Friday, August 6, 2010

வானத்தில் கழுதை

வானத்தில் கழுதை! கழுதை பறக்குமா? அட பைத்தியம் என்று நீங்கள் நினைக்க கூடும். இந்த அதிசயமும் ரஷ்யாவில் நடைபெற்றுள்ளது. அதுவும் விளம்பரம் பெறுவதற்காக பாராசூட்டில் பறக்க வைத்து பீதியை கிளப்பியுள்ளார்கள்.

மனிதன் விளம்பரம் பெற என்னமோ செய்கிறான். இறுதியில் கழுதையையும் பிடித்து விளம்பரப் படுத்துகிறான். இனி வரும் காலத்தில் எதை எதை பிடித்து விளம்பரம் செய்ய போகின்றார்கள் என்று தெரியவில்லை.

ரஷ்யாவின் கடற்கரை ஒன்றில் மோட்டார் மூலம் இயக்கப்படும் பாராசூட்டில் கழுதை விண்ணில் பறக்க விடப்பட்டது. இது விடுமுறையைக் கழிக்க சென்றவர்களிடையே பரபரப்பையும் பீதியையும் உண்டு பண்ணியது.

பாராசூட்டில் கழுதை கட்டித் தொங்க விடப்பட்ட நிலையில் வேகமாகச் செல்லுமொரு படகில் இணைக்கப்பட்டு பாராசூட் பறக்க விடப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்தனர். சுமார் 30 நிமிடங்களுக்கு கழுதை கனைத்தும் அது பறக்க விடப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.

இந்த முரட்டுத்தனமான கொடூர செயலைக் கண்டு கடற்கரையில் இருந்த குழந்தைகள் பலர் அழுததாகவும் , கடுமையான சோதனைக்குப் பின்னர் கழுதை கீழே இறக்கப்பட்ட போது பாதி உயிருடன் இருந்ததாகவும் ரஷ்ய செய்தி நிறுவனங்கள் சில தெரிவித்துள்ளன.

விலங்கினங்களை சித்திரவதை செய்வது ரஷ்யாவில் அதிகம் நடக்கும் ஒன்று. சிறிதும் யோசிக்காமல் விலங்குகள் கொடுமைப் படுத்தப்படுவதாக பிரித்தானிய சேவை அமைப்பை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார். ரஷ்யாவை சேர்ந்த பொழுது போக்கு நிறுவனம் ஒன்றே விளம்பரத்துக்காக இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்த தீவிரமான விசாரணைகளையும் பொலிசார் முடுக்கி விட்டுள்ளனர் .

நன்றி ; எம்.ரிஷான் ஷெரீப்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!