Sunday, September 4, 2011

புதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவுன்சிலர்

நீங்கள் பார்க்கும் இந்த புகைபடங்கள் நேற்று முன்தினம் அதிரையில் மழை பெய்த நிலையில்19 வது வார்டு புதுமனை தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அங்கு ஒரு மாதத்துக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளது.அந்த சாலை திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசால் சுமார் ரூ 1கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.சாலையை முன்பு இருந்த பழைய ரோட்டை தூர்வாராமல் அதற்க்கு மேலாக சுமார் முன்று அடிக்கு உயர்த்தி போட்டு இருக்கிறர்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெருவித்தும் அங்கு உள்ள வார்டு உறுப்பினர் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள்.மேலும் இந்த சாலையை மழை தண்ணிர் செல்ல வாட்டம் இல்லாமல் கட்டி இருக்கிறார்கள் .மேலும் இந்த தெருவை முறையாக இந்த வார்டு உறுப்பினர்(பொறுப்பு) சரியாக கவனிக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன.இங்கு அதிரை பேருராட்சி15 நாள்களுக்கு ஒரு முறை தான் குப்பையை சுத்தம் செய்கிறார்கள்.மேலும் இங்கு உள்ள மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.இந்த தெருவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் சாலை மறியலில் இடுபடபோவதாகவும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் எந்த உறுபினர்க்கும் ஓட்டு போடாமல் தேர்தலை புறகணிக்க போவதாக அந்த வார்டு மக்கள் தெருவிக்கிறார்கள்.
நேற்று முன்தினம் மழையால் பாதித்த விடுகளை படத்தில் காணலாம்
மக்கள் நடந்து செல்லும் பொது வழியில் தேங்கி கிடக்கும் மழை தண்ணிர்விட்டின் உள்ள செல்லும் மழை தண்ணிரை வெளியேற்றும் இங்கு உள்ள வாலிபர்கள்

குளம் போல் காட்சி அளிக்கும் CMPலைனுக்கு செல்லும் பொது வழி

மழை தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீரைப்போல் காட்சி அளிகிறது சிமெண்ட் சாலை
ஒரு செருப்பின் அளவு உயர்த்தப்பட்ட அந்த சிமெண்ட் சாலை

Wednesday, August 31, 2011

அதிரையில் நோன்புப் பெருநாள் தொழுகை (காணொளி )_

அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்

இன்று காலை 8 மணியளவில் ஈதுப்பெருநாள் தொழுகை அதிரை சானா வயலில் அமைந்துள்ள முஸல்லாவில் (மைதானத்தில்) பெருந்திரளாக குழுமிய அதிரை பொதுமக்களின் பேராதரவுடன் நடைபெற்றது, அல்ஹம்துலில்லாஹ்.

பெருநாள் குத்பா உரையில், ரமலானுக்குப் பின் நம்முடைய அமல்கள் குறித்தும், இஸ்திஃபார் எனும் பாவமன்னிப்பு தேடுதல் குறித்தும் வலியுறுத்துப்பட்டன.

தொழுகைக்காக மக்கள் அதீதமாக பெருகியுள்ள நிலையிலும் இன்னும் பெருநாள் குத்பாவில் அமராமல் உடன் எழுந்து செல்பவர்களும், வலியுறுத்தியும் குத்பாவின் அவசியத்தை உணராத மக்கள் இன்னும் சிலர் உள்ளார்கள் என்பது வருந்தத்தக்கதே, இந்நிலை வரும் காலங்களில் மாறிட ஏகத்துவ சகோதரர்கள் தேவையான விழிப்புணர்பை ஏற்படுத்த முயல வேண்டும்.

பெண்களுக்கும் ஆண்களுக்கும் தனித்தனி பகுதிகளில் விரிவான ஏற்பாடுகளை ஈத் கமிட்டியினர் சிறப்பான முறையில் செய்திருந்தனர்.




நன்றி அதிரை bbc

Tuesday, August 30, 2011

மரண அறிவிப்பு

புதுமனைத் தெருவைச் சார்ந்த மர்ஹூம் அ.வா.மு. அபூஹனிபா அவர்களின் மகளும், மர்ஹும் மு.வா.மு.சேக் அப்துல் காதர் அவர்களுடைய மனைவியும், ஹாஜி அ.வா.மு.முகைதீன் சாஹிப், மர்ஹூம் அ.வா.மு.முஹம்மது மைதீன், ஹாஜி. அ.வா.மு. முகம்மது இப்றாஹிம் அவர்களுடைய சகோதரியுமாகியஹாஜிமா. சல்மா அம்மாள் அவர்கள் இன்று (30-08-2011) செவ்வாய் கிழமை மணிக்கு மாலை வஃபாத் ஆகிவிட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் இன்ஷா அல்லாஹ் இன்று இரவு 11:30மணிக்கு தக்வா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

பெருநாள் (திடல்) தொழுகை

இன்ஷா அல்லாஹ் பெருநாள் அன்று திடல் தொழுகைக்கு TNTJ அதிரை கிளையின் சார்பாக சேது சாலையில் உள்ள ஜகபர் அலி அவர்களின் இடத்தில் காலை7:30 மணிக்கு நடைபெற உள்ளது .
பெருநாள் குத்பா பேருரையை அஷ்ரஃப்தீன் ஃபிர்தவ்ஷி நடத்துகிறார் இதற்க்கான ஏற்பாடுகளை நகர TNTJ சிறப்பாக செய்து வருகிறது .

