Monday, April 18, 2011

அதிரை AFFC நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி

அதிரை AFFC நடத்தும் 7 ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி அதிரையில் இன்று 18-4 -2o11 கிராணி மைதானத்தில் கோலாகலாமாக தொடங்கியது. இந்த தொடர் போட்டியில் சுமார் 70 அணிகள் பங்கு பெறுகிறது.

முதல் பரிசு 12000
இரண்டாம் பரிசு 10000
மூன்றாம் பரிசு 8000
நான்காம் பரிசு 6000

இவ்வாண்டில் AFFC விளையாடிய அணிகளின் விபரம்:

கரம்பகுடியில் நடைபெற்ற போட்டியில்AFFC அணி மூன்றாவது பரிசுத்தொகை
ரூ5000தட்டிச்சென்றது.

தரகர்தெருவில்ASCTournamentல் முதல் இடத்திற்கானபரிசுத்தொகை ரூ5000தட்டிச்சென்றது.

பழஞ்செட்டிதெருPCC நடத்தியTournament ல்முதல் இடத்திற்கான பரிசுத்தொகை ரூ7000 தட்டிச்சென்றது.

AFCC கிரிக்கெட் அணி சென்ற ஆண்டு விளையாடிய அணைத்து ஆட்டங்களிலும்சிறப்பாக விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அலைக்கும் ஆலடித்தெருவை சேர்ந்த ஹாஜி சேனா மூணா. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகனாரும் SMA அபுல் கலாம் அவர்களின் சகோதரரும் அப்துல் கரீம், அப்துல் ரஜாக் ஆகியோரின் தகபனாருமாகிய சீனிகுச்சி SMA முஹம்மது இப்ராஹீம் அவர்கள் இன்று மாலை 5 மணியளவில் காலமாகிவிட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று இரவு இஷா தொழுகைக்கு பிறகு மறைக்காப்பள்ளி மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

தகவல்:அதிரையிலிருந்துADN நிருபர்

Tuesday, April 5, 2011

அதிரை அல்-அமின் பள்ளிவாசல் பொதுக்கூட்டம்

  • நேற்று திங்கள்கிழமை அஸர் தொழுகைக்கு பிறகு அதிரை அல்-அமின் பள்ளிவாசலில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.இக்கூட்டத்திற்கு நமதூர் மக்கள் திரளாக கலந்து கொண்டனர். PFI மற்றும் தமுமுக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். ஆலிம்கள் மற்றும் அல்-அமின் பள்ளிவாசல் நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • ஆரம்பம் அல்ஹம்து சூராவுடன் அல்லாஹ்வின் பேரருளால் தொடங்கியது. அமிராக அன்சாரி (குலாப்ஜான்) தேர்தெடுக்கப்பட்டார்.
  • இதில் நில வழக்கு தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. இப்போது தமிழகத்தில் சட்ட மன்ற தேர்தல் நடைபெற இருப்பதால் பட்டுகோட்டை தொகுதியில் போட்டியிடும் சில வேட்பாளர்கள் அல்-அமின் பள்ளி பிரச்னை தீர்த்து வைப்போம் எங்களுக்கு ஆதரவளியுங்கள் என்று நச்சரித்து வருகின்றனர் இது குறித்து ஆலோசிக்கப்பட்டது அப்போது சில சகோதரர்கள் வாக்குறிதிகளை எழுத்துபூர்வமாக எழுதி வாங்கவேண்டும் என ஆலோசனையை முன்வைத்தனர்.

