Showing posts with label சுகாதார விழா. Show all posts
Showing posts with label சுகாதார விழா. Show all posts

Sunday, March 6, 2011

இதுதான் சுகாதாரமா?????

அஸ்ஸலாமு அலைக்கும் நடுத்தெரு கீழ்புறத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியின் அருகாமையில் பள்ளிக் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் குப்பைகளை போடவேண்டாம் என்று மனிதநேய மக்கள் கட்சி (மமக) மற்றும் தமுமுக வேண்டுகோள் விடுத்து இறுந்தது.உடனடியாக அங்கு இறுந்த குப்பை தொட்டி அகற்றபட்டது இதனால் பள்ளி வளாகம் சுத்தமாகவும் சுகதாரமாகவும் இருந்தது ஆனால் இந்த சுகாதாரம் நீண்ட நாள் நீடிக்கவில்லை. மீண்டும் அதே இடத்தில் குப்பை தொட்டியைவைத்து பள்ளி குழந்தைகளுக்கு சுகாதாரம்மற்ற சூழலை ஏற்படுத்தி உள்ளனர்.

அதிரையிலிருந்து:ADN நிருபர் சாலிஹு

Sunday, February 13, 2011

அதிரையில் சுகாதார விழா

அதிராம்பட்டினத்தில் நாளை 14-02-2011 திங்கள் அன்று தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தமிழ்நாடு அரசின் சார்பாக‌ சுகாதார விழா காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறுகிறது. அச்சமயம் காலை 8.00 மணிக்கு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் S.சண்முகம் அவர்கள் தலைமையில்மத்திய இணையமைச்சர் S.S.பழநிமாணிக்கம்அவர்கள் இலவச மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார். பிரபல முன்னணி மருத்துவர்களால் ஸ்கேன் போன்ற அனைத்து வகையான மருத்துவ பரிசோதனைகளும் நடைபெறும். பொதுமக்கள் அனைவரும் தவறாது கலந்து பயன் பெறலாம். உடல் ஊனமுற்றவர்கள் அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு மாற்றுத் திறனாளிக்கான‌ அடையாள அட்டையும் வழங்கப்படும்