Wednesday, November 17, 2010

மரண அறிவிப்பு

அஸ்ஸலாமு அழைக்கும் ஆஸ்பத்திரி தெருவை சேர்ந்த மர்ஹும் அ.மு.க.அகமதுஅலி அவர்களின் மகனும் முஹம்மது நாசர்அவர்களின்சகோதரர்மான அ.மு.க.முஹம்மதுஷரிப் அவர்கள் இன்று மதியம் 3.00மணியளவில் சென்னையில் மரணம் அடைந்துவிட்டார்கள்.
அன்னாரின் ஜனாசா சென்னை ராயபேட்டை பள்ளியில்இன்று இஷா தொழுகைக்கு பிறகு நல்லடக்கம் செய்யப்படும்.

இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். (إِنَّا لِلَّـهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ "நிச்சயமாக நாம் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்;, நிச்சயமாக நாம் அவனிடமே திரும்பிச் செல்வோம்"

எல்லாம் வல்ல அல்லாஹ்,அன்னாரின்எல்லாபாவங்களையும் மன்னித்துஜன்னத்துல்பிர்தௌஸ் கொடுப்பானாக ஆமீன்

அதிரைக்கு வந்துள்ள குர்பானி ஒட்டகம்


Saturday, November 6, 2010

அதிரையில் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் ஆரம்பம்

அதிராம்பட்டினம் ஜாவியாவில் தொன்றுதொட்டு நடைபெற்று வரும் புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்ஷாஅல்லாஹ் வருகின்ற நாளை 07-11-2010 ஞாயிற்றுக்கிழமை முதல் ஆரம்பமாகி தொடர்ந்து 40 நாட்கள் நடைபெறும். தினசரி காலை 6.00 மணிக்கு தொடங்கி மார்க்க அறிஞர்களின் பயானுடன் நிறைவுபெறும். முஸ்லீம் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து மஜ்லிஸை சிற‌ப்படைய செய்வதுடன் அல்லாஹ்வின் ரஹ்மத்தைப் பெற்று நற்பயன் அடைவோமாக.

Friday, November 5, 2010

யுனைட்டெட் பவுண்டேஷன் அதிரை எக்ஸ்பிரஸ்க்குஅளித்த பதில்

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்துனர்களுக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை ஒரு மடல் உங்கள் வலைத்தளத்தில் வந்ததைப் படித்தோம். United Foundation ஒரு பொதுநலச் சேவை நிறுவனமாகும். பொதுவாக நமதுரைப் பொருத்தவரை, பொது நலத்தில் ஈடுபடும் தனி நபரையோ நிறுவனத்தையோ குறைகளை மட்டுமே தூண்டித் துருவிப் பார்த்து, அவற்றை ஃபசாதாக்கித் திரிவதுதான் சிலரின் பழக்கமாக இருந்து வருகின்றது. இந்த வலையில் அதிரை எக்ஸ்பிரஸ் சிக்கிவிடக் கூடாது என்பதே எமது விருப்பமும் வேண்டுகொளுமாகும்.

நீங்கள் இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு முன் எங்களைத் தொடர்பு கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். அதற்கு விளக்கம் அளிப்பது எங்கள் கடமையாகும். சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்:

1. அந்தச் சகோதரி, 'ஏமாற்று' என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏமாற்று என்றால், முறைப்படி கேஷ் ரசீது கொடுக்கப்பட்டிருக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
2. பில்களில் தொகைகள் அழிக்கப்படவில்லை; திருத்தப்படவுமில்லை; கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. எழுதியது நாங்களில்லை. டெலிபோன் டிபார்ட்மெண்ட்.
3. அதிராம்பட்டினம் SDE அவர்களை நேரில் சந்தித்து விசாரித்தபோது, அந்தக் குறிப்பிட்ட மாதங்கள் '0' என்று கணினியில் பார்த்து, புகாரளித்தவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தஞ்சை A.O. வான சந்திரசேகரன் (TR) 04362234300 அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என்னிடம் யாரும் பேசவில்லை" என்றார். புகார் செய்தவர் எந்த நம்பரில் பேசினார் என்பதைக் கேட்கச் சொன்னார். அவரிடமே 'டெப்பாசிட் கணக்கில் எதுவும் running account ல் கழிப்பீர்களா?' என்று கேட்டதற்கு, 'close செய்யப்பட்ட கணக்கில் மட்டுமே டெப்பாசிட் கழிக்கப்படும்' என்றார்.
4. அதிரை U.F. அலுவலகத்தில், புகார் கூறியுள்ள நபர் பேசியது, இரண்டே இரண்டு நிமிடங்கள்தான். அவர் பெண் என்பதால், அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேச முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பெண் கூறிய தகவல்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டி விளக்கம் கூற முடியாது. சுருக்கமாக, அந்தத் தொகை எங்களுக்குச் சேரவேண்டியது என்று மட்டும் சொல்லப்பட்டது.

