Monday, April 18, 2011

அதிரை AFFC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி

அதிரை AFFC நடத்தும் 7 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அதிரையில் இன்று 18-4 -2o11 கிராணி மைதானத்தில் கோலாகலாமாக தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் சுமார் 70 அணிகள் பங்கு பெறுகிறது.

முதல் பரிசு 12000
இரண்டாம் பரிசு 10000
மூன்றாம் பரிசு 8000
நான்காம் பரிசு 6000

இவ்வாண்டில் AFFC விளையாடிய அணிகளின் விபரம்:

கரம்பகுடியில் நடைபெற்ற போட்டியில்AFFC அணி மூன்றாவது பரிசுத்தொகை
ரூ5000தட்டிச்சென்றது.

தரகர்தெருவில்ASCTournamentல் முதல் இடத்திற்கானபரிசுத்தொகை ரூ5000தட்டிச்சென்றது.

பழஞ்செட்டிதெருPCC நடத்தியTournament ல்முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ7000 தட்டிச்சென்றது.

AFCC கிரிக்கெட் அணி சென்ற ஆண்டு விளையாடிய அணைத்து ஆட்டங்களிலும்சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜி சேனா மூணா. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும் SMA அபுல் கலாம் அவர்களின் சகோதரரும் அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தகபனாருமாகிய சீனிகுச்சி SMA முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் காலமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மறைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

தகவல்:அதிரையிலிருந்துADN நிருபர்

Tuesday, April 5, 2011

அதிரை அல்-அமின் பள்ளிவாசல் பொதுக்கூட்டம்

  • நேற்று திங்கள்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை அல்-அமின் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். PFI மற்றும் தமுமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆலிம்கள் மற்றும் அல்-அமின் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • ஆரம்பம் அல்ஹம்து சூராவுடன் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கியது. அமிராக அன்சாரி (குலாப்ஜான்) தேர்தெடுக்கப்பட்டார்.
  • இதில் நில வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அல்-அமின் பள்ளி பிரச்னை தீர்த்து வைப்போம் எங்களுக்கு ஆதரவளியுங்கள் என்று நச்சரித்து வருகின்றனர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது அப்போது சில சகோதரர்கள் வாக்குறிதிகளை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கவேண்டும் என ஆலோசனையை முன்வைத்தனர்.

தீர்மானங்கள்:
  1. அல்-அமின் பள்ளி பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. தொடர்ந்து அல்-அமின் பள்ளிக்கு இடையுறு செய்யும் திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் வாக்களிக்க கூடாது.நீங்கள் விரும்பியவர்களுக்கு திமுகவை தவிர வாக்களிக்கலாம்.
  3. எந்த முறையில் அல்-அமின் பள்ளி தொடர்பாக வாக்குறிதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என மனப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
  4. பேரூராட்சியில் திமுக சார்பில் உள்ள உறுப்பினர்களே உள்ள நிலையில் நமதூரிலுள்ள சமூக அக்கறையுள்ள இளைஞர்களை பேரூராட்சி தேர்தலுக்கு சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  5. வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O என்ற விண்ணப்பதை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த பட்டது.muslim malar

Monday, April 4, 2011

காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் நீக்கம்

ட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் (காங்கிரஸ் அதிருப்தி) திரு யோகநாதன்  B.A. BL அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

அதிரை பைத்துல்மால் மார்ச்-2011 சேவைகள்

திரை பைத்துல்மாலின் மார்ச் மாத சேவைகள் அறிக்கை. இதில் கூறப்பட்டுள்ள விசயங்களை கவனமாக வாசித்து அதிரைவாசிகள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கவும்.

குறிப்பாக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் திட்டம்,NRI அதிரைவாசிகளுக்கான தொடர் சேமிப்புத் திட்டம், பல்லாவரம் கட்டிட விற்பனை போன்ற விசயங்களில் அதிரைவாசிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன
.









Friday, April 1, 2011

இது ரேஷன் கடை அல்ல........


இந்த வரிசையை பார்த்தல் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.இது ரேஷன் கடை அல்ல நேற்று முன்தினம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது அல்லவா அதை காண நமதூர் ரசிகர்கள் கூடி நிற்கிறார்கள். வழக்கம் போல் நமதூரில் மதியமும் 03 மணிமுதல் 06 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து.வெளியில் யாராவது மொபைல் வைத்திருந்தால் ஸ்கோர் பார்க்கலாம் என எண்ணி வந்தனர். நடுத்தெருவில் ஒரு கடையில் இன்வேர்ட்டர் மூலம் மேட்ச் பார்த்து கொண்டிருந்தனர்.இதனால் அங்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்தியா வெற்றி பெற்றதும். பாகிஸ்தான் ரசிகர்களை இந்தியா ரசிகர்கள் கலாய்க்க நமதூரில் நேற்று இரவு முழுவதும் வெடிவெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்.இறுதி ஆட்டம் நடக்கும் போது மின் நிறுத்தம் இருக்க கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள். நமதூர் மின் வாரியம் என்ன செய்யும் பொருத்து இருந்து பார்ப்போம்.......
muslim malar