Saturday, March 5, 2011

இலவசம் இனிவிஷம்


51: 56 .இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.
31:6 (இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்;சுகளை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
முஸ்லீம்களின் வாழ்வு மறுமைதான்! அதை சரி செய்வதற்;கு அதனை அடைவதற்;காகவே நாம் இவ்வுலகில் வாழ்கிறோம். நாம் வாழ்வில் எல்லா துறைகளுக்கும் அல்லாஹ்வின் கட்டளையும் நபி(ஸல்)அவர்களின் வாழ்க்கை வழிமுறையில் வாழ்ந்தால் நாம் செல்லக்கூடிய இடம் இன்ஷாஅல்லாஹ் சொர்க்கம்!
இன்று நமது தொலைக்காட்சியில் அது பாவம் என்று கருதுவதில்லை. தகவல் தொழில் நுட்பம்; என்று பெருமை பேசிய சமுதாயமாக மாறிவிட்டோம். இதனால் எவ்வளவு பெரிய நஷ்டம். டி. வி. மூலம் பாவங்கள் பன்மடங்காக பெருகிக்கொண்டுதான் இருக்கின்றன. அதற்க்கு பின்னால் வந்த இன்டர் நெட் பாதிப்புகளை விட, டி வி ஆதிக்கம் மிகப்பெரிய பாதிப்பு எல்லா வீடுகளுக்கும் கதவைத் தட்டி தட்டி கொடுக்கப்படுகிறது.
எங்கும் எதிலும் எப்பொழுதும்
கம்யூட்டர் மற்றும் இன்டர் நெட் பயன்பாடுகள் நிறைய இருக்கின்றன ஆனால் அதை மக்கள் அதிகமாக தீமைகளுக்குப் பயன்படுத்துகின்றனர் இன்டர் நெட் மூலம் இளைய தலைமுறைகள் சிந்தனைகள் சிதறடிக்கப்படுகிறது. ஆனால் தொலைக்காட்சியின் மூலம் ஒவ்வொரு வீட்டிலும் தவழும் குழந்தை முதல் தள்ளாடும் வயதுவரைக்கும் அனைவருடைய வாழ்க்கையும் தொலைக்காட்சி தொலைந்துவிட்டது பெண்களின் நிலைமை எப்படி இருக்கும்?
வீட்டில் மட்டுமல்ல நாம் அதை விட்டு விலகியிருந்தாலும் தொலைக்காட்சி துரத்திக் கொண்டே வருகிறது. பேருந்து நிலையம், மருத்துவ மனை, ரயில் நிலையம், பேருந்தில் நாம் பயணம் செய்ய முடியவில்லை,சிகிச்சை செய்யும் போதும், டீ ;கடையிலும் விட்டுவைக்கவில்லை!நாம் பெண்மக்களோடு பயணம் செய்ய முடியவில்லை, இன்று தொலைக்காட்சி இல்லாத வீடே இல்லை. எத்தனையோ வீட்டில் கழிவறை இல்லை ஆனால் அனைத்து வீட்டிலும் தொலைக்காட்சி இருக்கிறது. மருத்துவை மனையில் எதற்க்கு தொலைக்காட்சி? தொலைக்காட்சியின் மூலம் தான் சுகமா! பயணம் என்பது மரணத்தை தக்கவைத்து செல்வது. அந்த சமயத்திலும் தொலைக்காட்சி தேவையா?
