Wednesday, September 29, 2010

உலகின் முதல் 3D மடிக்கணினி

LG நிறுவனம் உலகின் முதல் HD தொழில்நுட்பத்துடன்
3D மடிக்கணினியை அறிமுக படுத்தியுள்ளது. இந்த மடிக்கணினியின் மாதிரி எண் A510 ஆகும்.

இதன் சிறப்பு அம்சங்கள்
15.6 அங்குலம் இயந்திரம்
1920 x 1080 Resolution ( பிரிதிறன் ) உள்ள திரை
Intel CPU இதில் பல வகைகள் உள்ளன
Core i7 CPU 840QM மற்றும் 740QM
Core i5 CPU 580M,560Mமற்றும் 460M
Core i3 CPU 380M மற்றும் 370M
4GB RAM , 640GB Hard Disk
கிராபிக்ஸ் NVIDIA GT425M உள் 1GB RAM.
இதனுடன் அழகிய வடிவமைப்புடைய 3D கண்ணாடி.
நல்ல தரத்துடன் கூடிய HD ஒலி.மற்றும்
2D தகவல்களை 3D தகவலாக மற்ற உதவும் தொழில்நுட்பம்.

துரதிஷ்டவசமாக, இதன் விலை இன்னும் வெளியிட படவில்லைஆனால் ஆசியா , தென் அமெரிக்கா , மத்திய கிழக்கு நாடுகள் , மற்றும் ஆப்ரிக்கா நுகர்வோர்,இந்த மடிக்கணினியை வரும் அக்டோபர் மாதம் தங்கள் வீட்டுக்கு வாங்கி செல்லலாம்.

Thursday, September 23, 2010

சட்டத்திற்கு புறம்பாக வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு: சவுதி அரேபியா

சவுதி அரேபியாவின் தேசிய தினத்தை (23-09-2010) முன்னிட்டு சட்டத்திற்கு புறம்பாக நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கி வெளியேற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

இக்காலக்கட்டத்தில் உம்ரா விசா, ஹஜ் விசா, சுற்றுலா விசா ஆகியவற்றில் சவுதி அரேபியா வருகை தந்து விசா காலாவதியான பிறகும் சவுதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருக்கும் வெளிநாட்டினர் சரணடைந்து நாட்டைவிட்டு வெளியேற வேண்டும் என சவுதி அரேபியாவின் உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

இதற்காக வருகிற செப்.25 முதல் 2011 ஆம் ஆண்டு மார் 23 வரையிலான 6மாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது பொதுமன்னிப்புக் காலக்கட்டத்தில் போதிய ஆவணங்கள் இல்லாமல் சவுதியில் சிக்கியவர்கள் அபராதம் கட்டாமல் நாட்டை விட்டு வெளியேறலாம்.

லட்சக்கணக்கான வெளிநாட்டவர்கள் சவுதி அரேபியாவில் சட்டத்திற்கு புறம்பாக வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Sunday, September 19, 2010

காதிர்முகைதின் கல்லூரி மாணவர் சாதனை

அதிராம்பட்டினம் காதிர்முகைதின் கல்லூரி மாணவர்கள்,மயிலாடுதுறையில் உள்ள ஏ.ஆர்.சி.விஸ்வநாதன் கல்லூரியில் நடைபெற்ற பாரதிதாசன் பல்கலைகழகம் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்ட தடகளப்போட்டியில் பங்கேற்றனர்.
அதில் B.com 2-ஆம் ஆண்டு படிக்கும் மாணவர் ரிஸ்வான் அலி வட்டு எறிதல்போட்டியில் முதல் இடத்தையும்,குண்டு எறிதல் போட்டியில் 2-ஆம்இடத்தையும் பெற்றுள்ளார்.
வெற்றி பெற்ற மாணவர்க்கு கல்லூரி செயலாளர் முஹம்மதுஅஸ்லம் பதக்கம் அணிவித்தார் கல்லூரி முதல்வர்முஹம்மதுஅப்துல்காதர்,உடற்கல்வி இயக்குனர்முருகானந்தம்,மற்றும்பேராசிரியர்கள்,மாணவ,மாணவிகள் பாராட்டினர்கள்

