது நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள்


இந்தஇயலாநிலைகுழந்தைகளுக்காகஉதவிசெய்யுங்கள்

முகவரி:
அவிஸோ மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திரனாளி குழத்தைகள் உண்டு,உறைவிட சிறப்புபள்ளி
5v/1-சேதுரோடு,அதிராம்பட்டினம்,
பட்டுக்கோட்டை தாலுகா
தஞ்சாவூர் மாவட்டம்-614701

தகவல் ;
frominfo@adiraitheoxfordtrust.org
toadiraidailynews@gmail.com

Wednesday, February 23, 2011

அதிரை அவிசோவின் அன்பான வேண்டுகோள்

fromawiso school
toadiraidailynews@gmail.com
அஸ்ஸலாமு அழைக்கும்
அன்புள்ளம் கொண்ட எங்கள் அருமை சமுதாய மக்களுக்கு ஒரு வேண்டுகோள்.
அல்லாஹ்வின் மாபெரும்கிருபையால் உறைவிடசிறப்புபள்ளி.பத்துவருடத்தின் கனவின்நனவாகஉருவாக்கப்பட்டது.
    இந்தசிறப்புபள்ளிதமிழ்நட்டிலேயேமுஸ்லிம்களால்நடத்தபபடும்முதல்மனவளர்ச்சிகுன்றியகுழந்தைகள்உண்டு.உரைவிட சிறப்பு பள்ளி என்பது சிறப்பாகும்.
      இது ADIRAMPATTINAM.THEOXFORDTRUST.என்ற அரகட்டளையால்
      நடத்தப்பட்டுவருகிறது.
        இது இந்திய அறகட்டளை சட்டம் 1882ன் படி முறையாக அரசாங்கத்தில் பதிவு செயப்பட்டுள்ளது.
          நமது பள்ளியின் மூலம் சிறப்புகல்வி,சுயவுதவி பயிற்சி, பேச்சு பயிற்சி.உடற்கல்வி பயிற்சி,ஆகியவற்றின் மூலம் பல்வேறு மனவளர்ச்சிகுறைபாடுள்ளமற்றும்மூளைமுடக்குவாதத்தினால்பதிக்கப்பட்டஇயலாநிலைக்குழந்தைகளின் வாழ்வு முன்னேற்றத்திற்கு வழிகாட்டிவருகிறது.
            தற்போது நமது பள்ளியில் 10 குழந்தைகள் தங்கி பயிற்சி பெற்று வருகிறார்கள்.அவர்களுக்கு உணவு,உடை மருத்துவம் இன்னும் சகலவித தேவைகளையும் இலவசமாக செய்துவருகிறோம்.இந்த சிறப்பு பள்ளியில் ஒரு சிறப்பு ஆசிரியர்,ஒரு உதவி ஆசிரியர்,ஒரு ஆயா,ஒரு சமையல்காரர்,ஒரு வாச்சுமேன் உட்பட 5 பேர்பணிபுரிகிறார்கள்.இந்த பள்ளிக்கு மாதசெலவாக ருபாய் 45௦௦௦ செலவாகிறது.இந்த பள்ளி தற்பொழுது வாடகை கட்டத்தில் இயங்கி வருகிறது.அவிஸோமூலம்செயல்படுத்தப்பட்டவரும்சேவைகள்தொய்வின்றி,தொடரவும்.அன்றாட செலவுகள் மற்றும் பராமரிப்புக்காகத் தேவைப்படும் பொருளாதரத்தைஈடுகட்டவும்,சகலவிதமனமாற்றுத்திரனாளிகளின் மறுவாழ்வுக்ககத்தொண்டு பணியாற்றவும்தங்களால இயன்ற அளவுநிதிவழங்கி ஆக்கமும்,ஊக்கமும் அளிக்க உங்களைஅன்புடன் வேண்டுகிறோம்.
              குறிப்பு:இதுபோல்உள்ளஇயலாநிலைக்குழந்தைகள்இருந்தால்எங்களைதொடர்பு
              கொள்ளவேண்டியதொலைபேசி:::9842466529.9788194182



              Sunday, February 20, 2011

              அதிரையில் நடந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

              அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் 18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகே அதிரை இஸ்லாமிக் மிஷன் சார்பாக மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

              இந்நிகழ்வில், அதிரை ஜூம்ஆவிற்காக வருகை தந்திருந்த மவ்லவி. மீரான் முஹைதீன் ஸலாஹி அவர்கள் கலந்து கொண்டு 'கலாச்சார சீரழிவுகள் - ஒர் ஆய்வு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த, தொடர்ந்து பேசிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பின் கீழ் பேருரையாற்றினார்கள்.

              குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேருரைகள் நிகழ்த்தபட்டபோது பொதுமக்கள் அனைவரும் எத்தகைய வீண் அசைவுகளுமின்றி, நிகழ்ச்சியின் இறுதிவரை கலையாமல்,உரையோடு ஒன்றியிருந்தனர் மேலும் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் பெண்கள் தங்களின் வீட்டுவாசல்களில் அமர்ந்தும் சொற்பொழிவுகளை செவிமடுத்தனர். ஆண்கள் மேடை முன்பு அமர்ந்தும், இருக்கைகள் போதாமல் சூழ நின்றவர்கள் போக ஏராளமான சகோதரர்கள் தக்வா பள்ளியினுள்ளும் தஞ்சமடைந்திருந்தனர்.

              முன்னதாக, AIM பொருளாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரையாற்ற, அதிரை அன்வர் BA அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இறுதியாக சகோதரர்
              அப்துல் ரஹ்மான் MBA நன்றி நவிழ துஆவுடன் இனிதே நிறைவடைந்தது.

              கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது எத்தகைய அமைப்பிற்குள்ளும் அடகுவைக்கப்படாமல் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஆதாரமாக ஏற்று செயல்பட்டு வரும் அதிரை இஸ்லாமிக் மிஷன் இயக்க பேதங்களை துடைத்து தூர எரிந்துவிட்டு இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற சிறந்த தாயிக்களை கொண்டு தொடர் பிரச்சாரங்களை தன் சக்திக்கேற்ப செய்திட உறுதியேற்கின்றது.

              தகவல்
              அதிரையிலிருந்து
              M
              . அப்துல் ரஹ்மான் (SP)

              Saturday, February 19, 2011

              மரண அறிவிப்பு

              புதுமனைதெருவை சேர்ந்த ஹாஜிமு.செ.மு.A.M.அப்துல் காதர் அவர்களின் மகனும் ஹாஜி A.அப்துல் முனாப்(

              வக்கீல்

              ), A.

              Fபௌஜுல்
              அவர்களின் சகோதரர்மான A.அப்துல் வாஹித் அவர்கள் இன்று மதியம் 3.௦௦ மணியளவில் மரண அடைந்துவிட்டார்கள். அன்னாரின் ஜனாசா நாளை காலை 8.௦௦ மணியளவில் மரைக்கா பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


              இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

              (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"


              எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

              இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டு விழா

              இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37 ம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை மாலை (17.02.2011) புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர்கள் மிகவும் திரளாக வந்திருந்தார்கள் பெண்கள் பகுதி நிரம்பி வழிந்தது. இமாம் ஷாஃபி பள்ளியின் பொருளாளர் ஜனாப் அஹமது இப்ராஹீம் அவர்கள் தலைமை ஏற்க, பள்ளியின் மேலாளர் பேராசிரியர் அப்துல் காதர் M.A. MPhil., Phd, அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இமாம் ஷாஃபி பள்ளியின் முதல்வர் பேராசிரியர் பரகத் M.A. MPhilஅவர்களும் மற்றும் பள்ளியின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


              தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்று நடத்திய பல்சுவை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நடைபெற்றது, L.K.G. UKG, (குறிப்பாக) சிறு குழந்தைகளின் சூராஹ் மனனப்போட்டி, ஆங்கில டிராமா , ஹிந்தி பேச்சு என்று மிகவும் இனிமையாகவும் கண்கவர் நிகழ்ச்சியாக இருந்தது. மாஷா அல்லாஹ்.

