Tuesday, January 4, 2011

இந்தியர் வெளியில் சிந்தும் உழைப்பு

நுனிநாக்கி லாங்கிலம் நுட்பக் கணினி
தனியார்வ நோக்கில் தணியாத தாகம்
இனியென்ன வேண்டுமிங் கிந்தியர் என்றும்
நனிசிறந்தே வாழ்வர் நவில்.

கடின உழைப்பும் கடமை யுணர்வும்
படியும் குணமும் பலமான போட்டியுறும்
சந்தையில் இன்று சிறப்பான எங்கள்
இந்தியர் என்றே இயம்பு.

காடும் மலையும் கடலுமே தாண்டி
வாடும் உடலும்தம் உள்ளமும் வேலையில்
ஈடுபட்டுத் தேனீயென் றீட்டிட இந்தியர்
பாடு படுவதைப் பாடு!


சிந்தும் உழைப்பும் சிறந்த தியாகமே
இந்தியச் சந்தை இழந்த உழைப்பினை
அன்னிய நாட்டவர் அங்கீ கரித்தனர்
தன்னிறை என்பதுஎந் நாள்


“கவியன்பன்” கலாம், அதிராம்பட்டினம்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!