Friday, October 1, 2010

அதிரையை சார்ந்த சட்ட கல்லூரி மாணவர்கள் மிது பொய் வழக்கு

தஞ்சை மாவட்டத்தில் சட்டக்கல்லூரி மாணவர்களை பழிவாங்கும் நோக்கில் பொய் வழக்கு போட்டுள்ளது அதிரை காவல்துறை.

கடந்த 15.9.10 அன்று வேலூர் சட்டக்கல்லூரி மாணவரான நிஜாமுதீன் அண்ணன் சாகுல் ஹமீது என்பவரை சிலர் தாக்கினர். இது தொடர்பாக அதிரை காவல் நிலையத்தில் புகார் அளித்த போது
வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் தாமதபடுத்தி குற்றவாளிகளை தப்ப வைக்க முயன்றனர், இதனையடுத்து சட்டக்கல்லூரி மாணவர்களான நிஜாமுதீனும் முஹம்மது தம்பியும் வழக்கு பதிவு செய்யமறுத்தால் நாங்கள் போராட்டம் நடத்துவோம் என கூறியதையடுத்தே வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால் குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்த காவல்துறையினர் அவர்களை கைது செய்யவில்லை, . தொடர்ந்து உயரதிகாரிகளிடம் முறையிட்ட பிறகுதான் ஒரு குற்றவாளி மட்டுமே கைது செய்யப்பட்டார்.


மேலும் குற்றவாளி கும்பலை சார்ந்தவர்கள் அனைவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய வலியுறுத்தி D.G.P உள்ளிட்ட உயரதிகாரிகளுக்கு மேற்படி கும்பலின் சட்டவிரோத நடவடிக்கைகள் குறித்து புகார் அனுப்பப்பட்டது. குற்றவாளிகளை தப்ப வைக்க முயன்ற அதிரை காவல்துறையினரின் நோக்கம் பழிக்காமல் போகவே இப்பொழுது பிணையில் சிறையிலிருந்து வெளியே வந்த இவ்வழக்கின் குற்றவாளியை வைத்தே சட்டக்கல்லூரி மாணவர்களான நிஜாமுதீன் மற்றும் முஹம்மது தம்பி ஆகியோர் மீது பொய் புகார் பெற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


இத்தகைய குற்றவாளிகளுக்கு உடந்தையாக சட்டக்கல்லூரி மாணவர்களை காவல்துறையினரின் பழிவாங்கும் செயல்பாடு கண்டிக்கத்தக்கது.

தமிழக அரசே! வாபஸ்பெறு!

அதிரையை சார்ந்த வேலூர் சட்டக்கல்லுரி மாணவர் S. நிஜாமுதீன் மற்றும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர் Z.முஹம்மது தம்பி ஆகியோர் மீது பொய் வழக்கு போட்ட தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர், SBCID ஏட்டு அய்யாதுரை மற்றும் கவாலர்களை வன்மையாக கண்டிக்கிறோம்.

தமிழக அரசே, சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது போட்ட பொய்வழக்கை திரும்ப பெறு.

இவண்,
சட்டக்கல்லூரி மாணவர்கள்,
வேலூர் மற்றும் திருச்சி.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!