இன்று எல்லா கருவிகளிலும் தொலைக்காட்சியை பொருத்துவிட்டார்கள் தொலைக்காட்சியை மக்கள் தேர்வு செய்வதில் மிக்க ஆர்வம் மொபைல் பேசுவதற்;கு அதிலும் தொலைக்காட்சியை தேர்வு செய்கிறார்கள் இது தேவையா? காலையில் எழுந்த உடனே காபிக்கு முதல் கையில் இருப்பது ரிமோர்ட். இந்த காட்சியைப் பார்த்த பிறகு தான் கழிவறைக்கு செல்வது, காபியை குடிப்பது இது பெண்களின் நிலை ஆண்கள் கடையில் டீ அருந்துவதற்;கு சென்றாலும் அந்த கடையில் இருப்பது தொலைக்காட்சி இது தேவையா? இன்று பெண்கள் வீட்டில் அதிகமா பார்பது தன்னுடைய கணவரை அல்ல! மற்ற கணவரை தான் இதனால் வீட்டில் நிம்மதி ஏற்படுமா? நிம்மதி ஏற்பட்டதா! சிந்தனையுள்ள சமுதாயமே! சிந்தியுங்கள
தொலைக்காட்சி பார்பதற்க்கு சுகமாக இருக்கும் ஆனால் அதன் பிறகு வரக்கூடியது பின்விளைவு நஷ்டம் தான்! தொலைக்காட்சி என்பது மனிதனின் வாழ்வில் மிகப்பெரிய நஷ்டம் இதில் எந்த மதமும் விதிவிலக்கல்ல! முஸ்லீம் சமுதாயம் முன்னேற்றம் அடையாமல் இருப்பதற்கு இதுவே முதல் காரணம்.ஏனெனில் நம் வீட்டில் சிறு குழந்தைகள் காலையில் எழுந்த உடனே எதற்கு செல்கிறது? நம் வீடு சினிமா தியேட்டரை விட மோசமாகிவிட்டது தியேட்டரில் 24 மணி நேரம் காட்சிகள் இல்லை ஆனால் இந்த தொலைக்காட்சியில் எந்த நேரமும் யாரும் பார்க்கலாம் சில காட்சிகள் சினிமா தியேட்டரில் பார்பதற்க்கு சிறு குழந்தைகளுக்கு பார்பதற்க்கு தடை! ஆனால் நம் வீட்டில் எல்லா காட்சிகளும் பார்க்கப்படுகிறது அல்லாஹ் பாதுகாப்பானாக ஆமீன்!! ஓவ்வொரு செயலுக்கும் ஒரு முடிவு உண்டு அதே போல் சினிமாவின் முடிவு விபச்சாரம்!
விபச்சாரத்தின் அருகில் கூட நெருங்காதீர்கள். திண்ணமாக! அது மானங்கெட்ட செயலாகவும் மிகத் தீய வழியாகவும் இருக்கிறது (திருக்குர்ஆன் 17:32)

தொலைக்காட்சியினால் தொலைந்த சீர்கேடுகள்
தொலைக்காட்சியில் வரும் நிகழ்சியை தனது வாழ்க்கையின் ஏற்பட்ட நிகழ்ச்சி என்று நினைத்துக் கொண்டு எத்தனையோ குடும்பம் தரம்கேட்ட நிலையில் வாழ்ந்து வருகிறார்கள் இதனால் அவர்களுடைய நடை, உடை, பாவனை,அனைத்துமே மாறிவிடுகிறது, தொலைக்காட்சியில் வரும் ஆடம்பர வாழ்க்கை தனது வீட்டில் வரவேண்டும் என்ற எண்ணத்தில் எத்தனை பெண்களின்யில் நிலை தடுமாற்றம் ஏற்பட்டுள்ளது!கணவண் மனைவி விஷயம் 4 சுவர்க்கு மத்தியில் இருக்க வேண்டிய விடயம் 1குடும்;பமே பார்ப்பது மட்டுமல்ல அதை ரசித்து ருசித்து பார்கிறார்கள் இதனால் ஒழுக்க கேடுகள் வரும்.இதனை குழந்தைகள் பார்பதால் உள்;ளம் சீர் கெட்ட நிலையில் தான் வளரும். பிறகு வருத்தப்பட்டு என்ன செய்வது!
தொலைக்காட்சி வரும் நடிகைகளின் உடை!
இன்று அறிமுகம் செய்துவிட்டார் இதனால் நம்முடைய குழந்தைகளும் அதே ஆடையை அனிய முயற்சி செய்து வருகிறோம் இதை நாம் பெருமையாக கூறுகிறோம் இது இன்னாருடைய உடை இது இந்த படத்தில் வந்தவை என்றும் பெருமையாக கூறுகிறோம்.ஆடை என்பது அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய பொக்கிஷம் அந்த ஆடையை நாம் முறையாக அணியவேண்டும் ஆடை என்றால் மறைக்க வேண்டிய விசயங்கயை மறைப்பது இது ஆடை ஆனால் இன்று தொலைக்காட்சியில் அரைநிரை ஆடையை அறிமுகம் செய்து அந்த ஆடையை பார்தாலே பாவத்தின் ஈர்ப்பு விளங்குகிறது
7:26 .ஆதமுடைய மக்களே! மெய்யாகவே, நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும், ஆடையை அளித்துள்ளோம். ஆயினும் தக்வா (பயபக்தி) எனும் ஆடையே (அதைவிட) மேலானது. இது அல்லாஹ்வுடைய (அருளின்) அடையாளங்களில் (ஒன்றாக) உள்ளதாகும் - (இதைக் கொண்டு) நல்லுணர்வு பெறுவார்களாக.