தீர்மானங்கள்:
  1. அல்-அமின் பள்ளி பிரச்சனையை அரசியல் ஆக்க கூடாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  2. தொடர்ந்து அல்-அமின் பள்ளிக்கு இடையுறு செய்யும் திமுக கூட்டணிக்கு இத்தேர்தலில் வாக்களிக்க கூடாது.நீங்கள் விரும்பியவர்களுக்கு திமுகவை தவிர வாக்களிக்கலாம்.
  3. எந்த முறையில் அல்-அமின் பள்ளி தொடர்பாக வாக்குறிதி கொடுத்தாலும் நம்ப வேண்டாம் என மனப்பூர்வமாக தீர்மானம் நிறைவேற்ற பட்டது.
  4. பேரூராட்சியில் திமுக சார்பில் உள்ள உறுப்பினர்களே உள்ள நிலையில் நமதூரிலுள்ள சமூக அக்கறையுள்ள இளைஞர்களை பேரூராட்சி தேர்தலுக்கு சுயேட்சையாக போட்டியிட வைக்க வேண்டும் என ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
  5. வாக்கு அளிக்க விருப்பம் இல்லாதவர்கள் 49-O என்ற விண்ணப்பதை பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்த பட்டது.muslim malar

Monday, April 4, 2011

காங்கிரஸ் அதிருப்தி வேட்பாளர் நீக்கம்

ட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரை எதிர்த்து போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர் (காங்கிரஸ் அதிருப்தி) திரு யோகநாதன்  B.A. BL அவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து நீக்கப்படுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தெரிவித்துள்ளார்.

அதிரை பைத்துல்மால் மார்ச்-2011 சேவைகள்

திரை பைத்துல்மாலின் மார்ச் மாத சேவைகள் அறிக்கை. இதில் கூறப்பட்டுள்ள விசயங்களை கவனமாக வாசித்து அதிரைவாசிகள் மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கவும்.

குறிப்பாக ஒருகோடி ரூபாய் மதிப்பிலான வட்டியில்லாக் கடன் திட்டம்,NRI அதிரைவாசிகளுக்கான தொடர் சேமிப்புத் திட்டம், பல்லாவரம் கட்டிட விற்பனை போன்ற விசயங்களில் அதிரைவாசிகளின் கருத்துக்களும் ஆலோசனைகளும் வரவேற்கப்படுகின்றன
.









Friday, April 1, 2011

இது ரேஷன் கடை அல்ல........


இந்த வரிசையை பார்த்தல் உங்களுக்கு என்ன தோன்றுகிறது.இது ரேஷன் கடை அல்ல நேற்று முன்தினம் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது அல்லவா அதை காண நமதூர் ரசிகர்கள் கூடி நிற்கிறார்கள். வழக்கம் போல் நமதூரில் மதியமும் 03 மணிமுதல் 06 மணிவரை மின்நிறுத்தம் செய்யப்பட்டு இருந்தது. இதனால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து.வெளியில் யாராவது மொபைல் வைத்திருந்தால் ஸ்கோர் பார்க்கலாம் என எண்ணி வந்தனர். நடுத்தெருவில் ஒரு கடையில் இன்வேர்ட்டர் மூலம் மேட்ச் பார்த்து கொண்டிருந்தனர்.இதனால் அங்கு ரசிகர்கள் கூட ஆரம்பித்தனர். பாகிஸ்தான் வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்தியா வெற்றி பெற்றதும். பாகிஸ்தான் ரசிகர்களை இந்தியா ரசிகர்கள் கலாய்க்க நமதூரில் நேற்று இரவு முழுவதும் வெடிவெடித்து வெற்றியை கொண்டாடினார்கள்.இறுதி ஆட்டம் நடக்கும் போது மின் நிறுத்தம் இருக்க கூடாது என ரசிகர்கள் விரும்புகிறார்கள். நமதூர் மின் வாரியம் என்ன செய்யும் பொருத்து இருந்து பார்ப்போம்.......
muslim malar

Tuesday, March 29, 2011

குடியை பற்றி ஒரு குடிகாரரின் அட்வைஸ்....

இன்று சமூதாயத்தில் படித்தவர்கள் முதல் பாமரர்கள் வரை குடிக்கு அடிமையாகி இருக்கும் இந்த நேரத்தில் மல்லிப்பட்டினத்தை சார்ந்த சகோ தடா சாகுல் அவர்கள் சொல்லும் அட்வைஸ் கேட்டுத்தான் பார்ப்போமே...