மொத்தத்தில், அந்தக் குற்றச்சாட்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம். 'படித்த பெண்' என்று பெருமைப் படுவதில் தவறில்லை. பொறுமை, நிதானம், தீர விசாரித்தல் போன்றவை கற்றோர் இயல்பு என்பதை எல்லோரும் அறிவர்.

எமது நிறுவனத்தில் இது போன்று யாருக்கேனும் சந்தேகங்கள், குறைகள் இருப்பின், நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் விவரம் கேட்டுக்கொள்ளலாம். எங்களிடம் ஒளிவு மறைவு என்பது இல்லை. இப்புகார் பற்றி மேற்கொண்டு விவரம் அறிய வேண்டுமாயின், சம்மந்தப்பட்ட நபரோ, அவர் சார்பில் யாரேனும் ஆண் உறுப்பினரோ, நேரில் வந்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
இதோ, எங்கள் மின்னஞ்சல் முகவரி: uf.adirai@gmail.com

இப்படிக்கு,
ஹாஜா ஷரீப் - 03/11/2010


Wednesday, November 3, 2010

யுனைடெட் பவுண்டேஷன் பற்றிய திடுக்கிடும் புகார்

நான் அதிரை எக்ஸ்பிரஸ் வலைத்தளத்தில் வரும் அனைத்து பகுதிகளையும் படித்து வருகிறேன். நம்மூரில் உள்ள பொது பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்க நம்மூர் சகோதரர்கள் உதவியுடன் தாங்கள் வழிவகை செய்துள்ளதை அறிவேன்.


எனக்கு ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினைக்கு தங்களால் தீர்வு கிடைக்கும் என்ற
நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். நான் இத்துடன் டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கான 4 பில்களையும், நான் யுனைடெட் பவுண்டேஷனில் பணம் கட்டியதற்கான 4 ரசீதுகளையும் இணைத்துள்ளேன்.

BILL - 1




BILL - 2




BILL - 3




BILL - 4




நான் என் தொலைபேசிக்கட்டணத்தை யுனைடெட் பவுண்டேஷன் அமைப்பு மூலம் செலுத்தி வருகிறேன். என் கணவர் அவ்வப்போது எல்லா பில்களையும் வரிசைப்படி ஒழுங்கு படுத்துவது வழக்கம். அப்போது தான் நாங்கள் யுனைடெட் பவுண்டேஷன் அமைப்பு மூலம் ரூ.1878 ஏமாற்றப்பட்டுள்ளதை அறிந் தோம்.

விபரம் வருமாறு:

1) டிசம்பர் மாத பில்: ரூ.2201.

2) 05/02/2010- ல் ரூ.2201 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டேன்.

3) ஜனவரி மாத பில்: ரூ 724.

(குறிப்பு : பி.எஸ்.என்.எல்- ல் சிடிஆர் பில்லிங் முறை அறிமுகப்படுத்த ஆயத்தப் பணிகள் நடந்ததால் பில்கள் தாமதமாக வந்ததும் அதிரை மக்களுக்கு நினைவிருக்கலாம்)

4) 11/03/2010- ல் ரூ 724 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டேன்.

5) பிப்ரவரி மாத கட்டணம் ரூ. 0.00 என வந்தது.

6) ஆனால் யுனைடெட் பவுண்டேஷனில் பணிபுரிபவர், பிப்ரவரி மாத கட்டணம் ரூ.662 என்று சொன்னார். நானும் அவர் சொல்லியபடி 08/04/2010 அன்று ரூ.662 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டேன்.

7) மார்ச் மாத கட்டணம் ரூ.0.00 என வந்தது.

8) ஆனால் யுனைடெட் பவுண்டேஷனில் பணிபுரிபவர், மார்ச் மாத கட்டணம் , ரூ1216 என்று சொன்னார் . நானும் அவர் சொல்லியபடி 22/04/2010 அன்று , ரூ.1216 செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டேன்.

அப்போது இரண்டு பில்களிலும் பேனாவால், ரூ.0.00 என்பது, ரூ.662,ரூ1216 என்று திருத்தப்பட்டு இருந்தது. அந்த அமைப்பின் மீது இருந்த நம்பிக்கையால் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் நானும் அவர் சொல்லும் கட்டணத்தை செலுத்தி ரசீது பெற்றுக்கொண்டேன்.

என் கணவர் பில்களை வரிசைப்படுத்தும்போது, பிப்ரவரி மற்றும் மார்ச் மாத பில்கள் , பேனாவால்,ரூ.662,ரூ1216 என்று திருத்தப்பட்டு இருப்பதை பார்த்து என்னிடம் கேட்டார்கள்.
அப்போது தான் யுனைடெட் பவுண்டேஷன் அமைப்பு , எங்களை ஏமாற்றியுள்ளதை புரிந்து கொண்டேன். உடனே யுனைடெட் பவுண்டேஷன் அலுவலகத்திற்கு சென்று,பில்களை காண்பித்து விபரம் கேட்டேன். அப்போது அவர், அந்த மாதம் நிறைய பேருக்கு அது போல் தான் பில்கள் வந்தன . நான் பேனாவால் திருத்தி தான் இருந்தேன். யாரும் உங்களைப் போல் வந்து கேள்வி கேட்கவில்லை,அது அப்படித்தான், எல்லாம் சரி தான், அவை எல்லாம் எங்களுக்கு சேர வேண்டிய கமிஷன்கள் என்று ஏதேதோ மழுப்பலான பதில்களை கூறினார்.அவருடைய பதில் நம்பும்படி இல்லை.