Friday, September 17, 2010

கீழத்தெருவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம்

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்தும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம்
நாள்:19-09-2010. ஞாயிற்றுகிழமை.
நேரம்:காலை 9.௦௦௦௦௦௦௦௦00மணி முதல் மதியம் 2.௦௦௦௦00 மணி வரை
இடம்:அல்மதரசத்துன் நூருல் முஹம்மதிய்ய சங்கம். (கீழத்தெருசங்கம்) அதிரை.
தலைமை
ஹாஜிp.s.அப்துல்ஹமீது.தஞ்சைமாவட்டதலைவர்,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
துவக்கி வைப்பவர்:
திருN.R.ரங்கராஜன்.சட்டமன்ற உறுப்பினர்,பட்டுகோட்டை.
முன்னிலை:
ஹாஜிMMS.அப்துல்வஹாப்.தலைவர்,அதிரை பேரூராட்சி
ஜனாப்:S.பாத்துஷா.தலைவர்,கீழத்தெருசங்கம்.
ஜனாப்:K.K.ஹாஜாநஜ்முதீன்.தலைவர், இந்தியயூனியன்முஸ்லிம்லீக்,அதிரை
மருத்துவ ஆலோசகர்கள்:
DR.V.காளிதாஸ் RHMP தலைமை மருத்துவர்,ஸ்ரீ ஜெயந்திராள் மருத்துவமனை,கரிகாடு, பட்டுகோட்டை.
DR. S.சம்பத்குமார் M.A.,DHE .
DR.R.சுவாமிநாதன் D.H.E.
DR.போத்தியப்பன்.D.A.CRSMP,ஆவணம்
DR.N.சரவணன் BHMS,MS,MD, (HOMEO)
DR.R.பாலசுப்பரமணியம்.MSC,NHM,M,MAGTND,(ACN)பட்டுகோட்டை
DR.C.பிருந்தாலக்ஷ்மி BHMS,பட்டுகோட்டை
குறிப்பு;அணைத்து வியாதிகளுக்கும் மருந்துகள் இலவசமாக தரப்படும்
அனைவரும் வருகைதந்து பயன்பெறுமாறு கேட்டுகொள்கிறோம்
இங்ஙனம்:
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.அதிரை

Thursday, September 16, 2010

ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்களுக்கு சுமுக சார்பாக வாழ்த்துக்கள்

கடந்த 13/09/2010 அன்று அதிராம்பட்டினம் சம்சுல் இஸ்லாம் சங்கத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான குழு கூடியது..
அதற்கு முன்தினம் செக்கடி பள்ளிவாசல் வளாகத்தில் அப்துல் லத்தீப் ஆலிம் அவர்கள் தலைமையில் கூடிய கூட்டத்தில் புது நிர்வாகிகளை தேர்வு செய்வதற்காக 30 பேர் கொண்ட குழு நியமிக்கப்பட்டது.
அதன்படி மரைக்கா பள்ளிவாசலில் கூடிய அந்த குழு புதிய தலைவராக ஜனாப் உமர் அவர்களையும், பொருளாளராக ஜனாப் S.A.M . ஜமாலுதீன் அவர்களையும், செயலாளராக ஜனாப் ஹசன் அவர்களையும் தேர்ந்தெடுத்தது.
தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர், மற்றும் செயலாளர் ஆகியோர்களுக்கும், முன்னாள் செயலாளர் ஜனாப் அபூபக்கர் அவர்களுக்கும்
சுகாதார முன்னேற்ற கழகம். (சுமுக) தலைவர் ஜனாப் அஸ்லம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்
செய்தி:adiraiunity