தொலைக்காட்சி பார்பதால் வெட்க்கம்!
ஒரு பெண்ணுக்கு மிகவும் முக்கியமானவை வெட்க்கம் பெண்களுக்கு முடி எவ்வளவு முக்கியமோ அந்த அளவு வெட்க்கம் முக்கியம் ஆனால் தொலைக்காட்சியில் பார்பது வெட்கத்தை இல்லாமல் ஆக்கிவிடுகிறது ஒரு அன்னிய ஆன்களுடன் சாதாரணமான முறையில் பேச ஆரம்பித்து விடுகிறாள் இது போன்ற காட்சிகள் தினசரி தொலைக்காட்சியில் காட்டப்படுகிறது இதை பார்த்துவிட்டு வாழ்க்கையில் அன்னிய ஆன்களுடன் சரளமாக பேசுகிறாள் பிறகு ஆன்களுடன் தொடர்பு ஒரு பெண்ணுடைய குரல் எவ்வளவு முக்கியம் என்பது அல்லாஹ் குர்ஆனில் தெளிவாக கூறுகிறான்
33:32 .நபியின் மனைவிகளே! நீங்கள் பெண்களில் மற்றப் பெண்களைப் போலல்ல நீங்கள் இறையச்சத்தோடு இருக்க விரும்பினால், (அந்நியருடன் நடத்தும்) பேச்சில் நளினம் காட்டாதீர்கள். ஏனெனில் எவன் உள்ளத்தில் நோய் (தவறான நோக்கம்) இருக்கின்றதோ, அ(த்தகைய)வன் ஆசை கொள்வான்; இன்னும் நீங்கள் நல்ல பேச்சே பேசங்கள்.
இது நபியுடைய மனைவிமார்களுக்கே இந்த சட்டம் என்றால் நம்முடைய பெண்களுக்கு எப்படி சட்டம் இருக்க வேண்டும்!
பெற்றோர்களை தொலைத்து விட்ட தொலைக்காட்சி
தொலைக்காட்சிகளில் அதிகமாக காட்டப்படக்கூடிய காட்சி காதல் திருமணம் அதை எப்படி ஆரம்பிக்க வேண்டும் அதை எப்படி வெட்ட வேண்டும் இது சரளமாக வருகின்ற காட்சி.அதிலும் பெற்றொர்களை எப்படி அவமதிக்க வேண்டும் யாருக்கு முதலிடம் கொடுக்க வேண்டும் காதல் திருமணத்திற்க்கு ஏற்றுக் கொள்ளாத தாய் தந்தையை எப்படி கொலை செய்வது! திருமணத்தை செய்துவிட்ட பிறகு அவர்களுடைய நிலமை! பெற்றோர்களின் சாப வார்தைகள் பெற்றவர் எத்தனையோ நபர்கள். இதற்க்கு யார் மூலக்காரணம் தொலைக்காட்சி! இன்று எத்தனையோ பெற்றோர்கள் முதியோர் இல்லத்தில் வாழ்கிறார்கள் மாமியார் மருமகள் அண்ணண் தம்பி அப்பா மகன் சன்டை தகராறு எப்படி வரும்! எத்தனை தொலைக்காட்சியில் பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்று காட்டப்பட்டது? தொலைக்காட்சியினால் தவறுக்கு பெற்றோர்களிடம் மன்னிப்பு கேட்ட மாமனிதர்கள் எத்தனை நபர்கள் சிந்தியுங்கள்!
17:23 .அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும் உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதமை அடைந்து விட்டால், அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் - அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் - இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசவீராக!
இசையும் - இஸ்லாம்
31:6 .(இவர்கள் தவிர) மனிதர்களில் சிலர் இருக்கின்றார்கள் - அவர்கள் அறிவில்லாமல் வீணான பேச்சக்களை விலைக்கு வாங்கி, (அவற்றால் மக்களை) அல்லாஹ்வின் பாதையிலிருந்து வழி கெடுக்கவும், அல்லாஹ்வின் பாதையைப் பரிகாசமாக்கிக் கொள்ளவும் (முயல்கிறார்கள்) இத்தகையோருக்கு இழிவுதரும் வேதனையுண்டு.
