Sunday, September 12, 2010
ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் நாளைதேர்வு
Saturday, September 11, 2010
ஆபத்தாகும் காதுக்கான 'பட்ஸ்'
ஆபத்தாகும் காதுக்கான 'பட்ஸ்''பட்ஸ்' என்ற காட்டன் குச்சிகளின் விபரீதம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 'பட்ஸ்' மூலம் காதுகுடைவதை சிலர் நாகரீகத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். காதில் சேரும் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் டாக்டரிடம் செல்வது தான் சிறந்தது.காது 'குரும்பி'யை எடுக்க மூன்று வழிகள் இருக்கின்றன. எந்த முறையை கையாள வேண்டும் என்பது நோயாளியை பொறுத்து தீர்மானிக்க வேண்டிய முடிவு. சிலருக்கு காதின் வெளிப்புறத்திலேயே நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படியான இடத்திலேயே 'குரும்பி' உருண்டையாக திரண்டு நிற்கும். அப்படியிருந்தால் அதை ‘ஊக்கு' போன்ற அமைப்பின் மூலம் வெளியே எடுத்து விடலாம். இதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.ஊக்கை காதுக்குள் செலுத்தும்போது கூச்சத்தில் கொஞ்சம் அசைத்துவிட்டாலும் பிரச்சினைதான். அப்படிப்பட்டவர்களுக்கு மயக்கம் கொடுத்தபிறகுதான் வெளியில் எடுக்க வேண்டும். சிலருக்கு கொஞ்சம் உட்புறமாக காது 'குரும்பி' ஒட்டிக்கொண்டு இருக்கும். இவர்களின் காதில் சொட்டு மருந்தோ அல்லது தேங்காய் எண்ணையையோ போட்டுவிட்டால் 'குரும்பி' அதில் ஊறி தானாகவே வெளியில் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி வரவில்லையென்றால் டாக்டர்கள் நோயாளிக்கு மயக்கம் கொடுத்து 'மைக்ராஸ்கோப்' உதவியோடு அந்த 'குரும்பி'யை எடுத்துவிடுவார்கள். 'குரும்பி'யை உறிஞ்சி வெளியில் எடுக்கவும் கருவிகள் உள்ளன.இன்னொரு முறையும் உள்ளது. 'சிரிஞ்ச்' மூலம் காதுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது தான் அது. காதுக்குள் நேரடியாக என்றில்லாமல் சற்று ஓரமாக தண்ணீரை பீய்ச்ச வேண்டும்.
செவிப்பறை வரை சென்று திரும்பும் தண்ணீர் வழியில் ஒட்டிக்கிடக்கும் காது குரும்பியை எல்லாம் அடித்துக்கொண்டு வந்துவிடும்.இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் காதுக்குள் செலுத்தப்படும் தண்ணீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் நோயாளி மயக்கம் போட்டு கீழே விழும் வாய்ப்பும் இருக்கிறது. காரணம், இந்த வெப்பநிலை வேறுபாடு நமது உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் உள்காது நரம்புகளை தூண்டுவதுதான்.தண்ணீர் மட்டுமல்ல, அதிக குளிர்ச்சியான அல்லது வெப்பமான காற்றுகூட நம்காதுக்குள் போகும்போது மயக்கம் வந்து நாம் நிலைதடுமாறி விழ வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு காது 'குரும்பி'யை எடுக்க ஊக்கை காதுக்குள் நுழைத்தாலே இருமல் வந்துவிடும். சிலர் மயங்கி விழுந்து விடுவார்கள்.இதற்கு காரணம், இதயம் போன்ற முக்கியமான உடற்பாகங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும் 'வேக்ஸ்' நரம்பு தூண்டப்படுவதுதான். வெளிக்காதில் தோலுக்கு அடிப்புறமாக இருக்கும் இந்த நரம்பு மீது லேசாக ஏதாவது பட்டாலே அது தூண்டப்பட்டுவிடும். இப்படி நோயாளிகளுக்கு இருமலோ, மயக்கமோ வரும் பட்சத்தில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு அவர்களை கையாள வேண்டும். இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் காதில் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் டாக்டரிடம் செல்வது தான் நல்லது.அதைவிட்டுவிட்டு இதற்கெல்லாம் கூடவா டாக்டர்களிடம் போவார்கள் என்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது அதிகப்படியான மருத்துவ செலவை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், டாக்டர்கள்.