Monday, September 13, 2010

சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு

கடந்த சில நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட சம்சுல் இஸ்லாம் சங்க நிர்வாகிகள் தேர்வு உலமாக்களின் ஆலோசனையில் பேரில் அமைதியாக நடந்து முடிந்துள்ளது.
அதன்படி இன்று காலை 10 மணியளவில் மஸ்ஜிதுல் அக்ஸா (மரைக்காயர் பள்ளி) நடைபெற்ற மசூராவிற்கு மரியாதைக்குரிய ஆலிம்கள் அப்துல் லத்தீப் ஆலிம், அப்துல் காதிர் ஆலிம், மற்றும் ஜனாப் வக்கீல் ரஜாக் ஆகியோர் தலைமையில் சுமார் 30 பேர் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்டவர்களிடம் நிர்வாக பொறுப்புகளுக்கு கருத்துக்கள் கேட்கப்பட்டது.
பின்னர் பல்வேறு கருத்துக்களின் அடிப்படையிலும், திறமை, அனுபவம் அடிப்படையிலும் உலமாக்களுடன் ஆலோசிக்கப்பட்ட புதிய நிர்வாகம் அறிவிக்கப்பட்டது. அதன்படி,
ஜனாப் முகம்மது உமர் - தலைவர்
ஜனாப் சஹாபுதீன் - துணைத் தலைவர்
ஜனாப் S. அபுல் ஹசன் - செயலாளர்
ஜனாப் பாக்கர் ஹாஜியார் - துணைச்செயலாளர்
ஜனாப் SAM ஜமாலுதீன் - பொருளாளர்
ஆகியோரை தேர்ந்தெடுத்ததாக ஜனாப் வக்கீல் ரஜாக் அவர்கள் அறிவித்தார்கள்.
அதனை அனைவரும் ஏற்றுக்கொள்வதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர். மிகவும் பொருத்தமான நிர்வாகம் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
புதிய நிர்வாகிகளின் அடுத்த அமர்வு நாளைக் காலை 10 மணியளவில் மரைக்காயர் பள்ளியில் நடைபெறும் என்று புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தலைவர் ஜனாப் உமர் அவர்கள் அறிவித்தார்கள்.
இனி வரும் காலங்களில் இந்த புதிய நிர்வாகத்துடன் ஐந்து ஆலிம்கள் பங்குபெற்று கூட்டங்களில் கலந்துகொண்டு மார்க்க அடிப்படையிலான தீர்ப்புகளுக்கு ஆலோசனைகள் வழங்குவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Sunday, September 12, 2010

ஷம்சுல் இஸ்லாம் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் நாளைதேர்வு

இன்று காலை9மணியளவில் புதிய சங்க நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஷம்சுல் இஸ்லாம் சங்கபொதுகுழுகூட்டம் செக்கடிப்பள்ளியில் நடந்தது.அதில் அப்துல் லத்திப் ஆலிம் அவர்களின் தலைமையில் பொது குழு கூட்டம் நடைபெற்றது.அந்த பொது குழு கூட்டத்தில் ஏராளமான சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். உலமா பெருமக்களால் சங்கத்துக்கு உட்பட்ட தெருவில் இருந்து 30 நபர்களை தேர்வு செய்தனர். இன்ஷாஅல்லாஹ் நாளை திங்கள்கீழமை மரைக்கா பள்ளிவாசலில் உலமா பெருமக்கள் முன்னிலையில் அந்த 30 நபர்களில் சங்க தலைவர் மற்றும் பொறுப்பாளர்கள் தேர்வு செய்யபடுவார்கள்

Saturday, September 11, 2010

ஆபத்தாகும் காதுக்கான 'பட்ஸ்'