இசைக் கருவிகளை உடைத் தெறிவதற்காவே நான் அனுப்பப்பட்டுள்ளேன் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
நபி(ஸல்)அவர்கள் இசையும் இசைகேட்பதையும் புறம் பேசுவதும் அதைக் கேட்பதையும் கோள் மூட்டுவதும் கோள் மூட்டுவதை கேட்பதையும் தடுத்துள்ளார்கள்
பாட்டுக் கச்சேரியில் பாட்டைக் கேட்க அமருபவரின் இரு காதுகளில் மறுமையில் அல்லாஹ் உருக்கை காய்ச்சி ஊற்றுவான் என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
யார் இவ்வுலகில் பாட்டு சப்தத்தை கேட்கிகிறாறோ அவருக்கு சுவர்கத்தில் ரூஹானீய்யீன் சுவனத்து காரீகள் சப்தத்தை கேட்க அனுமதிக்கப்பட மாட்டாது என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
இசை என்பது மாற்று மதத்தின் வணக்கங்களில் மிகவும் இருக்கூடியது ஒன்று மனிதனின் உணர்ச்சியை தூண்டக்கூடியது இசை இன்று தொலைக்காட்சியில் இசை இல்லாத காட்சிகள் இல்லை தொழுகையின் சமயத்திலும் பயன்படுத்தப்படுகிறது நாம் சுவர்கத்தின் ஓசையை கேட்கவேண்டும்மென்றால் இங்குள்ள ஓசையை தூக்கி ஏறிவோம் இன்று மொபைல் இசை கேட்க்கப்படுகிறது இஸ்லாமிய பாடல்கள் என்ற பெயரிலும் கேட்க்கப்படுகிறது தவறு என்றால் அனைத்திலும் தவறு தான்!
தொலைக்காட்சியினால் தொலைந்த நேரங்கள்
32:12 .மேலும், இக்குற்றவாளிகள் தம் இறைவன் முன் தலைகுனிந்தவர்களாய், ''எங்கள் இறைவா! நாங்கள் (இப்பொழுது) பார்த்துக் கொண்டோம், கேட்டும் கொண்டோம் - ஆகவே, நீ (உலகுக்கு) எங்களைத் திருப்பி அனுப்பிவை நாங்கள் நற்கருமங்களையே செய்வோம். நிச்சயமாய் நாங்கள் (நம்பிக்கையில்) உறுதியுள்ளவர்களாக ஆகிவிட்டோம்'' என்று சொல்லும்போது (நபியே!) நீர் பார்ப்பீராயின் (அவர்களுடைய நிலையை நீர் அறிந்து கொள்வீர்).
35:37 .இன்னும் அ(ந்நரகத்)தில் அவர்கள்; ''எங்கள் இறைவா! நீ எங்களை (இதை விட்டு) வெளியேற்றுவாயாக! நாங்கள் வழக்கமாகச் செய்து கொண்டிருந்த (தீய)வற்றை விட்டும் ஸாலிஹான (நல்ல) அமல்களை செய்வோம்'' என்று கூறிக் கதறுவார்கள். (அதற்கு அல்லாஹ்) ''சிந்தித்துப் பார்க்கக் கூடியவன் அதில் சிந்திக்கும் பொருட்டு, நாம் உங்களுக்கு நீண்ட ஆயுளைக் கொடுக்கவில்லையா? உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவரும் வந்திருந்தார்; ஆகவே நீங்கள் (செய்த அநியாயத்தின் பயனைச்) சுவையுங்கள்; ஏனென்றால் அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவருமில்லை'' (என்று கூறுவான்).
இஸ்லாம் நேரத்தை முக்கியத்தின் நன்கு உணர்த்தும் மார்க்கமாகும.; அல்லாஹ் பல இடங்களில் நேரத்தை பற்றி கூறுகிறான். வாழ்க்கை என்பது அல்லாஹ் கொடுத்த நிஃமத் அதை பற்றி மறுமையில்; கேள்வி கேட்க்கப்படும் 4 கேள்விக்கு பதில் சொல்லாமல் தனது இடத்தை விட்டும் நகர முடியாது! என்று நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்
1.தனது வாழ்க்கையை எவ்வாறு கழித்தாய்? 2.தனது வாலிபத்தை எவ்வாறு கழித்தாய் 3.தனது செல்வத்தை எவ்வாறு சம்பாதித்தாய்? எவ்வாறு செலவு செய்தாய்? 4.தான் பெற்ற கல்வின் படி எவ்வாறு அமல் செய்தாய்?