Tuesday, September 7, 2010
ஷம்சுல்இஸ்லாம் சங்க அறிவிப்பு
இன்ஷா அல்லாஹ்,வருகின்ற 12 -09 -2010. தேதியில் ஞாயிற்றுகிழமை அன்றுகாலை 9 மணியளவில் புதிய சங்கநிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஷம்சுல்இஸ்லாம் சங்க பொதுகுழுகூட்டம் செக்கடிப்பள்ளியில் நடக்க இருப்பதால் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட பொதுகுழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.
இப்படிக்கு,
ஷம்சுல்இஸ்லாம்சங்கம்.
62,புதுமனைதெரு,
அதிராம்பட்டினம்.
Monday, September 6, 2010
அதிரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்.
கூட்டத்தில் அதிராம்பட்டினம் அண்ணாசாலை இருந்த இடத்தில் ரவுன்டானா கட்டிதரவேண்டும். cmp லைன் வாய்க்காலை தூர்வார கேட்பது,தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேட்பது,ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Sunday, September 5, 2010
ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்
ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர் பணி மட்டுமே .ஆசிரியர் என்பவன் ஏணி போன்றவர் எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி மட்டும் அந்த இடத்தில இருக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்.
Wednesday, September 1, 2010
அதிராம்பட்டிணத்தில் ‘’மஸ்ஜிதுத் தவ்ஹீத்’’



அதிராம்பட்டிணத்தில் ‘’மஸ்ஜிதுத் தவ்ஹீத்’’ பள்;ளியின் கட்டிடப் பணி அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் தொடங்கப்பட்டு விட்டது புனித ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக வாரி வழங்குங்கள்.
அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப்பொருளாதார உதவி செய்வதற்கு முன்வருவதன் மூலம் இறையருளுக்குநெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் பாக்கியம்பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.
தனலக்ஷ்மி வங்கி (DHANLAXMI BANK) | |
கணக்கு எண் (Account Number): | 0115010000001353 |
பெயர் (Name): | TAMIL NADU TOWHITH JAMATH |
கிளை (Branch): | ADIRAMPATTINAM |
வங்கி இலக்கம் (Branch Code): | 115 |
ஐசிஐசிஐ வங்கி (ICICI BANK) | |
கணக்கு எண் (Account Number): | 610901143316 |
பெயர் (Name): | S.HYDER ALI |
கிளை (Branch): | PATTUKOTTAI |
Thursday, August 19, 2010
நோன்பு: ஸஹீஹுல் புகாரி
ஒரு கிராமவாசி பரட்டைத் தலையுடன் நபி(ஸல்) அவர்களிடம் வந்தார்; 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் என் மீது கடமையாக்கிய தொழுகை எது என்று சொல்லுங்கள்! என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஐந்து நேரத் தொழுகைகள்! அவற்றைத் தவிர! (கடமையான தொழுகை வேறெதுவுமில்லை; உபரியாக) நீயாக விரும்பித் தொழுதால் மட்டுமே உண்டு!" என்று பதிலளித்தார்கள். அவர் 'அல்லாஹ் என் மீது கடமையாக்கிய ஸகாத் எது என்று எனக்குக் கூறுங்கள்!" என்றார். நபி(ஸல்) அவர்கள், இஸ்லாத்தின் சட்டதிட்டங்களை அவருக்குக் கூறினார்கள். அப்போது அவர், 'சத்தியத்தின் வாயிலாக உங்களை கண்ணியப்படுத்திய இறைவன் மேல் ஆணையாக! நான் உபரியாக எதையும் செய்ய மாட்டேன்; அல்லாஹ் என் மீது கடமையாக்கியதில் எதையும் குறைக்கவும் மாட்டேன்!" என்றார். அப்போது நபி(ஸல்) அவர்கள். 'இவர் கூறுவது உண்மையானால் வெற்றி பெற்றுவிட்டார்!" என்றோ 'இவர் கூறுவது உண்மையானால் இவர் சொர்க்கத்தில் நுழைவார்!" என்றோ கூறினார்கள்
Saturday, August 14, 2010
அய்டாவின் இப்தார் அழைபிதழ்
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 17-08-2010செவ்வாய்க்கிழமை, அன்று 6.30மணிக்கு, ஜித்தா ஷரஃபியா லக்கி தர்பார் ரெஸ்டாரென்டில், அய்டாவின் சார்பில் இப்தார் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அது சமயம் அனைத்து அதிரை சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்து தருமாறு அன்புடன் அழைக்கிறோம்.