ஆபத்தாகும் காதுக்கான 'பட்ஸ்''பட்ஸ்' என்ற காட்டன் குச்சிகளின் விபரீதம் நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. 'பட்ஸ்' மூலம் காதுகுடைவதை சிலர் நாகரீகத்தின் அடையாளமாக கருதுகிறார்கள். இது தவறான எண்ணம். காதில் சேரும் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் எந்தவித தயக்கமும் இல்லாமல் டாக்டரிடம் செல்வது தான் சிறந்தது.காது 'குரும்பி'யை எடுக்க மூன்று வழிகள் இருக்கின்றன. எந்த முறையை கையாள வேண்டும் என்பது நோயாளியை பொறுத்து தீர்மானிக்க வேண்டிய முடிவு. சிலருக்கு காதின் வெளிப்புறத்திலேயே நம் கண்ணுக்கு எளிதில் தெரியும்படியான இடத்திலேயே 'குரும்பி' உருண்டையாக திரண்டு நிற்கும். அப்படியிருந்தால் அதை ‘ஊக்கு' போன்ற அமைப்பின் மூலம் வெளியே எடுத்து விடலாம். இதற்கு நோயாளியின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம்.ஊக்கை காதுக்குள் செலுத்தும்போது கூச்சத்தில் கொஞ்சம் அசைத்துவிட்டாலும் பிரச்சினைதான். அப்படிப்பட்டவர்களுக்கு மயக்கம் கொடுத்தபிறகுதான் வெளியில் எடுக்க வேண்டும். சிலருக்கு கொஞ்சம் உட்புறமாக காது 'குரும்பி' ஒட்டிக்கொண்டு இருக்கும். இவர்களின் காதில் சொட்டு மருந்தோ அல்லது தேங்காய் எண்ணையையோ போட்டுவிட்டால் 'குரும்பி' அதில் ஊறி தானாகவே வெளியில் வந்துவிடும் வாய்ப்பு உள்ளது. அப்படி வரவில்லையென்றால் டாக்டர்கள் நோயாளிக்கு மயக்கம் கொடுத்து 'மைக்ராஸ்கோப்' உதவியோடு அந்த 'குரும்பி'யை எடுத்துவிடுவார்கள். 'குரும்பி'யை உறிஞ்சி வெளியில் எடுக்கவும் கருவிகள் உள்ளன.இன்னொரு முறையும் உள்ளது. 'சிரிஞ்ச்' மூலம் காதுக்குள் தண்ணீரை பீய்ச்சி அடிப்பது தான் அது. காதுக்குள் நேரடியாக என்றில்லாமல் சற்று ஓரமாக தண்ணீரை பீய்ச்ச வேண்டும். செவிப்பறை வரை சென்று திரும்பும் தண்ணீர் வழியில் ஒட்டிக்கிடக்கும் காது குரும்பியை எல்லாம் அடித்துக்கொண்டு வந்துவிடும்.இங்கே கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் காதுக்குள் செலுத்தப்படும் தண்ணீரின் வெப்பநிலை உடல் வெப்பநிலைக்கு ஒரு குறிப்பிட்ட அளவுக்கு அதிகமாகவோ குறைவாகவோ இருக்கும் பட்சத்தில் நோயாளி மயக்கம் போட்டு கீழே விழும் வாய்ப்பும் இருக்கிறது. காரணம், இந்த வெப்பநிலை வேறுபாடு நமது உடல் இயக்கத்தை சமநிலையில் வைத்துக்கொள்ள உதவும் உள்காது நரம்புகளை தூண்டுவதுதான்.
தண்ணீர் மட்டுமல்ல, அதிக குளிர்ச்சியான அல்லது வெப்பமான காற்றுகூட நம்காதுக்குள் போகும்போது மயக்கம் வந்து நாம் நிலைதடுமாறி விழ வாய்ப்பிருக்கிறது. சிலருக்கு காது 'குரும்பி'யை எடுக்க ஊக்கை காதுக்குள் நுழைத்தாலே இருமல் வந்துவிடும். சிலர் மயங்கி விழுந்து விடுவார்கள்.இதற்கு காரணம், இதயம் போன்ற முக்கியமான உடற்பாகங்களோடு தொடர்பு கொண்டு இருக்கும் 'வேக்ஸ்' நரம்பு தூண்டப்படுவதுதான். வெளிக்காதில் தோலுக்கு அடிப்புறமாக இருக்கும் இந்த நரம்பு மீது லேசாக ஏதாவது பட்டாலே அது தூண்டப்பட்டுவிடும். இப்படி நோயாளிகளுக்கு இருமலோ, மயக்கமோ வரும் பட்சத்தில் கொஞ்சம் கூடுதல் எச்சரிக்கையோடு அவர்களை கையாள வேண்டும். இத்தனை பிரச்சினைகள் இருப்பதால் காதில் 'குரும்பி'யை எடுக்க வேண்டும் என்றால் டாக்டரிடம் செல்வது தான் நல்லது.அதைவிட்டுவிட்டு இதற்கெல்லாம் கூடவா டாக்டர்களிடம் போவார்கள் என்பவர்களுக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டால் அது அதிகப்படியான மருத்துவ செலவை ஏற்படுத்திவிடும் என்று எச்சரிக்கை செய்கிறார்கள், டாக்டர்கள்.

Tuesday, September 7, 2010

ஷம்சுல்இஸ்லாம் சங்க அறிவிப்பு

அஸ்ஸலாமுஅழைக்கும்
இன்ஷா அல்லாஹ்,வருகின்ற 12 -09 -2010. தேதியில் ஞாயிற்றுகிழமை அன்றுகாலை 9 மணியளவில் புதிய சங்கநிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்காக ஷம்சுல்இஸ்லாம் சங்க பொதுகுழுகூட்டம் செக்கடிப்பள்ளியில் நடக்க இருப்பதால் சங்கத்தின் பதிவு செய்யப்பட்ட பொதுகுழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுகொள்கிறோம்.

