Friday, April 13, 2012

online ulagam

அதிரை சித்திக் பள்ளிவிவகாரம்- நடந்தது என்ன?

    No comments:

சமீபத்தில் அதிரை புதுமனைத்தெரு சித்தீக் பள்ளி பக்கச் சுவர் இடிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் கட்டியெழுப்பட்டது.இச்சம்பவம் அதிரையில் பெரியளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.இதன் முழுவிபரம் என்னவென்றால் புதுமனைத்தெரு இருந்து பக்கத்தில் உள்ள நெசவு தெருவிற்கு ஆட்டோ, கார் போன்ற வாகனங்கள் செல்வதற்கு வலி இல்லாமல் சிறு பாதையாகவே இருந்தது. எதாவது மருத்துவம் போன்ற அவசர தேவைக்கு ஆட்டோ போன்றவை உள்ளே செல்ல முடியாமல் அந்த தெருவாசிகள் பெரும் அவதிக்குஉள்ளாயினர்.இதற்கு ஓரே வழி பள்ளியில் பக்கத்தில் பள்ளிக்கு சொந்தமான தேங்காய் வாடி நிலத்தில் பள்ளி நிர்வாகத்தை அணுகி அந்த வாடியில் ஒரு பாதை கேட்கலாம் என்று முடிவு செய்து பல வருடங்களுக்கு முன் அத்தெருவாசிகள் கோரிக்கை வைத்தனர்.அதற்கு பிறகு இவ் விவகாரம் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த தெருவாசிகளுக்கும் ஒரு முடிவு இல்லாமல் நீண்டுகொண்டே போனது.சில நாட்களுக்கு முன் பள்ளிநிர்வாகம் அந்த வாடி நிலத்தில் சுவர் கட்ட முடிவு செய்து சுவற்றை எழுப்பினர்.தெருவிற்கு பாதைவேண்டும் யென்று சொல்லி சுவரை கட்டவிடாமல்அத்தெருவாசிகள் தடுத்தனர் இது தொடர்பாக பள்ளிநிர்வாகத்துக்கும் தெருவாசிகளுக்கும் கடும் பிரச்சனையாக உருவெடுத்தது.மாறி மாறி காவல்துறையிடம் புகார் தெருவிக்கப்பட்டுள்ளது.அதுமட்டும் இல்லாமல் பாதை பிரச்சனையாக உருவெடுத்து தற்போது நில பிரச்சனையாக மாறி உள்ளது.முழு விபரம் இந்த வீடியோ காணொளியை பார்த்தல் உண்மைநிலை புரியவரும்







குறிப்பு :இந்த பதிவு யாருடைய மனதையும் புன்படியும் விதமாக பதியவில்லை அதிரையுடைய உண்மைநிலையை மக்களுக்கு தெரியபடுத்துவது எங்களுடைய கடமை.

காணொளி உதவி: அதிரைபோஸ்ட்




online ulagam

About online ulagam -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!