Wednesday, October 27, 2010

உலகப் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் திடீர் மரணம்

pauloctobus

உலககோப்பை கால்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் நேற்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக போல் பாராமரிக்கப்பட்டு வந்த மீன் காட்சியக ஊழியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.

இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,

" போல் ஒக்டோபஸின் எதிர்பாராத மரணம் எங்களை கடும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. இரவு உறக்கத்திலேயே அது உயிரிழந்துள்ளது. அதன் நினைவாக அ மரணம் து புதைக்கப்படவுள்ள இடத்தில் நினைவுத் தூபியொன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளோம்" எனத் தெரிவிக்கின்றனர்.

இவ்வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ன உதைபந்தாட்ட போட்டிகளில் ஜேர்மனி பங்குபற்றிய மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களை முன்கூட்டியே, சரியாகத் தெரியப்படுத்தி ஒக்டோபஸ் பெரும் புகழடைந்திருந்தது.

Tuesday, October 26, 2010

ஷம்சுல் இஸ்லாம் சங்க பெயரில் போலி வலைப்பூ

திரைப்பட்டினத்தில் ப‌ல வலைப்பூக்கள் உள்ளன. .அதிரையோடு தொடர்புடைய பெயர்ப் பஞ்சம் ஏற்படும் அளவு ஒவ்வொன்றும் பெயர்பதிவு செய்யப்பட்டுவிட்டது.

அதனால்தான் இப்போது
எண்களிலும் கூட வலைப்பூ பதிவு செய்யப்படுகின்றது! அந்த வலைப்பூக்காரர்கள் (வலைஞர்கள்) அவரவரிடம் உள்ள தகவலுக்கேற்பச் செய்திகளை வெளியிடுகிறார்கள். தனி நபர்கள் தமக்குப் பிடித்தமான பெயரில் இயங்குகிறார்கள்; சில இயக்கங்கள் அவர்களின் தலைமை, கிளை அல்லது அவர்களால் அங்கீகரிக்கப்பட்ட நபர்களிடம் அனுமதி பெற்று இயக்கப் பெயர்களில் நடாத்துகிறார்கள். இவை எல்லாவற்றையும் நாம் வர‌வேற்கிறோம்.

ஆனால், சில தினங்களாக 'ஷம்சுல் இஸ்லாம் சங்கம்'
http://www.samsulislamsangam.blogspot.com/ என்ற பெயரில் ஒரு வலைப்பூ உலா வருகிறது. அது லண்டன் கொரைடன் பகுதியிலிருந்து இயக்கப்படுவதாகவும், அதன் 'சுயவிபரக் குறிப்பு' சொல்கிறது. 'இந்த வலைத்தளம் சம்சுல் இஸ்லாம் சங்கதிற்குட்பட்ட முஹல்லாவாசிகளின் கூட்டு முயற்சி'என்றும் பதிவிட்டுள்ளார்கள்.

கடந்த மாதம் சங்கத்தில் ஏற்பட்ட பரபரப்பு ஒரு வழியாக அறிஞர் பெருமக்களால் தீர்த்து வைக்கப்பட்டு, இப்போதுதான் பெருமூச்சு விட்டுள்ளது. இந்த நிலையில் வலைப்பூ வழியில் மீண்டும் சோதனை வந்துள்ளது. வலைப்பூ மட்டுமின்றி, மின்னஞ்சல் முகரியும் துவக்கியுள்ளார்கள்.

எனவே, ஷ‌ம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் இந்த வலைப்பூவிற்கும் அறவே சம்மந்தமில்லை என்பதை அதிரைப்பட்டின வாசிகளுக்கும் ஏனையவர்களுக்கும் தெரிவித்துக்கொள்வதாக ஷம்சுல் இஸ்லாம் சங்க முஹல்லாவாசி ஒருவர் தெரிவித்தார். தேவையானால் இந்த வலைப்பூ இயக்குனர்கள் வேறு பெயரைத் தேர்வு செய்துக்கொள்ளுமாறும் அவர் தெரிவித்தார்.

இந்த வலைப்பூவிற்கும் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்திற்கும் தொடர்பில்லை என்பதை சங்கம் அதிகாரப்பூர்வமாகத் தீர்மாணம் நிறைவேற்ற வேண்டும். ஏனெனில், சங்கம் முறையாகப் பதிவு செய்யப்பட அமைப்பாகும். சங்கம் மறுப்புத் தெரிவிக்காவிடில், அந்த வலைப்பூவில் வரும் செய்திகள் சங்கத்திற்கெதிராகவே திரும்ப வாய்ப்புள்ளது.