இப்படிக்கு,
ஷம்சுல்இஸ்லாம்சங்கம்.
62,புதுமனைதெரு,
அதிராம்பட்டினம்.

Monday, September 6, 2010

அதிரையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி கூட்டம்.

அதிராம்பட்டினம் நகர இந்திய கம்யூனிஸ்டு கிளை கூட்டம் செல்வம் தலைமையில் நேற்று நடைபெற்றது.நகர செயலாளர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.ஒன்றிய செயலாளர் செல்வம் கூட்டத்தை தொடங்கிவைத்தார்.
கூட்டத்தில் அதிராம்பட்டினம் அண்ணாசாலை இருந்த இடத்தில் ரவுன்டானா கட்டிதரவேண்டும். cmp லைன் வாய்க்காலை தூர்வார கேட்பது,தனியார் பஸ்கள் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க கேட்பது,ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன

Sunday, September 5, 2010

ஆசிரியர் தின வாழ்த்துக்கள் தெரிவிப்போம்

உலகத்தில் எல்லாவற்றிக்கும் ஒரு நாள் இருப்பது போல் ஆசிரியர் தினமும் சாதாரண தினம் இல்லை. ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையில் உண்மையான மாற்றத்தை தருவது அவன் கற்ற கல்வி மட்டுமே .அப்படிப்பட்ட மிக உயர்ந்த கல்வியை தருவது ஆசிரியர் பணி மட்டுமே .ஆசிரியர் என்பவன் ஏணி போன்றவர் எல்லோரயும் ஏற்றிவிட்டு அந்த ஆசிரியர் ஏணி மட்டும் அந்த இடத்தில இருக்கும் அப்படிப்பட்ட ஆசிரியர் தினம் இன்று "முன்னாள் குடியரசுத் தலைவருமான மறைந்த டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் பிறந்த நாளில் அவர்களின் நினைவாக கொண்டாடப்படும் ஆசிரியர் தினம் அன்று நமக்கு பிடித்த அந்த ஆசிரியர்களுக்கு வாழ்த்து தெரிவிப்போம்.
ஒவ்வொருவரின் வாழ்க்கையில் மாற்றத்தை உண்டாக்கிய ஆசிரியர் பற்றி இரத்தின சுருக்கமாக பின்னுட்டம் இடவும்.
"ஒரு சமுதாயத்தில் நல்ல மாற்றத்தை தருவது சிறந்த கல்வி மட்டுமே அப்படிப்பட்ட நல்ல கல்வி தரும் ஆசிரியர்களுக்கு ஒரு சல்யுட் "

Wednesday, September 1, 2010

அதிராம்பட்டிணத்தில் ‘’மஸ்ஜிதுத் தவ்ஹீத்’’




ஏகஇறைவனின்திருப்பெயரால்....

அதிராம்பட்டிணத்தில் மஸ்ஜிதுத் தவ்ஹீத்’’ பள்;ளியின் கட்டிடப் பணி அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் தொடங்கப்பட்டு விட்டது புனித ரமளான் மாதத்தில் அல்லாஹ்வின் பள்ளிக்காக வாரி வழங்குங்கள்.

அல்லாஹ்வின் பள்ளிவாசலை அமைப்பதற்கு இறையச்சமுடையவர்கள் தாராளமாகப்பொருளாதார உதவி செய்வதற்கு முன்வருவதன் மூலம் இறையருளுக்குநெருக்கமானவர்களாகவும், சுவனத்தில் தங்கள் இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளும் பாக்கியம்பொருந்தியவர்களாகவும் ஆவார்கள்.

'மஸ்ஜிதுத் தவ்ஹீத்' பள்ளியின் கட்டிட பணிக்கு உதவ விரும்பும் சகோதரர்கள் உங்களின் நன்கொடைகளை கீழே தரப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு அனுப்பவும்.

தனலக்ஷ்மி வங்கி (DHANLAXMI BANK)

கணக்கு எண் (Account Number):

0115010000001353

பெயர் (Name):

TAMIL NADU TOWHITH JAMATH

கிளை (Branch):

ADIRAMPATTINAM

வங்கி இலக்கம் (Branch Code):

115


ஐசிஐசிஐ வங்கி (ICICI BANK)



கணக்கு எண் (Account Number):

610901143316

பெயர் (Name):

S.HYDER ALI

கிளை (Branch):

PATTUKOTTAI