வாழ்க்கை என்பது மனிதன் காலத்தோடு நடத்தும் போராட்டமாகும் அதை விரயம் செய்வது மனிதனும் இம்மை மறுமையிலும் வாழ்வை பாழ்படுத்திவிடுவதாகும் .ஒவ்வொரு முஸ்லிமும் தனது காலத்தையும் நேரத்தையும் மிக கவனமாக பயன்படுத்த வேண்டும் தொலைக்காட்சியினால் நேரம் எந்த வழியில் செலவு செய்யப்படுகிறது இந்த நேரத்தை கொன்டு மறுமைக்கு என்ன தயார் செய்தோம் சிந்தியுங்கள்!
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் அறிவுடையவர் நேரத்தை நான்கு பகுதிகளாக வகுத்துக் கொள்வான் 1.இபாதாத் 2.சுய விசாரனை 3.அல்லாஹ்வின் படைப்புகளைப் பற்றி சிந்திப்பான் 4.தனது வாழ்க்கை தேவைகளை நிறைவேற்றிக் கொள்வான்
இந்த தொலைக்காட்சி நேரம் எதில் அடங்கும் ! நேரம் சொல்லாமல் போய்கொன்டியிருக்கிறது அதனை துரத்திக் கொன்டுதான் நாம் பிடிக்க வேண்டும் நேரம் போதாது என்று சொல்லுவதறக்கு பதிலாக அந்த நேரத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொன்டால் இம்மையிலும் மறுமையிலும் பலன் தரும்.
தொலைக்காட்சியில் 24 மணி நேரமும் காட்டப்படுகிறது அதை பார்த்து அந்த 24 மனி நேரத்தை என்ன சாதனை செய்தோம்! ஒரு மனிதன் 24 மணி நேரத்தில் அல்லாஹ்வுக்கு கொடுத்த நேரம் எவ்வளவு? பொழுது போக்கு எவ்வளவு நேரம்! முஸ்லீம்களுக்கு நேரத்தின் அட்டவணை இஸ்லாம் முறைப்படுத்தி உள்ளது அதை எப்படி பயன்படுதினால் சுவர்கத்தின் உயர்ந்த பதவிகள் அடையாளாம்! நேரத்தை தவறாக பயண்படுத்தினால் அதன் நஷ்டதை பற்றி அல்லாஹ்விடம் மனிதன் எப்படி முறையிடுவான்!
காலமும் நேரமும் விலைமதிப்பற்றது 1.இழந்த சொத்து சுகங்களை மீட்க முடியும் 2.இழந்த உடல் நலத்தையும் மீண்டும் பெற முடியும் 3.இழந்த பட்டம் பதவி அடைய முடியும் 4.இழந்த காலத்தையும் நேரத்தையும் ஒரு போதும் மீட்கவே முடியாது
தொலைக்காட்சியா! தொலைக்காட்சியா!
35:6.நிச்சயமாக ஷைத்தான் உங்களுக்குப் பகைவனாக இருக்கின்றான்; ஆகவே நீங்களும் அவனைப் பகைவனாகவே எடுத்துக் கொள்ளுங்கள்; அவன் (தன்னைப் பின்பற்றும்) தன் கூட்டத்தாரை அழைப்பதெல்லாம் அவர்கள் கொழுந்து விட்டெரியும் (நரக) நெருப்புக்கு உரியவர்களாய் இருப்பதற்காவே தான்.
36:65.அந்த நாளில் நாம் அவர்களின் வாய்களின் மீது முத்திரையிட்டு விடுவோம்; அன்றியும் அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தது பற்றி அவர்களுடைய கைகள் நம்மிடம் பேசம்; அவர்களுடைய கால்களும் சாட்சி சொல்லும்.
