

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்துனர்களுக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை ஒரு மடல் உங்கள் வலைத்தளத்தில் வந்ததைப் படித்தோம். United Foundation ஒரு பொதுநலச் சேவை நிறுவனமாகும். பொதுவாக நமதுரைப் பொருத்தவரை, பொது நலத்தில் ஈடுபடும் தனி நபரையோ நிறுவனத்தையோ குறைகளை மட்டுமே தூண்டித் துருவிப் பார்த்து, அவற்றை ஃபசாதாக்கித் திரிவதுதான் சிலரின் பழக்கமாக இருந்து வருகின்றது. இந்த வலையில் அதிரை எக்ஸ்பிரஸ் சிக்கிவிடக் கூடாது என்பதே எமது விருப்பமும் வேண்டுகொளுமாகும்.
நீங்கள் இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு முன் எங்களைத் தொடர்பு கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். அதற்கு விளக்கம் அளிப்பது எங்கள் கடமையாகும். சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்:
1. அந்தச் சகோதரி, 'ஏமாற்று' என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏமாற்று என்றால், முறைப்படி கேஷ் ரசீது கொடுக்கப்பட்டிருக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
2. பில்களில் தொகைகள் அழிக்கப்படவில்லை; திருத்தப்படவுமில்லை; கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. எழுதியது நாங்களில்லை. டெலிபோன் டிபார்ட்மெண்ட்.
3. அதிராம்பட்டினம் SDE அவர்களை நேரில் சந்தித்து விசாரித்தபோது, அந்தக் குறிப்பிட்ட மாதங்கள் '0' என்று கணினியில் பார்த்து, புகாரளித்தவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தஞ்சை A.O. வான சந்திரசேகரன் (TR) 04362234300 அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என்னிடம் யாரும் பேசவில்லை" என்றார். புகார் செய்தவர் எந்த நம்பரில் பேசினார் என்பதைக் கேட்கச் சொன்னார். அவரிடமே 'டெப்பாசிட் கணக்கில் எதுவும் running account ல் கழிப்பீர்களா?' என்று கேட்டதற்கு, 'close செய்யப்பட்ட கணக்கில் மட்டுமே டெப்பாசிட் கழிக்கப்படும்' என்றார்.
4. அதிரை U.F. அலுவலகத்தில், புகார் கூறியுள்ள நபர் பேசியது, இரண்டே இரண்டு நிமிடங்கள்தான். அவர் பெண் என்பதால், அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேச முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பெண் கூறிய தகவல்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டி விளக்கம் கூற முடியாது. சுருக்கமாக, அந்தத் தொகை எங்களுக்குச் சேரவேண்டியது என்று மட்டும் சொல்லப்பட்டது.
மொத்தத்தில், அந்தக் குற்றச்சாட்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம். 'படித்த பெண்' என்று பெருமைப் படுவதில் தவறில்லை. பொறுமை, நிதானம், தீர விசாரித்தல் போன்றவை கற்றோர் இயல்பு என்பதை எல்லோரும் அறிவர்.
எமது நிறுவனத்தில் இது போன்று யாருக்கேனும் சந்தேகங்கள், குறைகள் இருப்பின், நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் விவரம் கேட்டுக்கொள்ளலாம். எங்களிடம் ஒளிவு மறைவு என்பது இல்லை. இப்புகார் பற்றி மேற்கொண்டு விவரம் அறிய வேண்டுமாயின், சம்மந்தப்பட்ட நபரோ, அவர் சார்பில் யாரேனும் ஆண் உறுப்பினரோ, நேரில் வந்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
இதோ, எங்கள் மின்னஞ்சல் முகவரி: uf.adirai@gmail.com
இப்படிக்கு,
ஹாஜா ஷரீப் - 03/11/2010








உலககோப்பை கால்பந்தாட்டத்தின் புகழ்பெற்ற போல் ஒக்டோபஸ் நேற்று செவ்வாய்க்கிழமை ஜேர்மனியில் திடீரென உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
இதன் காரணமாக போல் பாராமரிக்கப்பட்டு வந்த மீன் காட்சியக ஊழியர்கள் பெரும் கவலையடைந்துள்ளனர்.
இது தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த அவர்கள்,
" போல் ஒக்டோபஸின் எதிர்பாராத மரணம் எங்களை கடும் சோகத்திற்கு ஆளாக்கியுள்ளது. இரவு உறக்கத்திலேயே அது உயிரிழந்துள்ளது. அதன் நினைவாக அ மரணம் து புதைக்கப்படவுள்ள இடத்தில் நினைவுத் தூபியொன்றை நிர்மாணிக்க உத்தேசித்துள்ளோம்" எனத் தெரிவிக்கின்றனர்.
இவ்வருடம் தென்னாபிரிக்காவில் இடம்பெற்ற உலகக்கிண்ன உதைபந்தாட்ட போட்டிகளில் ஜேர்மனி பங்குபற்றிய மற்றும் இறுதிப்போட்டி ஆகியவற்றின் வெற்றியாளர்களை முன்கூட்டியே, சரியாகத் தெரியப்படுத்தி ஒக்டோபஸ் பெரும் புகழடைந்திருந்தது.
வாஷிங்டன்: உலகம் முழுவதும் 460 கோடி பேர் மொபைல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. மொபைல்போனைபயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர். இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் மொபைல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது: மொபைல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. மொபைல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் புற்று நோய் ஏற்படும். இதை தவிர உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் இயக்கங்களும் பாதிக்கும். உடலில் உள்ள நுண்ணிய உறுப்புகள் அனைத்தும் பாதிக்கும். ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும். இது தொடர்பாக அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. “சுவிட்ச் ஆப்” செய்யப்படாத மொபைல்போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே உயிரணு எண்ணிக்கை குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளைநாம் உருவாக்க முடியாது. இந்த உண்மைகளை மறைக்க மொபைல்போன் நிறுவனங்கள் ஏராளமான பணங்களை செலவிட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்" என அனஸ்(ரலி) அறிவித்தார்.
அஸ்ஸலாமு அழைக்கும் சி.எம்.பி. லைன்யை சேர்ந்த மர்ஹும் உமர் தம்பி அவர்களின் மகனும் தாஜுதீன் அப்துல்கதார் ஆகியோரின் சகோதரரும் பைஜல் அவர்களின் தகப்பனாருமான ஜமாலுதீன்(கண்ணாடி) அவர்கள் இன்று காலை சென்னை மண்ணடியில் இன்று காலை மரணம் அடைந்துவிட்டார்கள்.அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில் நல்லடக்கம் செய்யப்படும்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
(إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ"நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"
எல்லாம்வல்லஅல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும்மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ்கொடுப்பானாக.ஆமீன்.
தகவல்: அதிரை பசீர் அஹ்மத்(
மஜ்லிஸ் கார்டன்
)