Friday, November 5, 2010

யுனைட்டெட் பவுண்டேஷன் அதிரை எக்ஸ்பிரஸ்க்குஅளித்த பதில்

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்துனர்களுக்கு:
அஸ்ஸலாமு அலைக்கும். இன்று காலை ஒரு மடல் உங்கள் வலைத்தளத்தில் வந்ததைப் படித்தோம். United Foundation ஒரு பொதுநலச் சேவை நிறுவனமாகும். பொதுவாக நமதுரைப் பொருத்தவரை, பொது நலத்தில் ஈடுபடும் தனி நபரையோ நிறுவனத்தையோ குறைகளை மட்டுமே தூண்டித் துருவிப் பார்த்து, அவற்றை ஃபசாதாக்கித் திரிவதுதான் சிலரின் பழக்கமாக இருந்து வருகின்றது. இந்த வலையில் அதிரை எக்ஸ்பிரஸ் சிக்கிவிடக் கூடாது என்பதே எமது விருப்பமும் வேண்டுகொளுமாகும்.

நீங்கள் இந்தச் செய்தியை வெளியிடுவதற்கு முன் எங்களைத் தொடர்பு கொண்டிருந்தால் நன்றாயிருந்திருக்கும். அதற்கு விளக்கம் அளிப்பது எங்கள் கடமையாகும். சரி, இப்போது விஷயத்துக்கு வருவோம்:

1. அந்தச் சகோதரி, 'ஏமாற்று' என்ற ஒரு குற்றச்சாட்டை வைத்துள்ளார். ஏமாற்று என்றால், முறைப்படி கேஷ் ரசீது கொடுக்கப்பட்டிருக்குமா என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்.
2. பில்களில் தொகைகள் அழிக்கப்படவில்லை; திருத்தப்படவுமில்லை; கோடிட்டு எழுதப்பட்டுள்ளது. எழுதியது நாங்களில்லை. டெலிபோன் டிபார்ட்மெண்ட்.
3. அதிராம்பட்டினம் SDE அவர்களை நேரில் சந்தித்து விசாரித்தபோது, அந்தக் குறிப்பிட்ட மாதங்கள் '0' என்று கணினியில் பார்த்து, புகாரளித்தவரிடம் சொன்னதாகவும் சொன்னார். தஞ்சை A.O. வான சந்திரசேகரன் (TR) 04362234300 அவர்களைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, "என்னிடம் யாரும் பேசவில்லை" என்றார். புகார் செய்தவர் எந்த நம்பரில் பேசினார் என்பதைக் கேட்கச் சொன்னார். அவரிடமே 'டெப்பாசிட் கணக்கில் எதுவும் running account ல் கழிப்பீர்களா?' என்று கேட்டதற்கு, 'close செய்யப்பட்ட கணக்கில் மட்டுமே டெப்பாசிட் கழிக்கப்படும்' என்றார்.
4. அதிரை U.F. அலுவலகத்தில், புகார் கூறியுள்ள நபர் பேசியது, இரண்டே இரண்டு நிமிடங்கள்தான். அவர் பெண் என்பதால், அதிக நேரம் நிறுத்தி வைத்துப் பேச முடியவில்லை. அந்த நேரத்தில் அந்தப் பெண் கூறிய தகவல்களுக்கு ஆதாரங்களை எடுத்துக் காட்டி விளக்கம் கூற முடியாது. சுருக்கமாக, அந்தத் தொகை எங்களுக்குச் சேரவேண்டியது என்று மட்டும் சொல்லப்பட்டது.

மொத்தத்தில், அந்தக் குற்றச்சாட்டு, தவறுதலாகப் புரிந்துகொள்ளப்பட்டு எழுதப்பட்டிருக்கும் என்று நினைக்கிறோம். 'படித்த பெண்' என்று பெருமைப் படுவதில் தவறில்லை. பொறுமை, நிதானம், தீர விசாரித்தல் போன்றவை கற்றோர் இயல்பு என்பதை எல்லோரும் அறிவர்.

எமது நிறுவனத்தில் இது போன்று யாருக்கேனும் சந்தேகங்கள், குறைகள் இருப்பின், நேரில் அல்லது மின்னஞ்சல் மூலம் விவரம் கேட்டுக்கொள்ளலாம். எங்களிடம் ஒளிவு மறைவு என்பது இல்லை. இப்புகார் பற்றி மேற்கொண்டு விவரம் அறிய வேண்டுமாயின், சம்மந்தப்பட்ட நபரோ, அவர் சார்பில் யாரேனும் ஆண் உறுப்பினரோ, நேரில் வந்து விளக்கம் பெற்றுக்கொள்ளலாம்.
இதோ, எங்கள் மின்னஞ்சல் முகவரி: uf.adirai@gmail.com

இப்படிக்கு,
ஹாஜா ஷரீப் - 03/11/2010


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!