Wednesday, September 7, 2011

உயிர் காக்க உதவுங்கள்

மதுரையை சார்ந்த ஹக்கீம் ராஜா அவர்களின் 3 வயது சிறுவன் இரத்த புற்று நோயால் பீடிக்கப்பட்டு மிகவும் கஷ்ட்டபட்டுவருகிறான் ஏழ்மை குடும்பத்தை சார்ந்த கூலி தொழிலாளியான இவரது தந்தை இச் சிறுவனை மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறான்

இதற்க்கு 4லட்சம் வரை செலாவகும் என மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது

இந்த தொகையை திரட்டுவதற்கு மிகவும் கஷ்ட்டப்படும் இச் சகோதரர்க்கு தங்களால் முடிந்த உதவிகளையும்/துஆக்களையும் செய்து இச்சிறுவனின் உயிர்காக்க உதவிடுங்கள் .

இதனை மருத்துவமனையில் தொடர்புகொண்டு ஊர்ஜிதம் செய்து கொண்ட பின்னரே பதிவேற்றப்பட்டது)மருத்துவமனையின் தொலைபேசி எண்: +91-452-2588741 / 2581212 / 4263000

thanks to ax

Sunday, September 4, 2011

அதிராம்பட்டிணம் அருகே புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி!

3

அல்லாஹ்வின் பேரருளால்…
CMN சலீம் அவர்களின் முயற்சியால் ECR ரோட்டில் அமைந்துள்ள அதிராம்பட்டிணத்தில் இருந்து 35 கிலோமீட்டர் தொலைவில் உள்ள அம்மாபட்டிணம் அருகே இன்ஷா அல்லாஹ் இஸ்லாமிய அடிப்படையில்…
புதிய பெண்கள் கலை அறிவியல் கல்லூரி வருகிற கல்வி ஆண்டு முதல் துவங்கப்பட உள்ளது.
100 கல்வி ஆர்வலர்களின் முதலீட்டில் உருவாக உள்ள இக்கல்வி நிறுவனத்தில் நீங்களும் முதலீடு செய்து பங்குதாரராக ஆகலாம்.

இஸ்லாமிய அடிப்படையில் பெண் கல்வியாளர்களை உருவாக்கிடவும் இந்த சிறப்புமிகு முயற்சிக்கு துணை செய்து இறைவனுடைய அருளைப் பெறலாம்.
மேலும் விபரங்களுக்கு
CMN சலீம்
93821 55780
cmnsaleem@yahoo.co.in

புதுமனை தெருவின் அவல நிலை. கண்டு கொள்ளாத வார்டு கவுன்சிலர்

நீங்கள் பார்க்கும் இந்த புகைபடங்கள் நேற்று முன்தினம் அதிரையில் மழை பெய்த நிலையில்19 வது வார்டு புதுமனை தெருவில் எடுக்கப்பட்ட புகைப்படம்.
அங்கு ஒரு மாதத்துக்கு முன் சிமெண்ட் சாலை போடப்பட்டு உள்ளது.அந்த சாலை திட்டத்துக்கு கடந்த திமுக ஆட்சியில் தமிழக அரசால் சுமார் ரூ 1கோடிஒதுக்கப்பட்டு உள்ளது.சாலையை முன்பு இருந்த பழைய ரோட்டை தூர்வாராமல் அதற்க்கு மேலாக சுமார் முன்று அடிக்கு உயர்த்தி போட்டு இருக்கிறர்கள். அதற்கு அங்குள்ள மக்கள் எதிர்ப்பு தெருவித்தும் அங்கு உள்ள வார்டு உறுப்பினர் (பொறுப்பு) மற்றும் அதிகாரிகளும் கண்டு கொள்ளாமல் இருந்து இருக்கிறார்கள்.மேலும் இந்த சாலையை மழை தண்ணிர் செல்ல வாட்டம் இல்லாமல் கட்டி இருக்கிறார்கள் .மேலும் இந்த தெருவை முறையாக இந்த வார்டு உறுப்பினர்(பொறுப்பு) சரியாக கவனிக்கவில்லை என்று புகார்கள் வருகின்றன.இங்கு அதிரை பேருராட்சி15 நாள்களுக்கு ஒரு முறை தான் குப்பையை சுத்தம் செய்கிறார்கள்.மேலும் இங்கு உள்ள மின் விளக்குகள் சரியாக எரியவில்லை.இந்த தெருவுக்கு அடிப்படை வசதிகள் செய்து தராவிட்டால் சாலை மறியலில் இடுபடபோவதாகவும் மற்றும் வரும் உள்ளாச்சி தேர்தலில் எந்த உறுபினர்க்கும் ஓட்டு போடாமல் தேர்தலை புறகணிக்க போவதாக அந்த வார்டு மக்கள் தெருவிக்கிறார்கள்.
நேற்று முன்தினம் மழையால் பாதித்த விடுகளை படத்தில் காணலாம்
மக்கள் நடந்து செல்லும் பொது வழியில் தேங்கி கிடக்கும் மழை தண்ணிர்விட்டின் உள்ள செல்லும் மழை தண்ணிரை வெளியேற்றும் இங்கு உள்ள வாலிபர்கள்

குளம் போல் காட்சி அளிக்கும் CMPலைனுக்கு செல்லும் பொது வழி

மழை தண்ணீர் செல்ல முடியாமல் கழிவு நீரைப்போல் காட்சி அளிகிறது சிமெண்ட் சாலை
ஒரு செருப்பின் அளவு உயர்த்தப்பட்ட அந்த சிமெண்ட் சாலை