அய்டா
Monday, August 9, 2010
குழந்தைகள் பார்வையை பாதுகாக்க
CORRECT VISUAL HABITS FOR CHILDRENபடிக்கும் போதும் , டிவி பார்க்கும் போதும் நேராக உட்கார்ந்தே பார்க்க வேண்டும் , குப்புற படுத்தோ, மல்லாக்க படுத்தோ பார்க்க கூடாது .
டிவி , கணினி பார்க்கும் போது நேராக பார்க்க வேண்டும் , சாய்வான கோணத்தில் பார்க்க கூடாது .
படிக்கும் போதும் ,கணினி பார்க்கும் போது, டிவி பார்க்கும் போதும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை அரை நொடி கண்களை மூடி ஓய்வு எடுக்கவேண்டும் .
சரியான அளவில் வெளிச்சம் இருக்க வேண்டும் , அதிகமான வெளிச்சத்தில் கண்களின் ரெட்டின பாதிப்படையும் , குறைவான வெளிச்சத்தில் கருவிழி தசைகள் சோர்வடையும் . பொதுவாக படிப்பதற்கு குழல் விளக்கை விட குண்டு பல்பு சிறந்தது என்று ஒரு ஆய்வு கூறுகிறது .
அதி காலையில் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும் , ஏன் எனில் கண்கள் புத்துணர்ச்சியுடன் இருக்கும் . நள்ளிரவில் படிக்கும் போது கண் தசைகள் வலுவிழந்து போகும். ( early to bed, early to rise)
வாகனத்தில் போகும் போது படிப்பதை தவிர்க்க வேண்டும் . கண்களுக்கு அதிகபடியான அழுத்தத்தை தரும் . ( விமானத்தில் படிக்கலாம் )
Saturday, August 7, 2010
நோன்பு ஏன் கடமையாக்கப்பட்டது?
மனித சமுகத்தில் தோன்றக்கூடிய எல்லா பிரச்சினைகளும் முஸ்லிம்களுக்கும் ஏற்படும். முஸ்லிம்களுக்கும் அடுத்தவரிடம் கையேந்தக்கூடிய நிலை ஏற்படலாம். அந்த நேரங்களில் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவும் நோன்பு கடமையாக்கப்பட்டது.
இன்று நம் நாட்டில் சுயமரியாதைக்காக பல்வேறு இயக்கங்கள் தன்னுடைய பொன்னான நேரத்தையும், பொருளாதாரத்தையும் செலவழித்து வருகின்றன. ஏனெனில் நம் நாட்டில் சாதியம் என்ற பெயரால் மிகப்பெரிய கொடுமை பெருஞ்சமுதாயத்திற்கெதிராக கட்டவிழ்த்து விடப்படுகிறது.
நாம் அவர்களின் விஷயத்தில் அவர்கள் விரும்பாதவரை தலையிடப் போவதில்லை. ஆனால்; இதில் முஸ்லிம்கள் மிகப்பெரும் பாடம் கற்றுக்கொள்ள வேண்டிய நிலையிலுள்ளார்கள். எந்த நிலையிலும் வயிற்றுப் பசியைக் காரணங்காட்டி யாரிடமும் அடிமைப்பட்டுவிடக்கூடாது மேலும் யாரையும் அடிமைப் படுத்திவிடவும் கூடாது. நமது சுயமரியாதை எப்படி பாதுகாக்கப்பட வேண்டும் என நாம் நினைக்கின்றோமோ அதே போன்று அடுத்தவர்களின் சுயமரியாதையையும் நாம் பேணிப் பாதுகாக்க வேண்டும்.
நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கரையிலும் அவர்களைச் சமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம். (திருக்குர்ஆன் 17:70)
''மக்களே உங்களின் இரத்தமும், செல்வமும் மிக சிறப்பிற்குரியதாகும். அரபா நாளான இன்றைய நாளைப்போல! ஹஜ்ஜுடைய இந்த மாதத்தைப்போல! மக்காவுடைய புனிதத்தைப்போல!
நான் இறைவனின் செய்திகளை உங்களிடம் சொல்லிவிட்டேனா? இறைவனே நீயே இதற்கு சாட்சி. முஸ்லிமின் எல்லா உரிமைகளும் தூய்மையானது. அவன் இரத்தம், செல்வம், மானம் ஆகியவைகளும் புனிதமானது.'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்தில் விதாவில் உரை ஆற்றினார்கள்.
வயிறு பசித்து அடுத்தவனிடம் கையேந்தி அடிமைப்படாமலிருக்க நீண்ட பயிற்ச்சி தேவை. எந்த வகையான பயிற்ச்சியும் இல்லாததின் காரணமாகத்தான் நம்நாட்டில் தீண்டத்தகாதவர்களாகவும், காலணிவாசிகளாகவும் ஆகிப்போனார்கள். இந்த நிலை முஸ்லிம்களுக்கு எந்தக்காலத்திலும் ஏற்பாடாமலிருக்க ஒவ்வொரு வருடமும் இறைவனால் ஏற்படுத்தப்பட்ட பயிற்ச்சிதான் நோன்பு.
அடுத்தவரிடம் பசியின் காரணமாக அடிமைப்படும் அவல நிலை ஒருவேலை நமக்கும் ஏற்பட்டால்; 'ரமழான் மாதத்தில் பசியோடு மாத்திரம் அல்ல! பெருந்தாகத்தோடும் இருந்தேன். அற்ப ஒருபிடி சோறுக்காக என் சுயமரியாதையை விட்டுக்கொடுக்க மாட்டேன். இறைவனல்லாத யாருக்கும் அடிமைப்பட்டுவிட மாட்டேன். பசியென்ன எனக்கு புதிதா? ரமழான் மாதம் முழுவதும் பசித்திருந்தேனே அப்போது யாரிடமும் அடிமைப்பட வில்லையே! இப்போது நான் ஏன் அடிமைப்பட வேண்டும். எக்காரணங்கொண்டும் எனது சுயமரியாதையை எதற்காகவும் அதிலும் குறிப்பாக வயிற்றுக்காக விட்டுக்கொடுக்கவே மாட்டேன்' என்ற வீரஉணர்வை நமக்கு ஊட்டக்கூடிய பயிற்ச்சிதான் நோன்பு.
பிச்சை எடுத்தல்:
நோன்பு கடமையாக்கப்பட்ட நோக்கத்தை ஆராய்ந்துவருகிறோம். இந்த நோன்பு எப்படியெல்லாம், எதற்கெல்லாம் பயிற்ச்சியளிக்கிறது என்று பாருங்கள்.
நீங்கள் தெருக்களில், கடைவீதிகளில் பார்த்திருப்பீர்கள். உடற்கட்டான மனிதன் பார்ப்பதற்கு ஆஜானுபாகுவான ஆள். சைக்கிளிலே கையை விட்டுவிட்டு தன் திறமைகளை வெளிப்படுத்தும் முகமாக சர்க்கஸ் சாகசங்களை செய்துகாட்டுகிறான். அதன் முடிவில் ஒரு டியூப்லைட்டை தரையில் வைத்துக்கொண்டு தன் நெஞ்சால் உடைத்துக் காட்டுவதையும் அதன் பின்னால் தன் வயிறை சுட்டிக்காட்டி எல்லாம் ஒரு ஜான் வயித்துகாகத்தான் என்று சொல்லிக் கொண்டே பிச்சை கேட்பதையும், இது போன்றே மோட்டார் சைக்கிளிலே வேகமாக ஓட்டிக்கொண்டு வந்து சாகசங்கள் செய்து காண்போரை வியக்கவைக்கும் திறமைகள் கொண்டவர்களும் அதன் முடிவில் கடைகடையாக எல்லா நபர்களிடம் பிச்சை கேட்பதையும், அதுபோன்றே கேட்பதற்கினிய குரல் பெற்றிருப்பதால் உடலில் எந்த ஊனமில்லாத நிலையில் பாட்டுப் பாடிக்கொண்டே வயிற்றில் அடித்துக்கொண்டு பிச்சை எடுப்பதையும் நாம் பார்த்திருப்போம்.