(அவர் என்னிடம் கூறிய விளக்கத்தை புரியாமல், நான் புகார் கூறுவதாக நினைக்க வேண்டாம். நானும் படித்தவள் தான்.எனக்கு அவர்கள் ஏமாற்றுவது தெளிவாக புரிந்ததால் தான் இதை எழுதுகிறேன்.)

உடனே பி.எஸ்.என்.எல் அக்கவுண்ட் ஆபிஸர், தஞ்சாவூர் -ஐ தொலைபேசியில் தொடர்பு கொண்டு, விபரம் கேட்டேன். அவர் கணிப்பொறியில் விரிவாக ஆராய்ந்துவிட்டு பின்வருமாறு தெளிவாக விளக்கம் அளித்தார்.

உங்களுடைய பிப்ரவரி, மார்ச் மாத பில்கள் இதுவரை நீங்கள் கட்டியுள்ள டெபாசிட் தொகையில் இருந்து அட்ஜஸ் செய்யப்பட்டு, ரூ.0 ஆக்கப்பட்டது. அந்த 2 மாதங்களும் உங்கள் கணக்கில் எந்த தொகையும் செலுத்தப் படவில்லை. நீங்கள் ஏமாற்றப்பட்டு இருக்கிறீர்கள். அந்த மாதங்களுக்கு அவர்கள் உங்களிடம் பணம் பெற்றது தவறு.அவர்களிடமே போய் பணத்தைக் கேளுங்கள் என்று சொன்னார்.

மேலும்,நம் அதிரையில் உள்ள பி.எஸ்.என்.எல் எஸ் .டி.ஈ அலுவலகத்திலும் விபரம் கேட்டேன். அவரும் கணிப்பொறியில் விரிவாக ஆராய்ந்துவிட்டு மேற்கூறிய பதிலையே சொன்னார். அத்துடன் உங்கள் பில்லில் உள்ள கழிவுகள் என்ற வார்த்தைக்கும், அவர்களுக்கு நாங்கள் கொடுக்கும் கமிஷனுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்று சொன்னார். அத்துடன் இன்னொரு அதிர்ச்சித்தகவலையும் சொன்னார்.

நான் 05/02/2010-ல் செலுத்திய ரூ.2201-ஐ அவர்கள் 17/04/2010-ல் தான் பி.எஸ்.என்.எல் அலுவலகத்தில் கட்டியுள்ளார்கள் என்றும் சொன்னார். அப்படியென்றால், நான் கட்டிய ரூ.1878(ரூ 662 மற்றும் ரூ 1216) எங்கே சென்றது?

பி.எஸ்.என்.எல் எஸ் .டி.ஈ சொல்வது போல், எனது தொகைக்கான பி.எஸ்.என்.எல் வழங்கிய ரசீதுகளை , யுனைடெட் பவுண்டேஷன் -ஆல் தர இயலுமா?

ஒரு இஸ்லாமிய சகோதரர்,தன் பேச்சை நம்பி பணம் செலுத்தும் சக சகோதரர்களை இப்படி ஏமாற்றலாமா? என்னைப் போல் எத்தனை குடும்பங்கள் ஏமாற்றப்பட்டனவோ?
தன் மனைவி, மக்களை பிரிந்து, வெளிநாட்டிற்கு சென்றோ அல்லது உள்ளூரிலோ, வியர்வை சிந்தி கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதிக்கும் சகோதரர்களின் பணத்தை, ஒரு இஸ்லாமிய சகோதரர் எடுத்து ஏமாற்றலாமா?

வீட்டில் ஆள் இல்லாததால் தானே உங்களிடம் (யுனைடெட் பவுண்டேஷன்) நம்பி பணத்தை தந்து, பில்கள் கட்டுகிறோம்.இப்படி ஏமாற்றலாமா?

என்னைப் போல் எல்லாரும் பி.எஸ்.என்.எல் அக்கவுண்ட் ஆபிஸர்,தஞ்சாவூர் - இடம் விபரம் கேட்டால், யுனைடெட் பவுண்டேஷன் - நிலை என்னாகும்?

எனக்கு நீதி கிடைக்க சகோதரர்கள் உதவினால், நலமாக இருக்கும். இது சம்மந்தமாக எந்நேரத்திலும் யாரிடத்திலும் ஆதாரத்துடன் விளக்கமளிக்க தயாராக உள்ளேன் என்பதையும்
இதன் மூலம் தெரிவித்துக்கொள்கிறேன்.

சகோதர,சகோதரிகளே! விழிப்புடன் இருங்கள்.
இல்லாவிட்டால், நீங்களும் ஏமாற்றப்படலாம்!