Sunday, February 20, 2011

அதிரையில் நடந்த மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம்

அல்லாஹ்வின் அளப்பெரும் கருணையால் 18.02.2011 வெள்ளிக்கிழமை மாலை தக்வா பள்ளி அருகே அதிரை இஸ்லாமிக் மிஷன் சார்பாக மாபெரும் மார்க்க விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்வில், அதிரை ஜூம்ஆவிற்காக வருகை தந்திருந்த மவ்லவி. மீரான் முஹைதீன் ஸலாஹி அவர்கள் கலந்து கொண்டு 'கலாச்சார சீரழிவுகள் - ஒர் ஆய்வு' என்ற தலைப்பில் உரை நிகழ்த்த, தொடர்ந்து பேசிய சகோதரர் கோவை அய்யூப் அவர்கள் 'மனிதனுக்குத் தேவை மறுமைச் சிந்தனை' என்ற தலைப்பின் கீழ் பேருரையாற்றினார்கள்.

குர்ஆன் ஹதீஸ் ஆதாரங்களுடன் பேருரைகள் நிகழ்த்தபட்டபோது பொதுமக்கள் அனைவரும் எத்தகைய வீண் அசைவுகளுமின்றி, நிகழ்ச்சியின் இறுதிவரை கலையாமல்,உரையோடு ஒன்றியிருந்தனர் மேலும் நடுத்தெரு மற்றும் கீழத்தெரு பகுதிகளில் பெண்கள் தங்களின் வீட்டுவாசல்களில் அமர்ந்தும் சொற்பொழிவுகளை செவிமடுத்தனர். ஆண்கள் மேடை முன்பு அமர்ந்தும், இருக்கைகள் போதாமல் சூழ நின்றவர்கள் போக ஏராளமான சகோதரர்கள் தக்வா பள்ளியினுள்ளும் தஞ்சமடைந்திருந்தனர்.

முன்னதாக, AIM பொருளாளர் சகோதரர் அப்துல் காதர் அவர்கள் வரவேற்புரையாற்ற, அதிரை அன்வர் BA அவர்கள் தலைமையுரையாற்றினார்கள் இறுதியாக சகோதரர்
அப்துல் ரஹ்மான் MBA நன்றி நவிழ துஆவுடன் இனிதே நிறைவடைந்தது.

கடந்த மூன்றாண்டுகளுக்கு முன் மீட்டெடுக்கப்பட்டு, தற்போது எத்தகைய அமைப்பிற்குள்ளும் அடகுவைக்கப்படாமல் குர்ஆன் ஹதீஸை மட்டுமே ஆதாரமாக ஏற்று செயல்பட்டு வரும் அதிரை இஸ்லாமிக் மிஷன் இயக்க பேதங்களை துடைத்து தூர எரிந்துவிட்டு இன்ஷா அல்லாஹ் இதுபோன்ற சிறந்த தாயிக்களை கொண்டு தொடர் பிரச்சாரங்களை தன் சக்திக்கேற்ப செய்திட உறுதியேற்கின்றது.

தகவல்
அதிரையிலிருந்து
M
. அப்துல் ரஹ்மான் (SP)

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!