Thursday, March 24, 2011

பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திரு என்.ஆர்.ரெங்கராஜன் போட்டியுடுகிறார்.

திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ் பட்டுகோட்டையில் தொகுதியில் போட்டியிடுகிறது .பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதி வேட்பாளராக திரு என்.ஆர்.ரெங்கராஜன்போட்டியுடுகிறார்.
இவர் போன சட்டமன்ற தேர்தலில் போட்டியுட்டு வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Saturday, March 19, 2011

ம ம க வின் தொகுதி பட்டியல்


சென்னை;வருகின்ற சட்டமன்ற தேர்தலில்அ.இ.அ.தி.மு.க கூட்டணியில் இடம்பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி போட்டியிடும் 3 தொகுதிகளின் பெயர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஆம்பூர், ராமநாதபுரம், சேப்பாக்கம்(திருவல்லிகேணி) ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி தனக்கு ஒதுக்கப்பட்ட 3 தொகுதிகளிலும் ‘இரட்டை மெழுகுவர்த்தி’ சின்னத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

Thursday, March 17, 2011

பட்டுகோட்டை பஸ் ஸ்டாண்டில் அனாதையாக கிடந்த பிளஸ் 2 பொதுத்தேர்வு விடைத்தாள்

பட்டுக்கோட்டை புதிய பஸ் ஸ்டாண்டில், தபால் துறைக்குச் சொந்தமான சில மூட்டைகள், கேட்பாரற்று கிடந்தன. சிறிது நேரத்துக்குப்பின், தபால் துறை ஊழியர் ஒருவர், சாவகாசமாய் வந்து அந்த மூட்டைகளை தஞ்சை செல்லும் பஸ்சில் ஏற்றிவிட்டு, முன்பக்கம் இருந்த இருக்கையில் போய் அமர்ந்து கொண்டார். அதன்பின், விசாரித்த போது, அந்த மூட்டைகள், பிளஸ் 2 மாணவர்களின் பொதுத்தேர்வு விடைத்தாள் என தெரிந்தது. பல மணி நேரம் அனாதையாக கிடந்த அந்த மூட்டைகளை வேண்டும் என்றோ, தவறுதலாகவோ யாரும் எடுத்து சென்றிருந்தால் விபரீதமாகி இருக்கும். பட்டுக்கோட்டையில் இருந்து, தஞ்சை வரை உள்ள விவசாய கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தங்களின் காய்கறி மூட்டைகளோடு மூட்டைகளாக பஸ்சில் இருந்து இறங்கும்போது எடுத்துச் சென்றிருந்தால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி இருக்கும்.

பட்டுக்கோட்டை தலைமை தபால் நிலையத்தில் பணிபுரியும் பெயர் சொல்ல விரும்பாத அதிகாரி ஒருவர் கூறியதாவது: முன்பெல்லாம் இந்த பகுதியில் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வு நடக்கும் பள்ளிகளில் விடைத்தாள்களை தனியாக ஒரு வேன் ஏற்பாடு செய்து சேகரித்து எடுத்துச்செல்வோம். விடைத்தாள்களை இன்ஸ்யூர்டு தபால் மூலம் பதிவு செய்வதாலும், மாணவ, மாணவியரின் எதிர்காலமே இந்த தபாலில் இருப்பதால், அதற்கு முக்கியத்துவம் கொடுப்போம். ஆனால், தற்போது திருச்சியில் உள்ள தமிழ்நாடு மத்திய மண்டல அஞ்சல் துறை தலைவரின் தவறான உத்தரவின் பேரில், ஒவ்வொரு தபால் நிலையத்தில் இருந்தும், தனித்தனியாக பொதுத்தேர்வு விடைத்தாள்களை பஸ்களில் ஏற்றிச் சென்று, தஞ்சை ரயில்வே மெயில் சர்வீசில் சேர்க்க வேண்டும். அப்படி கொண்டு சேர்க்கும் போது தவறும் விடைத்தாள்களின் கதி என்ன என நினைத்து பாருங்கள். இவ்வாறு அவர் கூறினார். ஒரு சில மார்க்குகளில் எத்தனையோ மாணவர்களின் டாக்டர், இன்ஜினியர் கனவு கானல் நீராக போகிறது. இளைய சமுதாயத்தின் வாழ்க்கையையே மாற்றி போடக்கூடிய இந்த வினாத்தாள் மூட்டைகளை கொண்டு சேர்ப்பதில் கல்வித்துறை மற்றும் தபால்துறையினர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கை.