1.குழந்தைகள் பள்ளிகூடங்களில் செலவழிக்கும் நேரத்தை விட தொலைக்காட்சியில் அதிகமாக நேரங்கள் செலவழிக்கப்படுகிறது
2.சராசரியாக ஒரு வாரத்திற்க்கு 20 மணி நேரம் தொலைக்காட்சியில் வழிக்கப்படுகிறது இது மற்ற எல்லா செயல்களை விட அதிகமாகும் (தூக்கத்தின் நேரத்தை தவிர)
3.சராசரியாக 70 வயது நிரம்பிய மனிதர் 7 முதல் 10 ஆண்டுகள் நேரத்தை தொலைக்காட்சியில் செலவு செய்கிறார்
4.ஒரு ஆண்டுகளில் 1000 முதல் 2000 வரையிலான போதை சம்பந்தப்பட்ட விளம்பரங்கள் குழந்தைகள் தொலைக்காட்சியில் பார்கிறார்கள்
5. தொலைக்காட்சினால் மூளை வளர்ச்சி பாதிப்படையச் செய்கிறது
6. தொலைக்காட்சியில் குழந்தைகள் என்ற காட்சிகள் விளம்பரம் என்ற கண்ணோட்டதில் தயார் செய்யப்படுகிறது
7. தொலைக்காட்சியைப் பாhப்;பதால் மற்ற செயல்களுக்கு நேரம் இல்லை விளையாடுவது, வீட்டுப்பாடம் படிப்பது, குர்ஆன் ஓதுவது பெற்றோர்களுடன் அன்புடன் நடப்பதற்;கு இடம் இல்லை
8.சனி ஞாயிறுகளில் 20 முதல் 25 வரை வன் முறை காட்சிகள் காண்பிக்கப்படுகிறது
9. 8000 கொலைகளை பள்ளி படிப்பை முடிகடகும் முன்பு குழந்தைகள் பார்க்கின்றனர்
10. 10.0000 கற்பழிப்புகள் அடிதடி இதை பாhப்;பதால் உள்ளம் கெட்டுவிடுகிறது
11.பள்ளியின் சேரும் முன்பு சுமார் 3 வயது கீழ் குழந்தைகள் இந்த காட்சிகள் பார்பதால் உள்ளம் பாதிப்படைகிறது
12.நல்லவர்கள் கெட்டவர்களை அடிப்பதும் கெட்டவர்கள் நல்லவர்களை அடிப்பதும் காட்சிகள் பார்பதால் வீட்டில் வளரும் குழந்தைகள் பெற்றோர்களை எதிர்க்க ஆரம்பிக்கப்படுகிறது!
13. தொலைக்காட்சியில் பெண்களை கீழ்தரமாகவும் கொச்சைப்படுத்தியும் டி வி தொடர்களில் காட்டப்படுகிறது
14.பெண்களில் உறுப்புள் கவர்ச்சியாக காட்டப்படுகிறது
15.தொலைக்காட்சியில் பார்பதால் வீட்டில் தேவையில்லா பொருட்கள் வாங்கப்படுகிறது
யார் மீது குற்றம்
பெற்றோர் குழந்தை வளர்பதில் கவனம் இல்லாமல் அசட்டையாக இருந்தால் அக்குழந்தை சோதனையாக கவலையாக இருக்கும் பிறகு வருத்தப்பட்ட வேலையில்லை!
66:6.முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும்; அதில் கடுமையான பலசாலிகளான மலக்குகள் (காவல்) இருக்கின்றனர், அல்லாஹ் அவர்களை ஏவி எதிலும் அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள், தாங்கள் ஏவப்பட்டபடியே அவர்கள் செய்து வருவார்கள்.
நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள் நிச்சயமாக ஒருவன் தனது குழந்தைகளுக்கு நல்லொழுக்கத்தைப் போதிப்பது ஒரு மரக்கால் தானியத்தை தர்மம் செய்வதைவிட நன்மையாகும்
தொலைக்காட்சியினால் நல்லொக்கம் கற்றுக் கொடுக்கப்படுகிறதா? நல்லொழுக்கத்திற்க்கு மாற்றமாக செயல்படுகிறதா? இதற்க்கு யார் காரணம் பெற்றோர்களே! ஒவ்வொரு குழந்தையும் இஸ்லாத்தின் முறைப்படி தான் பிறக்கின்றது அதை வழி நடத்துவது அவர்களுடைய பெற்றோர்கள் ! குழந்தை பிறந்த உடனே நல்ல பெயர் சூட்டப்படுகிறது ஆனால் மற்ற செயல்கள் அனைத்தும் மார்கத்திற்க்கு மாற்றமாக செய்து விட்ட பிறகு வருத்தப்பட்டு என்ன பலன்? குழந்தையை வயிற்றில் இருக்கும் போதே தாய் நல்ல செயல்கள் செய்தால் அந்த குழந்தை நல்லவர்களாக வளரும் ஒரு பெற்றோர்களின் செயல் கார்பன் காபியை போன்றது நாம் எதை எழுதுகிறோமோ அதுதான் வரும் அ என்று எழுதினால் அ வரும் நம் குழந்தைகளுக்கு உடை கல்வி மற்றும் இதர வசதிகள் ஏற்பாடு செய்வது மட்டுமல்ல நம் பொறுப்பு அவர்களுக்கு உரிய மார்க்கத்தின் விளக்கத்தை கொடுப்பது மிக மிக முக்கியம்!