இப்படி கஷ்டப்பட்டு சாகசங்கள் செய்பவர்களுக்கு பிரச்சினையாக தெரிவதெல்லாம் ஒரு ஜான் வயிறும்இ பசியம்தான். இவர்கள் எப்படியெல்லாம் திறமைப் படைத்தவர்கள் என்பதை சிந்தித்துப் பாருங்கள். சைக்கிள் ஓட்டுபவரை நாம் பார்க்கும்போது என்ன ஆகுமோ என நாம் பயந்து நடுங்குவோம். மோட்டார் சைக்கிள் ஓட்டுவரை பார்க்கும்போது சொல்லவேண்டிய தேவையே இல்லை. இவர்களை விட திறமையற்றவர்களாகிய பார்வையாளர்கள் மூன்று நேரமும் வயிறாற சாப்பிட்டுவிடுகிறார்கள். ஆனால் பிரமிக்கத்தக்க ஆற்றல் படைத்தவர்களுக்கு சோற்றுக்கு வழியில்லை என்றால் என்ன ஆச்சரியம்.
இவ்வளவு சாகசங்களையும் செய்துக்காட்டி பிச்சை எடுப்பதற்கு முன்னால் ஒரு நிமிடம் சிந்தித்;துப்; பார்த்திருந்தால் பிச்சை எடுப்பதற்கு அவர்களுக்கு மனது வருமா?. நமது செயல்களைப் பார்த்து பயப்படுகிற, ஆச்சிரியப்படுகிற இந்த மக்கள் நன்றாக சாப்பிடுகிறார்களே! நாம் ஏன் நமது திறமைகளை வெளிப்படுத்தி உழைத்து சம்பாதிக்ககூடாது! வாழ்வில் முன்னுக்கு வரக்கூடாது என ஒரு நிமிடம் அவர்கள் சிந்திப்பதற்கு அவகாசம் இல்லை. ஏன் இந்த இழிநிலை?. காரணம் அவர்களுக்கு முறையான பயிற்சி கிடையாது. மனோதத்துவ ரீதியாக தெம்பூட்டுவதற்கு பயிற்ச்சி அளிக்கப்படவில்லை. அவர்களும் தன்னை முறையான பயிற்ச்சிக்கு உட்படுத்திக் கொள்ளவில்லை.
ஒரு முஸ்லிம் வருடாவருடம் பயிற்ச்சியளிக்கப்படுகிறான் இது போன்ற நிலையை சந்திக்ககூடிய முஸ்லிம்கள் மனோதத்துவ பயிற்சி அளிக்கப்படுவதால் தன்னை வெகுவாக மாற்றிக்கொள்ள இயலும்.
இதை சொல்ல வேண்டிய கண்ணியமிக்க உலமாக்கள் ரமழான் மாதம் வந்து விட்டால்; பையை தூக்கிக்கொன்டு வந்துவிடுகிறார்கள். ஒரு மணி நேரம்; அல்லது மக்களது ஆர்வத்தை பொறுத்து அடுக்கடுக்கான வசனங்களால் மார்க்க சொற்பொழிவு நிகழ்த்தி விட்டு மக்களிடம் கை ஏந்திவிடுகிறார்கள். சில கண்ணிமிக்க உலமாக்கள் இதற்காக பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலையிருப்பதால் நோன்பும் வைப்பதும் கிடையாது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அல்லாஹ் பயணத்திலிருப்பவர்களுக்கு நோன்பு வைக்கவேண்டாமென சலுகை தந்துள்ளான் என தப்ஸீர் செய்ய ஆரம்பித்துவிடுவார்கள். இவர்கள் நோன்பின் நோக்கத்தை நன்றாக படித்தவர்கள் அந்தோ பாவம் மகத்துவம் உணராதவர்கள்.
