டிவியில் பொருத்தப்பட்டுள்ள சென்சார் கருவி, திரையில் இருந்து குறிப்பிட்ட தூரத்துக்குள் யாராவது வந்தால் படத் தெளிவைக் குறைத்து புள்ளி புள்ளியாகி விடும். அதைப் புரிந்து கொண்டு குழந்தை தானாவே குறிப்பிட்ட தூரத்துக்கு செல்ல நேரிடும்.
பாதுகாப்பான அந்த தூரத்தில் இருந்து டிவி பார்த்தால் குழந்தையின் கண்களுக்கு பாதிப்பு ஏற்படாது. பேஸ் டிடெக்ஷன் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ள இந்த டிவியின் சென்சாரால் குழந்தைகளையும் பெரியவர்களையும் பிரித்து அடையாளம் காண முடியும்.
திரையின் அருகே 12 வயதுக்கு குறைந்தவர்கள் வந்தால் மட்டுமே படம் காட்ட டிவி அடம் பிடிக்கும். பெரியவர்கள் வந்தால் திரையில் மாற்றமிருக்காது.தவிர, டிவி பார்க்கும் முறைகள் பற்றி திரையில் டிஸ்ப்ளேவும் இடம்பெறும். அறையில் இருப்பவர் எழுந்து சென்று விட்டால், சில விநாடிகளில் டிவி தானாக ஆப் ஆகி விடும் தொழில்நுட்பமும் இதில் உண்டு. இதன்மூலம், மின் சிக்கனம் ஏற்படும்.
நன்றி:திலீப்
இது போல் "அழும் சீரியல்' வந்தால்
ReplyDeleteதானாக கரன்ட் சப்ளை நின்றுவிடும்
T.V இருந்தால் எத்தனையோ ஆண்களுக்கு
நேரத்துக்கு சாப்பாடு கிடைக்கும்...
அந்த T.V விக்கிற புண்ணியவான் எங்கே
இருக்கிறான்...
ZAKIR HUSSAIN