Saturday, February 19, 2011

இமாம் ஷாஃபி பள்ளி ஆண்டு விழா

இமாம் ஷாபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 37 ம் ஆண்டு நிறைவு விழா வியாழக்கிழமை மாலை (17.02.2011) புதிய பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பெற்றோர்கள் மிகவும் திரளாக வந்திருந்தார்கள் பெண்கள் பகுதி நிரம்பி வழிந்தது. இமாம் ஷாஃபி பள்ளியின் பொருளாளர் ஜனாப் அஹமது இப்ராஹீம் அவர்கள் தலைமை ஏற்க, பள்ளியின் மேலாளர் பேராசிரியர் அப்துல் காதர் M.A. MPhil., Phd, அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். இமாம் ஷாஃபி பள்ளியின் முதல்வர் பேராசிரியர் பரகத் M.A. MPhilஅவர்களும் மற்றும் பள்ளியின் நிர்வாகிகளும், ஆசிரியர்களும் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சிகளை மிகச்சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.


தொடர்ந்து மாணவர்கள் பங்கேற்று நடத்திய பல்சுவை நிகழ்ச்சிகள், பரிசளிப்பு நடைபெற்றது, L.K.G. UKG, (குறிப்பாக) சிறு குழந்தைகளின் சூராஹ் மனனப்போட்டி, ஆங்கில டிராமா , ஹிந்தி பேச்சு என்று மிகவும் இனிமையாகவும் கண்கவர் நிகழ்ச்சியாக இருந்தது. மாஷா அல்லாஹ்.

குறிப்பாக அஸ்மாகுல் ஹுஷ்ணா (அல்லாஹ்வின் திருநாமங்கள்) போட்டியில் LKG இல் இருந்து 5ம் வகுப்பு வரை நடந்தது LKG, UKG வரை 50 சொல்லவேண்டும் என்று நிர்ணயித்து இருந்தார்கள் UKG மாணவி 99 திருநாமங்களையும் பிழையில்லாமல் கூறியது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது. போட்டிக்கு முன்பு இந்த குழந்தையின் தாய் சிறு குழந்தைக்கு 50 அதிகம் என்று பள்ளி நிர்வாகத்திடம் குறைக்கும்படி கூறினார்கள், ஆனால் அவர்களின் குழந்தையே அனைத்தையும் கூறி சிறப்பு பரிசும் பெற்றது அல்ஹம்துலிலாஹ்.

அதைவிட ஒரு சிறப்பு UKG மாணவன் யாசீன் சூரா முழுவதையும் மனனம் செய்து சாதனை படைத்து எல்லோரையும் மகிழ்ச்சியடைய வைத்தது என்றால் மிகையில்லை. மாஷா அல்லாஹ்.

மூன்று சூராஹ் (வாக்கியா, அர்ரஹ்மான், துகான்) மனனப்போட்டியில் மாணவிகள் 10 பேர் பரிசு பெற்றார்கள்.

தமது பிள்ளைகளின் கல்வி சாதனைகளின் கண்கவர் நிகழ்சிகளை காண லீவு போட்டாவது ஊருக்கு வாங்க(ப்பா) வெளிநாட்டில் வாழும் சகோதரர்களே. இதைவிட சந்தோசம் வேறு எதில் கிடைக்கப்போகிறது. உங்கள் அனைவரின் பார்வைக்காக புகைப்படங்கள்.



அன்மையில் அதிரையில் நடைப்பெற்ற கல்வி விழிப்புணர்வு மாநாட்டில் மார்க்கக் கல்வியின் அவசியத்தை வழியுறுத்தப்பட்டது. இன்று இமாம் ஷாஃபி ஆண்டு விழா நிகழ்ச்சிகளில் யாஸீன் சூரா, வாக்கியா சூரா, அர்ரஹ்மான் சூரா, துகான் சூரா, மற்ற சூராக்கள் மற்றும் அஸ்மாஹுல் ஹுஸ்னா மனன செய்யும் போட்டியில் மிக உற்சாகமாக இளம் சிறார்கள், சிறுமிகள் கலந்துக்கொண்டு வெற்றி பெற்று பரிசுகளும் வாங்கியுள்ளார்கள். இறைவனுக்கே எல்லா புகழும்.

வருடா வருடம் இது போன்று நிகழ்ச்சிகளில் நம் ஊர் பள்ளிகளில் சிறுவர் சிறுமியர் தங்களின் திறமையை கொண்டும் சூரா மனன போட்டிகளில் பரிசுகள் அள்ளிச்சென்றாலும். இந்த நிகழ்ச்சியை மிக முக்கியமானதாக கருதி இந்த செய்தியை பதிந்திருக்கிறோம்.

இந்த மாணவர்களின் வெற்றியை அங்கீகாரம் கொடுத்து ஊக்கப்படுத்துவதற்காகவும், மேலும் மற்ற இளம் மாணவர்களுக்கு ஆர்வமூட்டவும். இதைப் பார்த்து பெற்றோர்களும் தங்களின் பிள்ளைகளை வரும் வருடங்களில் ஆர்வத்துடன் கலந்துக்கொள்ள செய்து நிறைய பரிசுகள் பெறவேண்டும் என்பதற்காவும் இங்கு நாம் புகைப்படங்களுடன் செய்தியை பதிந்திருக்கிறோம்.

வாருங்கள் எல்லோரும் மனதார வாழ்த்துவோம் இந்த இளம் சாதனையாளர்களை. இவர்கள் மேலும் பல வெற்றிகள் பெற வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம்.

சூரா மனன போட்டியில் சாதனைபடைத்த மாணவ மாணவிகளை அதிரைநிருபர் குழு சார்பாகவும், நம் வாசகர்கள் எல்லோரின் சார்பாகவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்கிறோம்.

பெற்றவர்களுக்கு தன் பிள்ளையின் சாதனையை பார்த்து கிடைக்கும் சந்தோசத்துக்கு வேறு எந்த சந்தோசமும் ஈடாகாது.
நன்றி:அதிரைநிருபர்

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!