எந்த நேரத்திலும் யாரிடமும் கையேந்தக் கூடாதுஇ எந்த நிலையிலும் நம் சுயமரியாதையை இழந்து விடக்கூடாது என்ற கருத்தில் வருகிற குர்ஆனின் வசனங்களையும், நபிமொழிகளையும் ஆராய்ந்தால் பிச்சை எடுத்தலை இஸ்லாம் எந்த அளவிற்கு வெறுக்கின்றது என்பதைப் புரிந்து கொள்ள இயலும்.
மரண அறிவிப்பு
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம் வல்ல அல்லாஹ், அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்து ஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.
Friday, August 6, 2010
வானத்தில் கழுதை
வானத்தில் கழுதை! கழுதை பறக்குமா? அட பைத்தியம் என்று நீங்கள் நினைக்க கூடும். இந்த அதிசயமும் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. அதுவும் விளம்பரம் பெறுவதற்காக பாராசூட்டில் பறக்க வைத்து பீதியை கிளப்பியுள்ளார்கள்.மனிதன் விளம்பரம் பெற என்னமோ செய்கிறான். இறுதியில் கழுதையையும் பிடித்து விளம்பரப் படுத்துகிறான். இனி வரும் காலத்தில் எதை எதை பிடித்து விளம்பரம் செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை.
ரஷ்யாவின் கடற்கரை ஒன்றில் மோட்டார் மூலம் இயக்கப்படும் பாராசூட்டில் கழுதை விண்ணில் பறக்க விடப்பட்டது. இது விடுமுறையைக் கழிக்க சென்றவர்களிடையே பரபரப்பையும் பீதியையும் உண்டு பண்ணியது.
பாராசூட்டில் கழுதை கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் வேகமாகச் செல்லுமொரு படகில் இணைக்கப்பட்டு பாராசூட் பறக்க விடப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு கழுதை கனைத்தும் அது பறக்க விடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.
இந்த முரட்டுத்தனமான கொடூர செயலைக் கண்டு கடற்கரையில் இருந்த குழந்தைகள் பலர் அழுததாகவும் , கடுமையான சோதனைக்குப் பின்னர் கழுதை கீழே இறக்கப்பட்ட போது பாதி உயிருடன் இருந்ததாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.
விலங்கினங்களை சித்திரவதை செய்வது ரஷ்யாவில் அதிகம் நடக்கும் ஒன்று. சிறிதும் யோசிக்காமல் விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுவதாக பிரித்தானிய சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் ஒன்றே விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தீவிரமான விசாரணைகளையும் பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர் .
நன்றி ; எம்.ரிஷான் ஷெரீப்
Thursday, August 5, 2010
திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி: முன்னாள் மாணவர் சங்க வருடாந்திர சந்திப்பு
நடக்கவுள்ள வைர விழாவில் 1951-ம் ஆண்டு முதல் பயின்ற முன்னாள் மாணவர்கள் அனைவரும் கலந்து கொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் பணிபுரிந்து வரும் முன்னாள் மாணவர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும்படி கல்லூரி நிர்வாகம் அன்போடு அழைப்பதோடு- இதன் பொருட்டு, தங்களது விடுமுறையினையும் அமைத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளது.
விழா மற்றும் வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி குறித்த தகவல்கள் அறிய கீழ் கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது மின்னஞ்சலும் அனுப்பலாம்.
தொடர்பு முகவரி :
ஜமால் முஹம்மது கல்லூரி
7 ரேஸ் கோர்ஸ் சாலை
காஜா நகர்
திருச்சி 620 020
மின்னஞ்சல் : princi@jmc.edu
இணையத்தளம் : www.jmc.edu
Blog Archive
- September 2019 (10)
- April 2012 (3)
- September 2011 (3)
- August 2011 (5)
- June 2011 (7)
- May 2011 (2)
- April 2011 (6)
- March 2011 (14)
- February 2011 (14)
- January 2011 (6)
- December 2010 (4)
- November 2010 (6)
- October 2010 (12)
- September 2010 (12)
- August 2010 (8)
- July 2010 (17)
- June 2010 (21)
- May 2010 (18)
- March 2010 (1)
- February 2010 (6)