ஒட்டுமொத்த பிரபஞ்சமும் ஒரே புகைப்படமாக நமக்கு கிடைத்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த புகைப்படத்தின் மூலம் பிரபஞ்சம், நடத்திரங்கள், கோள்கள், தாதுக்கள், உயிர்கள் உருவானது குறித்த ஆய்வுகள் மேலும் மேம்படும் என ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு 'பிங் பேங்' எனப்படும் பேரண்ட வெடிப்புக்குப் பின்னர் பிரபஞ்சம் உருவானது.
அப்போது உருவான ஒளியி்ன் மிச்சத்தையும் இந்த செயற்கைக் கோள்படம்
படத்தின் இரு ஓரங்களிலும் காணப்படும் ஒளி, 13.7 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பேரண்ட வெடிப்பில்போது உருவான முதல் ஒளியின் மிச்சமாகும்.
இந்தப் படம் நமக்குக் காட்டுவது பிங்-பேங் வெடிப்பைத் தொடர்ந்து பரவிய தூசி, வாயு மண்டலங்களின் கதிர்வீச்சு தான். இந்தக் கதிர்வீ்ச்சைத் தான் பிளாங்க் செயற்கைக் கோளில் உள்ள மைக்ரோவேவ் தொலைநோக்கி தனது இன்ப்ரா-ரெட் (Infra red) லென்ஸ் மூலம் படம் பிடித்துள்ளது.
இந்த முழுப் படமும் இன்ப்ரா ரெட் கதி்ர்வீச்சை 9 அலைவரிசைகளாகப் படம்பிடித்து ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டதாகும்.
கடந்த ஆண்டு ஏவப்பட்ட ஐரோப்பிய விண்வெளி கழகத்தின் செயற்கைக்கோள் நேற்று இந்தப் படத்தை எடுத்தது.
இந்தப் புகைப்படம் குறித்து ஐரோப்பிய விண்வெளி ஆய்வு மையமத்தின் அறிவியல், ரோபோட்டிக் பிரிவு இயக்குநர்
விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ள பிளாங்க் செயற்கைக்கோள் 2012ம் ஆண்டு வரை செயல்படும். அதற்குள் பிரபஞ்சத்தை முழுவதுமாக ஸ்கேன் செய்து இதேபோன்ற மேலும் நான்கு புகைப்படங்களை அது அனுப்பவுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!