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளது .
தகவல் :ஜப்பார்

Sunday, August 28, 2011

அதிரை தினசரி செய்தி குழு அறிவிப்பு

அன்புள்ள அதிரை தினசரி செய்தி வாசகர்களுக்கு சில மாதங்களாக இயங்காமல் இருந்த நமது இனைய தளம் தற்போது இருந்து இயங்க உள்ளது.அதிரையில் உள்ள செய்திகள் இனி நமது தளத்தில் பதியப்படும்.தொடர்ந்து எங்களுக்கு ஆதரவு அளியுங்கள்.
இப்படிக்கு:
அதிரை தினசரி செய்தி குழு

Saturday, August 27, 2011

முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

நகர இந்திய யூனியன் முஸ்லீம் லீக் சார்பில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி(27:08:2011) நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் திரு என் ஆர் ரங்க ராஜன் அவர்களும் முஸ்லிம் லீகின் மாவட்ட தலைவர் மதுக்கூர் அப்துல் காதர் , பேரூர் மன்ற துணைத்தலைவர் இராம குணசேகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர் .





இதற்க்கான ஏற்பாட்டினை நகர முஸ்லிம் லீக் தலைவர் கேகே ஹாஜ நஜ்முதீன் , மாவட்ட இளைஞர் அணிஅமைப்பாளர்அட்வகேட் முனாஃப் .மாவட்ட பிரதிநிதி எம் ஆர் ஜமால் முகமத் ,நகர இளைஞர் அணி அமைப்பாளர் எம் எ. சாகுல் ஹமீத் ,SBIஷேக் அப்துல்லாஹ் உள்ளிட்ட நகர நிர்வாகிகள்சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர் .
thanks to adiraixpress

Friday, June 17, 2011

அதிரை பள்ளிகளின் கல்வி கட்டண விபரம்:

தமிழக அரசு புதிதாக தனியார் பள்ளிகளுக்கு கட்டணத்தை நிர்னைதுள்ளது. அது போல் நமதூர் தனியார் பள்ளிகளின் LKG-முதல்12-ஆம் வகுப்பு வரை அரசு நிர்னைதுள்ள கட்டண விபரம்:
IMAM SHAFI (RAH) MATRIC. HR. SEC. SCHOOL,
ADIRAMPATTINAM,
THANJAVUR - 614 701.
LKG-3500 -UKG-3500-1st-4150 -2nd-4150-3rd- 4150-4th- 4150-5th- 4150-6th- 5300-7th- 5300-8th- 5300-9th- 6450-10-6450-11th- 9500-12th- 9500.

THARBIYATHUL ISLAMIA NURSERY & PRIMARY SCHOOL,
5,HOSPITAL ROAD,
ADIRAMPATTINAM,
LKG-1250-UKG-1250-1st-1350-2nd-1350-3rd-1350-4th-1350-5th-1350 -

OXFORD NURSERY & PRIMARY SCHOOL,
9G,PILLAIYAR KOIL ST,
ADIRAMPATTINAM,
LKG-2050-UKG- 2050-1st- 2150-2nd- 2150-3rd- 2150-4th- 2150-5th- 2150.

OXFORD MATRICULATION SCHOOL,
514-G, NADUVIKKADU,
PUDUKKOTTAI ULIUR,
ADIRAMPATTINAM - 614 701.
LKG-1950-UKG- 1950-1ST- 2400-2nd- 2400-3rd-2400-4th-2400-5th-2400-6th-3350-7th-3350-8th-3350-9th- 340010th- 3400.
நமதூரில் ஏராளமான தனியார் பள்ளிகள் இருக்கின்றன.ஆனால் அரசு இணையத்தளத்தில் அந்த பள்ளிகளின் கல்வி கட்டணத்தை வெளியடவில்லை:

Saturday, June 11, 2011

அதிரை இளைஞர் கால்பந்துக்கழகத்தின் இன்றைய ஆட்டம் (11-06-2011)

இன்று நடந்தஆட்டத்தில்(11-06-2011)மதுக்கூர் அணியும் ஆலத்தூர் அணியும் மோதின. அந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில்ஆலத்தூர்அணி வெற்றிபெற்றன.

மேலநத்தில் நடை பெற்றுக்கொண்டு இருக்கும் கால்பந்து தொடர் போட்டியில் நமதூர் AFFA அணி அரைஇறுதி ஆட்டத்தில் பட்டுகோட்டை அணியை எதிர் கொண்டு 7-3 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

affa அணிஇறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியை எதிர்கொள்கிறது.