              குறிப்பாக அஸ்மாகுல் ஹுஷ்ணா (அல்லாஹ்வின் திருநாமங்கள்) போட்டியில் LKG இல் இருந்து 5ம் வகுப்பு வரை நடந்தது LKG, UKG வரை 50 சொல்லவேண்டும் என்று நிர்ணயித்து இருந்தார்கள் UKG மாணவி 99 திருநாமங்களையும் பிழையில்லாமல் கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. போட்டிக்கு முன்பு இந்த குழந்தையின் தாய் சிறு குழந்தைக்கு 50 அதிகம் என்று பள்ளி நிர்வாகத்திடம் குறைக்கும்படி கூறினார்கள், ஆனால் அவர்களின் குழந்தையே அனைத்தையும் கூறி சிறப்பு பரிசும் பெற்றது அல்ஹம்துலிலாஹ்.

              அதைவிட ஒரு சிறப்பு UKG மாணவன் யாசீன் சூரா முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்து எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை. மாஷா அல்லாஹ்.

              மூன்று சூராஹ் (வாக்கியா, அர்ரஹ்மான், துகான்) மனனப்போட்டியில் மாணவிகள் 10 பேர் பரிசு பெற்றார்கள்.

              தமது பிள்ளைகளின் கல்வி சாதனைகளின் கண்கவர் நிகழ்சிகளை காண லீவு போட்டாவது ஊருக்கு வாங்க(ப்பா) வெளிநாட்டில் வாழும் சகோதரர்களே. இதைவிட சந்தோசம் வேறு எதில் கிடைக்கப்போகிறது. உங்கள் அனைவரின் பார்வைக்காக புகைப்படங்கள்.



              அன்மையில் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் மார்க்கக் கல்வியின் அவசியத்தை வழியுறுத்தப்பட்டது. இன்று இமாம் ஷாஃபி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் யாஸீன் சூரா, வாக்கியா சூரா, அர்ரஹ்மான் சூரா, துகான் சூரா, மற்ற சூராக்கள் மற்றும் அஸ்மாஹுல் ஹுஸ்னா மனன செய்யும் போட்டியில் மிக உற்சாகமாக இளம் சிறார்கள், சிறுமிகள் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளும் வாங்கியுள்ளார்கள். இறைவனுக்கே எல்லா புகழும்.

              வருடா வருடம் இது போன்று நிகழ்ச்சிகளில் நம் ஊர் பள்ளிகளில் சிறுவர் சிறுமியர் தங்களின் திறமையை கொண்டும் சூரா மனன போட்டிகளில் பரிசுகள் அள்ளிச்சென்றாலும். இந்த நிகழ்ச்சியை மிக முக்கியமானதாக கருதி இந்த செய்தியை பதிந்திருக்கிறோம்.

              இந்த மாணவர்களின் வெற்றியை அங்கீகாரம் கொடுத்து ஊக்கப்படுத்துவதற்காகவும், மேலும் மற்ற இளம் மாணவர்களுக்கு ஆர்வமூட்டவும். இதைப் பார்த்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை வரும் வருடங்களில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்ள செய்து நிறைய பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காவும் இங்கு நாம் புகைப்படங்களுடன் செய்தியை பதிந்திருக்கிறோம்.

              வாருங்கள் எல்லோரும் மனதார வாழ்த்துவோம் இந்த இளம் சாதனையாளர்களை. இவர்கள் மேலும் பல வெற்றிகள் பெற வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

              சூரா மனன போட்டியில் சாதனைபடைத்த மாணவ மாணவிகளை அதிரைநிருபர் குழு சார்பாகவும், நம் வாசகர்கள் எல்லோரின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

              பெற்றவர்களுக்கு தன் பிள்ளையின் சாதனையை பார்த்து கிடைக்கும் சந்தோசத்துக்கு வேறு எந்த சந்தோசமும் ஈடாகாது.
              நன்றி:அதிரைநிருபர்

              Friday, February 18, 2011

              அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

              அதிரை இஸ்லாமிக் மிஷன் நடத்தும் மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

              நாள் : 18.02.2011, வெள்ளிக்கிழமை மாலை
              நேரம் : மஃரிப் தொழுகைக்குப்பின் (சுமார் 6.30 மணியளவில்)
              இடம் : தக்வா பள்ளி அருகே, அதிரை
              இன்ஷா அல்லாஹ்...