நன்றி:அதிரை போஸ்ட்

Sunday, October 24, 2010

மொபைல்போன் பயன்பாடு குறித்து நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி தரும் அதிர்ச்சி தகவல்

வாஷிங்டன்: உலகம் முழுவதும் 460 கோடி பேர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. மொபைல்போனைபயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் மொபைல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது: மொபைல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மொபைல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் புற்று நோய் ஏற்படும். இதை தவிர உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் இயக்கங்களும் பாதிக்கும். உடலில் உள்ள நுண்ணிய உறுப்புகள் அனைத்தும் பாதிக்கும். ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். இது தொடர்பாக அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. சுவிட்ச் ஆப்செய்யப்படாத மொபைல்போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே உயிரணு எண்ணிக்கை குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளைநாம் உருவாக்க முடியாது. இந்த உண்மைகளை மறைக்க மொபைல்போன் நிறுவனங்கள் ஏராளமான பணங்களை செலவிட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்

இது நம்ம ஏரியா ...............................


















நன்றி ;இர்ஷாத்

அதிரையில் குர்பானி கொடுப்பவர்கள் கவனத்திற்கு

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).



“வசதி இருந்தும் எவர் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நமது தொழுமிடத்திற்கு வரவேண்டாம்” என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.(அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி), ஆதாரம்:அஹ்மது, இப்னு மாஜா)


(எனினும்) குர்பானியின் மாமிசங்களோ அவற்றின் இரத்தமோ அல்லாஹ்வை ஒருபோதும் அடைவதில்லை. ஆனால் உங்களுடைய தக்வா (பயபக்தி) தான் அவனை அடையும். அல்குர் ஆன் 22:37

முஸ்லிம்களின் இரண்டு பெருநாட்களின் ஒன்றான ஹஜ்ஜுப் பெருநாளின் மூன்தமிழ்நாடு குர்பானிறு நாட்களில் அல்லாஹ்விற்காக கொடுக்கப்படும் உலுஹிய்யாவிற்காக வெளிநாடுகளில் வசிக்கும் தமிழக முஸ்லிம்கள் தங்களுக்காகவும் தங்களது குடும்பத்தினருக்காகவும் குர்பானி ஆடு வாங்குவதற்கு முன்கூட்டியே பதிவு செய்ய உதவும் இணையத்தளம். குர்பானி தொடர்பான கட்டுரைகள், சட்டங்களும் இத்தளத்தில் இடம்பெறும் இன்ஷா அல்லாஹ்.
தமிழ்நாடு முழுவதும் ஏஜென்ட்கள் வரவேற்கப்படுகிறார்கள்.


கிரெடிட் கார்டு/கடன் அட்டை மூலம் பதிவு செய்பவர்களின் கவனத்திற்கு:
தமிழ்நாடு குர்பானி விலைகுர்பானியின் சட்டங்களின் முக்கியமானது என்னவென்றால், கொடுக்கப்படும் குர்பானி கடன்பெற்றதாகவோ, அபகரிக்கப்பட்டதாகவோ இருக்கக்கூடாது. அதனால் பிறகு செலுத்தலாம் என்கிற எண்ணத்துடன், செயலுமாக நீங்கள் குர்பானி கொடுக்க நாடினால் அது இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படாது. அதேசமயம் இதனை நீங்கள் பிளாஸ்டிக் பணம் என்கிற வகையில் பயன்படுத்தலாம். அதாவது நீங்கள் செலுத்திய பணத்தை உங்களது கடன் அட்டைக்கு உடனடியாக பணம் செலுத்திவிடவேண்டும்.


TamilNaduQurbani.com

Orange Palace
Shop No 7, #86 Linghi Chetty Street,
Mannady,
Chennai - 600 001

91-44-25227450
91-4373-243208 (அதிராம்பட்டிணம்)
Email: sales@tamilnaduqurbani.com

Buzz This

Wednesday, October 20, 2010

அதிரை தினசரி செய்தியின் முக்கிய அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் அதிரை வாசிகளுக்கு,எமது சாட் பாக்சில் சில சகோதரர்கள் அதிரை தினசரி செய்திகள் என்ற பெயரை மாற்றி அமைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.
அவர்கள் அதற்கு சொன்ன காரனங்கள் எமது தளம் சில குறிப்பிட்ட தெருக்களின் செய்திகள் மற்றும் மரண அறிவிப்புகள் மற்றும் வெளியிடபடுகின்றன என்று கூறிஉள்ளனர். அதிரை தினசரி செய்திகள் என்பது ஒரு குறிப்பிட்ட பகுதியை சார்ந்தது அல்ல.
நாங்கள் தற்போது அதிரையில் இல்லை இது குறிப்பிட்ட சில இளைஞர்கள் முயற்சியால் ஆரம்பிகபட்டன, முஸ்லிம்கள் அனைவரும் சகோதரர்கள் என்ற கோட்பாட்டின் படி உள்ளவர்கள்.

