Tuesday, February 8, 2011

M முஹமது சேகாதியார் BSc(Agri) அவர்கள் அளித்து இருக்கும் தன்னிலை விளக்கம்

Ref: அதிரை எக்ஸ்பிரஸ் blog on 18th Jan 2011 through Adiraidailynews posted by Adiraivoice

அஸ்ஸலாமு அழைக்கும்
அதிராம்பட்டினத்தில் ஒரே விவசாய பட்டதாரியான நான் 34ஆண்டுகள் பணி மாசு மறுவற்ற அரசு பனி ஆற்றிஉள்ளேன்.முதல் 25 ஆண்டுகள் மாசு மறுவற்ற அரசுபணியாற்றியமைகாக அரசு சான்று பெற்று உள்ளேன்.நான்பணியில் சேர்ந்தது முதல் ஒய்வு பெற்றவரைக்கும் என் மீதுதனி பட்ட முறையில் ஒரு ஊழல் குற்ற சாட்டுகள் கூடகிடையாது.என் பனி பதிவேட்டை பார்த்தல் நன்குவிளங்கும்.என் பொது வாழ்விலும் அடுதவர்வுடைய பணத்தில்ஒரு பைசா கூட ஏமாற்றி சாப்டது கிடையாது .

தேங்காய்க்கு குறைந்த பட்ச ஆதரவு விலை வழங்கும்திட்டத்தின் கீழ் தேசிய வேளான் கூட்டுறவு இணையத்தால்(NAFED)கொப்பறை தேங்காய் கொள்முதல்செய்ய படுகிறது.2001-2001 ஆம் ஆண்டில் எல்லா தென்னைவிவசாயகளுகும் கொப்பரை தேங்காய் அடையாள அட்டைவழங்க அரசு உத்தரவிட்டது.கிராம கூட்டுறவு வங்கியால்அச்சடிகபட்டு விவசாயகளுக்கு வழங்கிய அடையாளஅட்டையில் கிராம நிர்வாக அலுவலர்களால் எழுத பட்ட சர்வேநம்பர் தென்னை பரப்பு காய்க்கும் மரங்கள் ஆகிய புள்ளி விவரஅடி படையில்,எவ்வளவு கொப்பறை தேங்காய் கிடைக்கும்என்பதை அளவிட்டு எழுதி கை எழுத்து இடுவதை என் பனி.தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து கொப்பறை தேங்காய் குறைந்த விலையில் கிடைத்தாலும் வியாபாரிகள்,அரசியல்வாதிகள் போன்ற நபர்கள் அதிக லாபம் பெரும் நோக்கில் செயல்பட்டதாலும்,விவசாய்கள் அடைய வேண்டிய லாபத்தை மேற்கண்ட நபர்கள் பயனடைந்தார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.இதற்கு அரசின் கொள்முதல் கொள்கை தவறே காரணம். அப்பொழுது எதிர்கட்சி தலைவராய் இருந்த செல்வி ஜெயலலிதா அவர்கள்,2001 ஆட்சிக்கு வந்த உடன்,எதிர்கட்சி மீது தொடரப்பட்ட வழக்குதான் கொப்பறை தேங்காய் உழல் குற்றச்சாட்டு.

இது அரசியல் கால்புனர்சியின் காரணமாக தொடரப்பட்ட(political case).உழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புதுறயால் கொப்பறை கொள்முதல் திட்டத்தில் சம்மந்தபட்ட கூட்டுறவு துரை,வேளாண் துரை,NAFED பணியாளர்கள் மற்றும் வியாபாரிகள் மீது குற்றச்சாட்டு பதியப்பட்டது.ஒரு அரசுஊழியர் ஓய்வுபெறும் பொழுது vigilance case நிலுவைஇருந்தால்,தற்காலிக பனிநீக்கம் செய்வதும் ஓய்வுதிய பலன்கள்நிறுத்தி வைக்க ஒய்வு பெற அனுமதி மறுப்பதும்,விசாரணைமுடிவை பொருத்து வழக்கில் இருந்து விடிவிப்பதும் அல்லதுதண்டனை அளிப்பதும் பொது அரசு விதி ஆகும்.suspension is not a punishment.நான் அரசு பணியில் இருந்து ஒய்வு பெறும் அன்றுvigilance case நிலுவை இருந்ததால் அரசு விதியின் படி தற்காலிகபனி நீக்கம் செய்யப்பட்டு ஒய்வு பெற அனுமதிமறுக்கப்பட்டது.நூற்றுக்கும் மேற்பட்ட நபர்கள் என் போன்று அநியாயமாக பாதிக்கபட்டு உள்ளார்கள்.
Right to information act படி மேற்கண்ட விபரம் பெற்ற ஜனாப் அபூபக்கர் அவர்கள்,என் மீது கலங்கம் அளிக்கும் வைகையில்,பள்ளிவாயில்கள் சுவற்றில் ஒற்றியும் தெரு முனையில் நின்று அவதுாறு பிரச்சாரம் செய்தும் அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளத்திலும் மற்ற இணையதளத்திலும் போட்டும் தவறான பிரச்சாரம் செய்து வருகிறார்.
என் ஒரே கேள்வி:தாம் நேர்மையானவர் என்றும் யாரிடமும் லஞ்சமாக பணம் பெறவில்லை என்றும் வாங்கிய கடனை யாருக்கும் கொடுக்கவேண்டிய நிலுவை இல்லை என்றும் அபூபக்கர் அறிக்கை வெளி இடுவார?
- M முஹமது சேகாதியார் BSc(Agri)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!