Monday, March 14, 2011

டி.வி. பார்க்காதீர்கள்; அது ஒரு சாத்தான்; இஸ்லாமிய அமைப்பு தீர்மானம்

டெல்லியை தலைமை இடமாக கொண்டு ஜமியாத் உலமா-ஐ-இஹிந்த் என்ற இஸ்லாமிய அமைப்பு செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு கடந்த 2009-ம் ஆண்டு வந்தே மாதரம் பாடுபவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றி பரபரப்பு ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இந்த அமைப்பு டி.வி., சினிமா பார்ப்பது பாவம் என்ற புதிய தீர்மானத்தை வெளியிட்டு பரபரப்பை உண்டாக்கி உள்ளது. டெல்லியில் கடந்த வாரம் இந்த அமைப்பின் நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது.

அந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:- டி.வி., சினிமா பார்ப்பது இஸ்லாமிய நெறிமுறைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் எதிரானதாகும். டி.வி. என்பது சாத்தானின் மறு வடிவமாகும்.

அந்த சாத்தான் இஸ்லாமியர்களின் பாரம்பரியத்துக்கும், மரபுக்கும் எதிராக உள்ளது. டி.வி. சாத்தானால் இளைஞர்களின் மனதுக்குள் அசுத்தம் புகுந்து விடுகிறது. அந்த சாத்தானை எவ்வளவு சீக்கிரம் ஒழித்து புதைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் புதைக்க வேண்டும். இவ்வாறு அந்த தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!