அதிரை கீழதெருவைச் சேர்ந்த மர்ஹூம் மீ.மு. முகமது மீராசாகிப் அவர்களின் மகளும், மர்ஹூம் மு.மு. முகமது உசேன் அவர்களின் மனைவியும், மர்ஹூம் மீ.மு. மொய்தீன் அப்துல் காதர், மர்ஹூம் மீ.மு. முகமது ராவுத்தர் ஆகியோரின் சகோதரியும், M. முகம்மது புகாரி, N.M. அப்துல் வஹாப், P.O. பக்கீர் முகமது ஆகியோரின் மாமியாரும், M. நெய்னா முகமது, M. முகமது தமீம் ஆகியோரின் தாயாரும், N. அகமது ரஜாளி, M. அப்துல் ரஹ்மான், N. அப்துல் ஹக்கீம், P. அப்துல் ஹக்கீம், N. ஜாகிர் உசேன், M. அகமது உசேன் ஆகியோரின் உம்மம்மாவுமான ஹாஜிமா பஜ்ரியா அம்மாள் அவர்கள் இன்று வபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.அன்னாரின் ஜனாஸா இன்று இரவு 9 மணிக்கு பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
Monday, September 16, 2019
மரண அறிவிப்பு-பஜ்ரியா அம்மாள்
அதிரை அல் -அமீன் பள்ளியின் முக்கிய வேண்டுகோள்
Sunday, September 15, 2019
மரண அறிவிப்பு-3எம் அப்துல் ரஹ்மான்
அதிரை ஆலடி தெருவை சேர்ந்த மர்ஹூம் மு.மு. முஹம்மது சாலிஹ் அவர்களின் மகனும் மர்ஹூம் அப்துல் ஹக்கீம், மர்ஹூம் அப்துல் ஃபத்தாஹ் ஆலிம், திரியெம் ஹாஜி முஹம்மது மீராசாஹிப், முஹம்மது அபூபக்கர், மர்ஹூம் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் அ. க. முஹம்மது ஷரீஃப், M H முஹம்மது ஃபாஸி , A H அப்துர் ரவூஃப் ஆகியோரின் மாமனாருமான மு.மு. அப்துர் ரஹ்மான் அவர்கள் இன்று 4.30 மணியளவில் மாலை அவர்களின் ஆலடித்தெரு வீட்டில் மரணம் அடைந்தார்கள். இன்ஷா அல்லாஹ் நாளை காலை நல்லடக்கம் செய்யப்படும்.
மரண அறிவிப்பு -அப்துல் ஜப்பார்
அதிரை நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வா.அ.அகமது தம்பி அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது இப்ராஹீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அகமது மக்தூம், சரபுதீன், அஜ்மல்கான் ஆகியோரின் சகோதரரும், s.முகமது ஜமீல், அப்துல் ரஹீம், முகமது இம்தியாஸ் ஆகியோரின் மாமனாரும், அகமது இப்ராஹீம், ஜுபைர் ஆகியோரின் தகப்பனாருமான அப்துல் ஜப்பார் அவர்கள் இன்று பகல் 3,00 மணியளவில் ஆஸ்பத்திரி தெரு உள்ள இல்லத்தில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன் அன்னாரின் ஜனாஸா இன்று இரவு இஷா தொழுகைக்கு பின் பெரிய ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.
ஏண்டா கோஸ்ட் கோவாலு இதுலையுமாடா .......
அதிரையில் ஆற்று நீர் வந்தாலும் அரசியல் காழ்ப்புணர்ச்சியும் ஆற்று நீரோடு சேர்ந்து வருகிறது.குறிப்பாக அதிரை பகுதி கடைமடை பகுதியாக இருக்கும் நிலையில் சில வருடங்களாக நீர் ஆர்வலர்கள் கடும் முயற்சியில் ஆற்று நீர் குளங்களுக்கு வருகிறது.வரும் பாதைகளில் எத்தனையோ இடைஞ்சல்கள் மத்தியில் ஆற்று நீர் குளத்திற்கு செல்லும்.இதில் தற்போது அரசியல் காழ்ப்புணச்சியும் ஈகோ என்கின்ற கொடும் வியாதியும் தொற்றி கொண்டு அரசியல்வாதிகளை பாடாய்படுத்தி வருகிறது.