              மஃரிப் முதல் இஷா வரை
              சகோதரர் கோவை மீரா முகைதீன் அவர்கள்
              கலாச்சார சீரழிவுகள் - ஓர் ஆய்வு
              என்ற தலைப்பிலும்

              இஷாவுக்குப்பின்
              சகோதரர் கோவை அய்யூப் அவர்கள்
              மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை
              என்ற தலைப்பிலும் பேருரையாற்றவுள்ளார்கள்

              குறிப்பு: பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. அறிவமுதம் பருக அனைவரையும் வாரீர் வாரீர் என அன்போடு அழைக்கிறது

              அதிரை இஸ்லாமிக் மிஷன் - AIM
              (கட்சி, இயக்கம் சார்பற்றது)
              அதிரை, தஞ்சை மாவட்டம்

              Sunday, February 13, 2011

              அதிரையில் சுகாதார விழா

              அதிராம்பட்டினத்தில் நாளை 14-02-2011 திங்கள் அன்று தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பாக‌ சுகாதார விழா காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அச்சமயம் காலை 8.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் S.சண்முகம் அவர்கள் தலைமையில்மத்திய இணையமைச்சர் S.S.பழநிமாணிக்கம்அவர்கள் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். பிரபல முன்னணி மருத்துவர்களால் ஸ்கேன் போன்ற அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து பயன் பெறலாம். உடல் ஊனமுற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாற்றுத் திறனாளிக்கான‌ அடையாள அட்டையும் வழங்கப்படும்