'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.

கருத்து தெரிவித்த சகோதரர்கள் தங்கள் பகுதியில் நடக்கும் சம்பவங்கள் மற்றும் ஆக்கபூர்வமான கட்டுரைகள் எங்களுது மின்அஞ்சலுக்கு adiraidailynews@gmail.com க்கு அனுப்பினால் தங்களுடைய பெயரில் பதியபெறும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்.


Tuesday, October 19, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் சி.எம்.பி. லைன்யை சேர்ந்த மர்ஹும் உமர் தம்பி அவர்களின் மகனும் தாஜுதீன் அப்துல்கதார் ஆகியோரின் சகோதரரும் பைஜல் அவர்களின் தகப்பனாருமான ஜமாலுதீன்(கண்ணாடி) அவர்கள் இன்று காலை சென்னை மண்ணடியில் இன்று காலை மரணம் அடைந்துவிட்டார்கள்.அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.


இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும்மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.


தகவல்: அதிரை பசீர் அஹ்மத்(

மஜ்லிஸ் கார்டன்

)

Thursday, October 14, 2010

அதிரை TNTJ வின் வாழ்வாதார உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிராம்பட்டிணம் கிளையின் சார்பாக கடந்த 29.09.2010 அன்று கடற்கரை தெருவில் வசிக்கும் ஏழை பெண்ணிற்கு வாழ்வாதார உதவியாக ஒரு தையல் மெஷின் வழங்கப்பட்டது.
இதை கிளை நிர்வாகிகளான அப்துல் ஜப்பார்,ஹைதர் அலி ஆகியோர் வழங்கினர்
செய்தி :adirai tntj

Saturday, October 9, 2010

பலஸ்தீனிய சிறுவனை மோதிய இஸ்ரேலியரின் கார்:காணொளியில் காட்சி

தென் ஜெருசலேமில் பலஸ்தீனிய சிறுவன் ஒருவரை இஸ்ரேலியர் காரினால் மோதியதையடுத்து நேற்று அங்கு பதற்ற நிலை தோன்றியுள்ளது.

இது தொடர்பான காணொளிக் காட்சியானது, மேற்படி காரில் சிறுவன் மோதப்பட்டுத் தூக்கி வீசப்பட்டதையும் மற்றுமொரு சிறுவன் மோதமுற்படுவதையும் தெளிவாகக் காட்டுகின்றது.

இதன் பின்னர் ஏனைய சிறுவர்கள் அக்காரைத் தாக்குவதும் இதில் படமாக்கப்படுள்ளது. இத்தாக்குதலில் காரின் பின் கண்ணடி சேதமாக்கப்பட்டது.

நேற்று வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய படையினரால் ஹமாஸ் இயக்க சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

cell company website address

இன்று நம் இந்தியாவில் 15 க்கும் அதிகமான செல்போன் சர்விஸ் தரும் கம்பனிகள் உள்ளன. அவற்றுள் பல வழிகளிலும் நல்ல கம்பெனி எது என்று பார்த்துதான் நாம் கனைக்சன் வாங்கி இருப்போம்.இருந்தாலும் அவ்வப்போது பல கட்டண சலுகைகளை அவர்கள் அறிமுகப்படுதுவார்கள் , அது நமக்கு தெரியாமல் போய்விடும், அல்லது வேறு எதாவது பொது வசதிகள் அல்லது நமது குறைகளை சொல்லவும் அவர்களின் முகவரி நமக்கு தேவையான ஒன்று. இங்கு அனைத்து கம்பனிகளின் இனைய முகவரிகளும் கொடுத்துள்ளேன் .

( படங்களை கிளிக் செய்தாலே போதும். )































இந்த இனைய முகவரிக்குள் சென்றாலே நமக்கு வேண்டிய அனைத்து தகவல்களையும் பெறமுடியும்.