Monday, July 12, 2010

அதிரை எக்ஸ்பிரஸ்

உலக கோப்பை வென்ற ஸ்பெயின்

    No comments:

உலக கோப்பையை முதல் முறையாக கைப்பற்றி வரலாறு படைத்தது ஸ்பெயின் அணி. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் நெதர்லாந்தை 1-0 என்ற கோல் கணக்கில் சூப்பராக வீழ்த்தியது.


இதன் மூலம் பால் "ஆக்டோபஸ்' கணிப்பு மீண்டும் ஒரு முறை பலித்துள்ளது. நெதர்லாந்து வெற்றி பெறும் என்ற சிங்கப்பூர் கிளியின் கணிப்பு பொய்யாகிப் போனது.


தென் ஆப்ரிக்காவில் 19வது உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. நேற்று ஜோகனஸ்பர்க்கில் உள்ள "சாக்கர் சிட்டி' மைதானத்தில் நடந்த பைனலில் உலகின் "நம்பர்-2' அணியான ஸ்பெயின், நெதர்லாந்தை(4வது இடம்) எதிர்கொண்டது. இரு அணிகளுமே முதல் முறையாக கோப்பை கைப்பற்றும் குறிக்கோளுடன் களமிறங்கின.

Font size

ஸ்பெயின் ஆதிக்கம்: துவக்கத்தில் "யூரோ' சாம்பியனான ஸ்பெயின் ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 5வது நிமிடத்தில் "பிரீகிக்' வாய்ப்பில் சேவி, பந்தை அடித்தார். அதனை செர்ஜியோ ரமோஸ் தலையால் முட்டி கோல் அடிக்க பார்த்தார்.


ஆனால், நெதர்லாந்து கோல்கீப்பர் மார்டன் ஸ்டகலன்பர்க் துடிப்பாக தடுக்க, வாய்ப்பு நழுவியது. 11வது நிமிடத்தில் மீண்டும் ரமோஸ் தாக்குதல் நடத்தினார். இம்முறை நெதர்லாந்து தற்காப்பு பகுதி வீரர் ஹெடிங்கா, பந்தை உதைத்து வெளியே அனுப்பினார்.


பின் நெதர்லாந்து வீரர்கள் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டனர். பதிலுக்கு ஸ்பெயின் வீரர்களும் மோதிப் பார்க்க, இங்கிலாந்து நடுவர் ஹாவர்டு, மாறி மாறி "எல்லோ கார்டு' காட்டி எச்சரித்தார்.


நெதர்லாந்து தரப்பில் பெர்சி, பொம்மல் மற்றும் ஸ்பெயின் சார்பில் ரமோஸ், புயோல் "எல்லோ கார்டு' பெற்றனர். ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் அலோன்சா நெஞ்சில் உதைத்த நெதர்லாந்து வீரர் நிஜல் டி யாங்கும் "எல்லோ கார்டு' பெற்றார். முதல் பாதியில் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.


இரண்டாவது பாதியிலும் "அடிதடி' ஆட்டம் தொடர்ந்தது. 54வது நிமிடத்தில் "பவுல்' செய்த நெதர்லாந்து கேப்டன் பிரான்க்ஹார்ஸ்ட் "எல்லோ கார்டு' பெற்றார். 62வது நிமிடத்தில் நெதர்லாந்தின் ராபன், பந்தை மின்னல் வேகத்தில் கடத்தி வந்து "ஷாட்' அடித்தார். ஆனால், ஸ்பெயின் கீப்பரும் கேப்டனுமான கேசில்லாஸ் சாதுர்யமாக தடுக்க, பொன்னான வாய்ப்பு வீணானது.


டேவிட் ஏமாற்றம்: இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள ஸ்பெயின் அணியின் நட்சத்திர வீரரான டேவிட் வில்லா இம்முறை ஏமாற்றம் அளித்தார். 69, 76வது நிமிடத்தில் கிடைத்த அருமையான வாய்ப்பை வீணாக்கினார். பின் ஸ்பெயின் வீரர் ரமோஸ் தலையால் முட்டி அடித்த பந்தும் இலக்கு மாறி பறந்தது.

எங்கே ஸ்னைடர்: ஆட்டத்தின் 82வது நிமிடத்தில் ராபன் அசுர வேகத்தில் ஓடி வந்து கோல் அடிக்க பார்த்தார். அப்போது ஸ்பெயின் வீரர் புயோல் தடுக்க, வாய்ப்பு பறிபோனது. இதையடுத்து நடுவருடன் வாதாடினார் ராபன். இதற்காக ராபனும் "எல்லோ கார்டு' பெற்றார்.

இத்தொடரில் 5 கோல் அடித்துள்ள நெதர்லாந்தின் ஸ்னைடரின் ஆட்டம் நேற்று சுத்தமாக எடுபடவில்லை. இவர் இருக்கும் திசையில் பந்து வருவதே அரிதாக இருந்தது. இரு பாதி முடிவிலும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை.

"ரெட் கார்டு' சோகம்:

இதையடுத்து போட்டி, கூடுதல் நேரத்துக்கு சென்றது. 106வது நிமிடத்தில் ஸ்பெயின் சார்பில் டேவிட் வில்லாவுக்கு பதிலாக பெர்ணான்டோ டோரஸ் களமிறக்கப்பட்டார். 109வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டாவை முரட்டுத் தனமாக தடுத்த நெதர்லாந்து வீரர் ஹெடிங்கா "ரெட் கார்டு' காட்டப்பட்டு வெளியேற்றப்பட்டார். இதையடுத்து 10 பேருடன் நெதர்லாந்து விளையாட நேர்ந்தது.

ஸ்பெயின் கோல்:


ஆட்டத்தின் 116வது நிமிடத்தில் ஸ்பெயின் வீரர் இனியஸ்டா ஒரு சூப்பர் கோல் அடித்து, அணியின் கோப்பை கனவை நனவாக்கினார். இறுதியில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, முதல் முறையாக கோப்பை கைப்பற்றியது.


கடந்த 1974, 78 பைனலில் தோல்வி அடைந்த நெதர்லாந்து அணி மூன்றாவது முறையாக கோப்பை வாய்ப்பை கோட்டை விட்டு, இரண்டாம் இடம் பிடித்தது.

ரூ. 142 கோடி பரிசு

அதிரை எக்ஸ்பிரஸ்

About அதிரை எக்ஸ்பிரஸ் -

Author Description here.. Nulla sagittis convallis. Curabitur consequat. Quisque metus enim, venenatis fermentum, mollis in, porta et, nibh. Duis vulputate elit in elit. Mauris dictum libero id justo.

Subscribe to this Blog via Email :

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!