              Thursday, February 10, 2011

              அதிரை முக்கிய தொலை தொடர்பு எண்கள்

              அதிராம்பட்டினம் மருத்துவமனைகள்
              மருத்துவர் பெயர்
              கிளினிக்
              வீடு
              ஷிஃபா மருத்துவமனை242324
              அரசு மருத்துவமனை242459
              Dr. H. அப்துல் ஹக்கிம்241028242382
              Dr. முஹமது மீரா சாஹிபு242307
              Dr. S. ஹாஜா முஹைதீன்242386242381
              Dr. K.H. முஹமது ஹனீப்240473, 242548242907
              Dr. V. ராஜு242203242548
              Dr. V. செல்வராஜ்242255
              அதிரை பைத்துல்மால் ஆம்புலன்ஸ்241690, 243770
              அதிராம்பட்டினம் கல்வி நிறுவனங்கள்
              காதிர் முகைதீன் கல்லூரி242236
              காதிர் முகைதீன் ஆ. மே.நி. பள்ளி242229
              காதிர் முகைதீன் பெ. மே.நி. பள்ளி242412
              காதிர் முகைதீன் I.T.I.
              இமாம் ஷாபி மெட்ரிக் (PKT Road)242206
              இமாம் ஷாபி சேர்மன் வாடி242206
              E.P.S. School242904, 242799
              அதிராம்பட்டினம் வங்கிகள்
              கனரா வங்கி242311
              இந்தியன் வங்கி242725
              தனலெட்சுமி வங்கி242461
              கூட்டுறவு வங்கி242720
              அதிராம்பட்டினம் அரசு அலுவலங்கள்
              காவல் நிலையம்242450
              மின்சார வாரியம்242444
              தொலைபேசி விசாரணை181, 197
              தொலைபேசி விசாரணை புகார்242398
              தொலைபேசி அலுவலகம்242222
              பஞ்சாயத்து அலுவலகம்242244
              தபால் தலைமை நிலையம்242410
              வானிலை ஆராய்ச்சி நிலையம்242538
              இரயில் நிலையம்242431
              பதிவு அலுவலகம்
              அதிராம்பட்டினம் கட்சி அலுவலங்கள்
              தி.மு.க.
              அ. தி.மு.க.
              பா.ம.க.
              தே.மு.தி.க.
              C.P.I.
              C.P.M.
              அதிராம்பட்டினம் சமுதாய அமைப்புகள்
              த.மு.மு.க.
              தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்
              இந்திய தவ்ஹீத் ஜமாத்
              பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
              முஸ்லிம் லீக்
              தேசிய லீக்
              பட்டுக்கோட்டை மருத்துவர்கள்
              சாகுல் ஹமீது (கண்)252178
              இலியாஸ் (பல்)253079
              பொது மருத்துவம்
              ஷக்கீல் அஹமது252235
              பாலகிருஷ்ணன்253862,252670
              அறுவை சிகிச்சை நிபுணர்கள்
              கூத்தப் பெருமாள்253766
              கருப்பையா252359
              மைக்கேல்252671
              எலும்பு முறிவு
              செல்லப்பன்252610
              சீனிவாசன்257873
              குழந்தைகள் நல சிறப்பு
              ரவிச் சந்திரன்253501
              பன்னீர் செல்வம்252332 252437
              ராஜேஸ்வரி (மகப்பேறு)252919
              பட்டுக்கோட்டை அரசு அலுவலங்கள்
              அரசு மருத்துவமனை252080
              பஞ்சாயத்து யூனியன்252863
              நகராட்சி அலுவலகம்252097
              தாசில்தார் அலுவலகம்236747
              தொலைபேசி அலுவலகம்255197
              ரயில் நிலையம்256457
              தீயணைப்பு நிலையம்222101
              வருமானவரி அலுவலகம்252022
              மாவட்ட பதிவாளர் அலுவலகம்223444
              கூட்டுறவு சங்க பதிவாளர் அலுவலகம்252076
              மாவட்ட கல்வி அலுவலகம்253441
              மின்சார வாரியம் (கிழக்கு)224284
              மின்சார வாரியம் (மேற்கு)224291
              காவல் நிலையம்255567, 252277, 235761
              காவல் துறை ஆணையர்236986
              நாடியம்பாள் கேஸ் சர்வீஸ்252929
              தஞ்சாவூர் மருத்துவமனைகள்
              A.K.C. நர்சிங் ஹோம்230595
              அகஸ்தியர் மருத்துவமனை223073
              சோலா மருத்துவமனை279185
              சிட்டி மருத்துவமனை235690
              R.M. மருத்துவமனை231221
              மருத்துவக் கல்லூரி240022, 240024
              N.M. மருத்துவமனை279441
              நேஷனல் மருத்துவமனை233357
              K.D.R. மருத்துவமனை230379
              K.R.A. மருத்துவமனை236196
              காமாட்சி மருத்துவமனை222957
              கீர்த்தனா மருத்துவமனை278950
              ரோஹினி மருத்துவமனை279801
              S.P. மருத்துவமனை230169
              விநோதகன் மருத்துவமனை234884
              தஞ்சாவூர் மருத்துவர்கள்
              மும்தாஜ் (மகப்பேறு)231658
              ஜானகிராமன்237675
              ஜமால்234877
              மூர்த்தி (இருதயம்)231134
              அழகரசன் (இருதயம்)233633
              சொளந்தரராஜன் (எலும்பு)253040
              வெங்கடேசன் (மன நோய் நலம்)230875
              கருப்பச் சாமி (E.N.T.)236868
              பஷிர் அஹமது M.D.231658
              பாஸ்கர் (மூளை நரம்பியல்)237585
              பாஷா (பல்)231299
              பாலசுப்ரமணியன் (சிறுநீரகம்)230169
              மணிவண்ணன் (தோல்)240046
              மாணிக்கவாசகம் (தோல்)230309
              ஆப்ரஹாம் M.D.236987
              டேவிட் பாஸ்கர்237480
              தஞ்சாவூர் காவல் நிலையம்
              S.P. (COURT ROAD)230010
              S.P. (WEST)230451
              A.D.S.P.238051
              A.S.P.237666

              நன்றி: adiraitiya

              வட்டியில்லா வங்கிச்சேவை

              Tuesday, February 8, 2011

              M முஹமது சேகாதியார் BSc(Agri) அவர்கள் அளித்து இருக்கும் தன்னிலை விளக்கம்

              Ref: அதிரை எக்ஸ்பிரஸ் blog on 18th Jan 2011 through Adiraidailynews posted by Adiraivoice

              அஸ்ஸலாமு அழைக்கும்
              அதிராம்பட்டினத்தில் ஒரே விவசாய பட்டதாரியான நான் 34ஆண்டுகள் பணி மாசு மறுவற்ற அரசு பனி ஆற்றிஉள்ளேன்.முதல் 25 ஆண்டுகள் மாசு மறுவற்ற அரசுபணியாற்றியமைகாக அரசு சான்று பெற்று உள்ளேன்.நான்பணியில் சேர்ந்தது முதல் ஒய்வு பெற்றவரைக்கும் என் மீதுதனி பட்ட முறையில் ஒரு ஊழல் குற்ற சாட்டுகள் கூடகிடையாது.என் பனி பதிவேட்டை பார்த்தல் நன்குவிளங்கும்.என் பொது வாழ்விலும் அடுதவர்வுடைய பணத்தில்ஒரு பைசா கூட ஏமாற்றி சாப்டது கிடையாது .

              தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கும்திட்டத்தின் கீழ் தேசிய வேளான் கூட்டுறவு இணையத்தால்(NAFED)கொப்பறை தேங்காய் கொள்முதல்செய்ய படுகிறது.2001-2001 ஆம் ஆண்டில் எல்லா தென்னைவிவசாயகளுகும் கொப்பரை தேங்காய் அடையாள அட்டைவழங்க அரசு உத்தரவிட்டது.கிராம கூட்டுறவு வங்கியால்அச்சடிகபட்டு விவசாயகளுக்கு வழங்கிய அடையாளஅட்டையில் கிராம நிர்வாக அலுவலர்களால் எழுத பட்ட சர்வேநம்பர் தென்னை பரப்பு காய்க்கும் மரங்கள் ஆகிய புள்ளி விவரஅடி படையில்,எவ்வளவு கொப்பறை தேங்காய் கிடைக்கும்என்பதை அளவிட்டு எழுதி கை எழுத்து இடுவதை என் பனி.தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து கொப்பறை தேங்காய் குறைந்த விலையில் கிடைத்தாலும் வியாபாரிகள்,அரசியல்வாதிகள் போன்ற நபர்கள் அதிக லாபம் பெரும் நோக்கில் செயல்பட்டதாலும்,விவசாய்கள் அடைய வேண்டிய லாபத்தை மேற்கண்ட நபர்கள் பயனடைந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இதற்கு அரசின் கொள்முதல் கொள்கை தவறே காரணம். அப்பொழுது எதிர்கட்சி தலைவராய் இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள்,2001 ஆட்சிக்கு வந்த உடன்,எதிர்கட்சி மீது தொடரப்பட்ட வழக்குதான் கொப்பறை தேங்காய் உழல் குற்றச்சாட்டு.

              இது அரசியல் கால்புனர்சியின் காரணமாக தொடரப்பட்ட(political case).உழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறயால் கொப்பறை கொள்முதல் திட்டத்தில் சம்மந்தபட்ட கூட்டுறவு துரை,வேளாண் துரை,NAFED பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது.ஒரு அரசுஊழியர் ஓய்வுபெறும் பொழுது vigilance case நிலுவைஇருந்தால்,தற்காலிக பனிநீக்கம் செய்வதும் ஓய்வுதிய பலன்கள்நிறுத்தி வைக்க ஒய்வு பெற அனுமதி மறுப்பதும்,விசாரணைமுடிவை பொருத்து வழக்கில் இருந்து விடிவிப்பதும் அல்லதுதண்டனை அளிப்பதும் பொது அரசு விதி ஆகும்.suspension is not a punishment.நான் அரசு பணியில் இருந்து ஒய்வு பெறும் அன்றுvigilance case நிலுவை இருந்ததால் அரசு விதியின் படி தற்காலிகபனி நீக்கம் செய்யப்பட்டு ஒய்வு பெற அனுமதிமறுக்கப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் என் போன்று அநியாயமாக பாதிக்கபட்டு உள்ளார்கள்.
              Right to information act படி மேற்கண்ட விபரம் பெற்ற ஜனாப் அபூபக்கர் அவர்கள்,என் மீது கலங்கம் அளிக்கும் வைகையில்,பள்ளிவாயில்கள் சுவற்றில் ஒற்றியும் தெரு முனையில் நின்று அவதுாறு பிரச்சாரம் செய்தும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும் மற்ற இணையதளத்திலும் போட்டும் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.
              என் ஒரே கேள்வி:தாம் நேர்மையானவர் என்றும் யாரிடமும் லஞ்சமாக பணம் பெறவில்லை என்றும் வாங்கிய கடனை யாருக்கும் கொடுக்கவேண்டிய நிலுவை இல்லை என்றும் அபூபக்கர் அறிக்கை வெளி இடுவார?
              - M முஹமது சேகாதியார் BSc(Agri)