அன்றைய நாள் எப்படி
இன்று இந்த தொலைக்காட்சி வாங்குவதற்கு யாருடைய சிபாரி ஏற்றுக் கொள்ளவில்லை அவருடைய குடும்ப அடைடையை பார்த்து சாம் தொலைக்கர்சியை வாங்குகிறோரும் அதை போன்று அன்றை நாளில் இப்படி ஒரு சூழ்நிலை நிச்சயம் நடைபெறும் அதனால் உஷார்! உஷார்!
69:18-.(மானிடர்களே!) அந்நாளில் நீங்கள் (இறைவன் முன்) கொண்டுபோகப்படுவீர்கள், மறைவான உங்களுடைய எந்த விஷயமும் அவனுக்கு மறைந்து விடாது. 69.19.ஆகவே, எவருடைய பட்டோலை அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுமோ, அவர் (மகிழ்வுடன்), ''இதோ! என் பட்டோலையைப் படியுங்கள்'' எனக் கூறுவார். 69:20.''நிச்சயமாக, நாம் உன்னுடைய கேள்வி கணக்கை, திட்டமாக சந்திப்பேன் என்று எண்ணியே இருந்தேன்.'' 69:21.ஆகவே, அவர் திருப்தியான சக வாழ்கiயில் - 69:22.உயர்ந்த சுவர்க்கத்தில் இருப்பார். 69:23.அதன் கனி(வகை)கள் (கைக்கு எட்டியதாக) சமீபத்திருக்கும். 69:24. ''சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால், நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்'' (என அவர்களுக்குக் கூறப்படும்). 69:25 .ஆனால் எவனுடைய பட்டோலை அவனுடைய இடக்கையில் கொடுக்கப்படுமோ அவன் கூறுவான்; ''என்னுடைய பட்டோலை எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டுமே! 69:26 .''அன்றியும், என் கேள்வி கணக்கு என்ன என்பதை நான் அறியவில்லையே- 69:27 .''(நான் இறந்த போதே) இது முற்றிலும் முடிந்திருக்கக் கூடாதா? 69:28 .''என் செல்வம் எனக்குப் பயன்படவில்லையே! 69:29.''என் செல்வாக்கும் அதிகாரமும் என்னை விட்டு அழிந்து விட்டதே!'' (என்று அரற்றுவான்). 69:30.''(அப்போது) அவனைப் பிடித்து, பிறகு அவனுக்கு அரிகண்டமும் (விலங்கும்) மாட்டுங்கள்.'' 69:31 .''பின், அவனை நரகத்தில் தள்ளுங்கள். 69:32 .''பின்னர், எழுபது முழ நீளமுள்ள சங்கிலியால் அவனைக் கட்டுங்கள்'' (என்று உத்தரவிடப்படும்).
21:47இன்னும், கியாம நாளில் மிகத் துல்லியமான தராசகளையே நாம் வைப்போம். எனவே எந்த ஓர் ஆத்மாவும் ஒரு சிறிதும் அநியாயம் செய்யப்படமாட்டாது; மேலும் (நன்மை, தீமையில்) ஒரு கடுகு அளவு எடையிருப்பினும், அதனையும் நாம் (கணக்கில்) கொண்டு வருவோம். அவ்வாறே கணக்கெ

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்குப் பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை,தனிநபர் தாக்குதல்,அநாகரிகப் பின்னூட்டங்கள் அனுமதிக்கப்படா. எழுத்திலும் அல்லாஹ்வுக்கு அஞ்சிக் கொள்வோம்!