ஆக கோஸ்டு கோவாலு ஆகிய நான் சொல்லவருவது குடிநீர் உலகில் பிறந்த அணைத்து உயிர் இனங்களுக்கும் அவசியம் .குடிநீருக்காக போராடும் அனைத்து உள்ளங்களும் அதிரை மக்களால் ஆண்டாண்டு காலம் போற்றப்படும் மண்ணின் மைந்தர்களே.
அதிரையில் உயிர்களை காவு வாங்க துடிக்கும் நாய்கள் கூட்டம்
அதிரை பகுதியில் தற்போது சில மாதங்களாக அதிகளவில் தெருக்களில் நாய்கள் சுற்றித்திரிகின்றன.ரோட்டில் செல்லும்பொதுமக்களை துரத்தி கடிக்கின்றன.
மேலும் பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாகவும் போக்குவரத்திற்கு இடையூறாக ரோட்டில்இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் விபத்துக்குள்ளாகின்றனர்.கஜா புயலுக்கு பின்னர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் இருந்து உணவு இன்றி பசி வெறியில் ஊர் பகுதிகளில் புகுந்து தெருக்களில் செல்லும் பொதுமக்களை துரத்தும் நிகழ்வுகள் பல நடந்து வருகிறது.
மேலும் இரவு நேரங்களில் செல்லும் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர.இதனை அவசர நிலையாக கருத்தில் கொண்டு அதிரை பேரூராட்சி நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கேட்டு கொண்டு உள்ளனர்.
மரண அறிவிப்பு-பெயிண்டர் மைதீன்
அதிரை சுரைக்கா கொல்லை பகுதியை சேர்ந்த கொழும்பார் என்கின்ற முஹம்மது ஜமால் அவர்களின் இளைய மகனும் உவைஸுல் கருணை,செய்யது முஹம்மது,நூர் முஹம்மது அவர்களின் தம்பியான பெயிண்டர் முகைதீன் அவர்கள் இன்று அதிகாலை வபாத்திவிட்டார்கள்.அன்னாரின் ஜனாஸா இன்று காலை 11 மணிக்கு மரைக்கா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
மரண அறிவிப்பு -சித்தி பாத்திமா
ஆஸ்பத்திரிதெருவை சேர்ந்த மர்ஹும் சேக் முஹம்மது அவர்களின் இளைய மகளும், மர்ஹும் அஹமது ஹாஜா அவர்களின் மருமகளும் அன்வர் அவர்களின் மனைவியும், சேக் மீரான், ரிஜ்வான், அர்சத் அஹமது ஆகியோரின் தாயாரும், அப்துல் பாரி, பைசல் அஹமது, அஹமது அஸ்லம் ஆகியோரின் மாமியாருமாகிய சித்தி பாத்திமா வயது 58 அவர்கள் இன்று15-09-2019 காலை திருச்சியில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
அன்னாரின் ஜனாஸா அதிரையில் நல்லடக்கம் செய்யப்படும்.
Friday, September 13, 2019
அதிரையில் நாளை புஹாரி ஷரீப் நிறைவு
புது பொழிவுடன்அதிரை தினசரி செய்திகள்
Saturday, April 14, 2012
சென்னையில் நாளை அதிராம்பட்டினம் ரூரல் டவலப்மென்ட் அஸோசியேஷன் நடத்தும்விழிப்புணர்வு நிகழ்ச்சி
அதிராம்பட்டினம் ரூரல் டவலப்மென்ட் அஸோசியேஷன் நடத்தும்நாம் எப்படி ஆரோக்கியமாக இருக்க முடியும் என்பதை விளக்க விழிப்புணர்வு நிகழ்ச்சி நாளை சென்னை நடைபெறுகிறது.இதில் சென்னையின் அப்போலோ மருத்துவமனையின்தலைச்சிறந்த டாக்டர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள்.இது பெண்களுக்கு மட்டும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. அகவே சென்னை வாழும் அதிரையை சேர்ந்த அணைத்து சகோதரிகளும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம்.
DR . MRS ஷீலா பால், senior Dietician
சென்னை.
DR . MRS. ஹெப்சிபா,
Physiotherapist,General psychologist&orthopaedic RehabilitatorDR . MRS ஷீலா பால், senior Dietician
சென்னை.