அதிரை இளைஞர் கால்பந்துக்கழகத்தின் இன்றைய ஆட்டம் (11-06-2011)

இன்று நடந்த ஆட்டத்தில்(11-06-2011)மதுக்கூர் அணியும் ஆலத்தூர் அணியும் மோதின. அந்த ஆட்டத்தில் 3-1 கோல் கணக்கில் ஆலத்தூர் அணி வெற்றி பெற்றன.

மேலநத்தில் நடை பெற்றுக்கொண்டு இருக்கும் கால்பந்து தொடர் போட்டியில் நமதூர் affa அணி அரைஇறுதி ஆட்டத்தில் பட்டுகோட்டை அணியை எதிர் கொண்டு 7-3 கோல் கணக்கில் அபார வெற்றி பெற்றது.

இறுதி ஆட்டத்தில் தஞ்சாவூர் அணியை எதிர்கொள்கிறது.

சிறப்பாக தொடங்கிய கால்பந்துத்தொடர்போட்டி.


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டிகடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில் நேற்று சிறப்பாக தொடங்கியது. இத்தொடர் போட்டியை அதிராம்பட்டினம் காவல் துறை ஆய்வாளர் உயர் திரு.v.செங்கமலக்கண்ணன் அவர்கள் துவங்கி வைத்தார். நேற்று துவக்க நாள் ஆட்டமாக விளையாட இருந்த டெம்பிள் சிட்டி மதுரை அணி வரமுடியாத காரணத்தால். 7ஸ்டார் காரைக்குடி அணி vs ஸ்ரீரங்கம் கால்பந்துகழகம் திருச்சி அணியும் மோதினர். இந்த ஆட்டத்தில் இருவரும்1-1 கோல் அடித்து சமநிலையில் முடிந்து டிரைபிரேக் முறையில்ஸ்ரீரங்கம் கால்பந்துகழகம் திருச்சி அணி வெற்றி பெற்றது.
இன்று ஆடுகின்ற அணிகள்
YMFC பொதக்குடி VS தஞ்சாவூர் அணி

Friday, June 10, 2011

S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி. துவக்க விழா


அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி.
துவக்க விழா நாள்10-06-2011 வெள்ளி கிழமை இன்று மாலை 5 மணிக்கு
இடம்:கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில்
இன்று துவக்க நாள் ஆட்டமாக விளையாடுகின்ற அணிகள் ஸ்ரீரங்கம் கால்பந்துகழகம் திருச்சி vs டெம்பிள் சிட்டி மதுரை ஆகிய அணிகள் மோதுகின்றன.

சிறப்பு விருந்தினர் மற்றும் ஆட்டத்தை துவக்கி வைப்பவர்
உயர்திரு v.செங்கமலக்கண்ணன் அவர்கள்
காவல் ஆய்வாளர்,
அதிராம்பட்டினம்.

தமிழகத்தின் தலை சிறந்த அணிகள் பங்கு கொள்ளும் இத்தொடர் போட்டியைக்காண வழக்கம் போல் பொதுமக்களும் ,கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களும் திரளாக வருகை தந்து போட்டியைக்கண்டு சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைகின்றோம்.

இங்ஙனம்,
அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம்.
அதிராம்பட்டினம்.

Monday, June 6, 2011

அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் நடத்தும் கால்பந்துத்தொடர்போட்டி

அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம் 17-ஆம் ஆண்டு நடத்தும்S.S.M. குல் முகம்மது நினைவு 10-ஆம் ஆண்டு எழுவர் கால்பந்துத்தொடர்போட்டி.
இன்ஷா அல்லாஹ் வருகின்ற 10-06-2011 வெள்ளிகிழமை முதல் கடற்கரைத்தெரு விளையாட்டு மைதானத்தில் (ITI) அருகில் நடை பெறவுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம்.தமிழகத்தின் தலை சிறந்த அணிகள் பங்கு கொள்ளும் இத்தொடர் போட்டியைக்காண வழக்கம் போல் பொதுமக்களும் ,கால்பந்தாட்ட ரசிகப்பெருமக்களும் திரளாக வருகை தந்து போட்டியைக்கண்டு சிறப்பித்துத் தருமாறு அன்புடன் அழைகின்றோம்.
இவண்,
அதிரை இளைஞர் கால்பந்துக்கழகம்.
அதிராம்பட்டினம்.

Thursday, June 2, 2011

AFFAவின் இன்றைய போட்டி(02-06-2011)

இன்று(02-06-2011) நடந்த ஆட்டத்தில் 7STAR சென்னை VS கலநிவாசல் காரைக்குடி அணிகள் மோதின.அந்த ஆட்டத்தில் இருவரும் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் முடிந்து டிரைபிரேக் முறையில் கலநிவாசல் காரைக்குடி அணி வெற்றி பெற்றது.

நாளை இரண்டு ஆட்டம் நடைபெறும் .

1.AFFA அதிரை VS PKT பட்டுகோட்டை

2.கலநிவாசல் காரைக்குடிVS
நேதாஜி தஞ்சாவூர்