Monday, March 14, 2011

டி.வி. பார்க்காதீர்கள்; அது ஒரு சாத்தான்; இஸ்லாமிய அமைப்பு தீர்மானம்

டெல்லியை தலைமை இடமாக கொண்டு ஜமியாத் உலமா-ஐ-இஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த அமைப்பு டி.வி., சினிமா பார்ப்பது பாவம் என்ற புதிய தீர்மானத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி உள்ளது. டெல்லியில் கடந்த வாரம் இந்த அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- டி.வி., சினிமா பார்ப்பது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். டி.வி. என்பது சாத்தானின் மறு வடிவமாகும்.

அந்த சாத்தான் இஸ்லாமியர்களின் பாரம்பரியத்துக்கும், மரபுக்கும் எதிராக உள்ளது. டி.வி. சாத்தானால் இளைஞர்களின் மனதுக்குள் அசுத்தம் புகுந்து விடுகிறது. அந்த சாத்தானை எவ்வளவு சீக்கிரம் ஒழித்து புதைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.



Wednesday, March 9, 2011

அதிரை அவிஸோவில் நடை பெற்ற மகளிர் தின சிறப்பு நிகழ்ச்சி

அஸ்ஸலாமு அழைக்கும்.
அதிரைஅவிஸோமனவளர்ச்சிக்குன்றியகுழந்தைகள்உண்டு.உறைவிட சிறப்பு பள்ளியில் 8 -3 -2011 அன்று உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் சிறப்பு நிகழ்சிகள் நடைபெற்றது.
இந்த மகளிர் தின நிகழ்ச்சியில் கிராமப்புற பெண்கள் சமுதாய முன்னேற்ற அறக்கட்டளையின் தலைவி திருமதி எஸ்.ராஜேஸ்வரி அவர்களும் அவர்களின் குழு உருபினர்களும் கலந்து கொண்டார்கள்.மகளிர் குழு தலைவி எஸ்.ராஜேஸ்வரி அவர்கள் சமுதாயத்தில் மகளிர் மேம்பட வேண்டும் அவர்களின் வாழ்வு சிறக்கவேண்டும்,கல்வி மற்றும் பொருளாதாரத்தில் சிறந்து விளங்க வேண்டும் சுயதொழில் செய்து பெண்கள் வாழ்வில் சிறப்படைய வேண்டும்.என்று பேசினார்.மேலும் அவிஸோசிறப்பு பள்ளியின் இயலாநிலை குழந்தைகளுக்கு இனிப்பு வழங்கி குழந்தைகளின் நல வாழ்வுக்காக பிராத்தனை செய்தார்.
இந்நிகழ்ச்சியில் அவிஸோ சிறப்பு பள்ளியன் நிறுவனர் மௌலான,மௌலவி,s.s.முஹம்மது ஷைக் அப்துல்லாஹ் மன்பயி,காதிரி.சிறப்பு பள்ளியின் தாளாளர் அவிஸோA.சேக் அப்துல்லாஹ் B.A,ஆசிரியை p. தமிழ் செல்வி msc.mphil,ஆகியோர் கலந்து கொண்டனர்.