DR . MRS. ஹெப்சிபா,
APOLLO HOSIPITAL,CHENNAI
நாள்:ஏப்ரல் 15, 2012 (ஞயிற்றுக்கிழமை )
நேரம் : காலை10.00 மணி முதல் 12.00 மணி வரை
இடம் :எண் 42, மூர் தெரு,தீன் எஸ்டேட்,சென்னை -
நிகழ்ச்சி: பெண்களுக்கு மட்டும்
அனுமதி : இலவசம்
குறிப்பு :தாங்கள் வருவதற்கு முன்பு கிழ்க்கண்ட நபர்களுக்கு போன் அல்லது SMS செய்து தங்கள் பெயர், மற்றும், தங்களுடன் வருபவரின் பெயர் ஆகியவற்றை அவசியம் முன் பதிவு செய்து கொள்ளவும்.
அதிராம்பட்டினம் ரூரல் டெவேலப்மென்ட்
அஸோசியேஷன்
அதிரையில் பாப்புலர் ஃப்ரண்ட் யின் ஏப்ரல் 22 யை முன்னிட்டு நடத்தப்பட்ட தெருமுனை பிரச்சாரங்கள் .
பாப்புலர் ப்ரண்ட் வரும் ஏப்ரல் யில் முஸ்லிம்களின் இட ஓதிகிடு சம்மந்தமாக மிகபெரிய பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் -நெல்லை கோவை ,சென்னை ,மதுரை மற்றும் தஞ்சையில் நடத்த இருகின்றது.இந்நிலையில்ஆங்காங்கே மிக விரைவாக பிரச்சாரங்களும் மற்றும் விளம்பரங்கள் அனல் பறக்கின்றன.அதுசமயம் அதிரையில் நேற்று இதற்கான தெருமுனை பிரசாரம் தக்வா பள்ளியில் தொடங்கி கடற்கரைதெரு,நகர்,பிலால்நகர்,மேலதெரு செக்கடிமேடு,மற்றும் போஸ்ட் ஆபீஸ் தெரு போன்ற ஏழு இடங்களில் மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் நடைபெற்றது.இதில் A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர்)உரையாற்றினர்.இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்
அதிரையில் SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழா .
அதிரையில்SDPI நடத்திய அரசு நலத்திட்ட உதவிகள் பெற்றுக்கொடுக்கும் விழாநேற்று 12 -04 -2012 ஆம் தேதி செக்கடிமேடு SDPI அலுவலகத்தில் நடைபெற்றது .
தமிழக அரசு வழங்கிய விலையில்லா ஆடு மற்றும் மருத்துவ காப்பிட்டு திட்டத்தை ஏரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்களால் பெற்று கொடுக்கப்பட்டது .இந்த விழாவில் M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)தலைமை தாங்கினார் .சிறப்பு அழைப்பாளர்களாக A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) மற்றும் k .முத்துகிருஷ்ணன் (ஏரிப்புரகக்ரை ஊராட்சிமன்ற தலைவர் ) வந்திருந்தனர் மற்றும் இந்த விழா A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் ) மற்றும் A.M .K. முகம்மத் ஹனிப் (நகர தலைவர் ) முன்னிலையில் நடைபெற்றது . இதில் ஏராளமான பொதுமக்கள் பங்குகொண்டு விழாவை சிறப்பித்தனர் .
ஏரிப்புரகக்ரை ஊராட்சியின் SDPI ன் 2 -வது வார்டு உறுப்பினர் S .நூர்ஜஹான் அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
A.அபூபக்கர் சித்திக் (SDPI ன் மாநில செயற்குழு உறுப்பினர் ) ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
2 -வது வார்டு ஜமாத் தலைவர் ஜலீல்அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்குகிறார் .
M .ஆசாத் (SDPI ன் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்)அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
A.K. சாகுல் ஹமிது (மாவட்ட பொருப்புகுழு உறுப்பினர் )அவர்கள் ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
இலியாஸ் அஹ்மத் (மாவட்ட செயலாளர் )அவர்கள்ஆடு மற்றும் காப்பிடு அட்டையை வழங்கும் காட்சி.
முஹம்மத் (SDPI) அவர்கள் நன்றியுரையாற்றும் காட்சி .
by adiraisdpi
by adiraisdpi
Subscribe to:
Posts (Atom)
Blog Archive
- September 2019 (10)
- April 2012 (3)
- September 2011 (3)
- August 2011 (5)
- June 2011 (7)
- May 2011 (2)
- April 2011 (6)
- March 2011 (14)
- February 2011 (14)
- January 2011 (6)
- December 2010 (4)
- November 2010 (6)
- October 2010 (12)
- September 2010 (12)
- August 2010 (8)
- July 2010 (17)
- June 2010 (21)
- May 2010 (18)
- March 2010 (1)
- February 2010 (6)